சிறுநீர் பாதை நோய் தொற்று - Urinary Tract Infection (UTI) in Tamil

Dr. Rajalakshmi VK (AIIMS)MBBS

February 06, 2019

March 06, 2020

சிறுநீர் பாதை நோய் தொற்று
சிறுநீர் பாதை நோய் தொற்று

சுருக்கம்

சிறுநீர் பாதை நோய் தொற்றுக்கள் (யு.டி.ஐக்கள்) என்பவை, நமது உடலின் சிறுநீரக அமைப்பைப் பாதிக்கக் கூடிய நோய் தொற்றுகளின் அலைவரிசையை குறிக்கப் பயன்படுத்தப்படும் ஒரு பொதுவான சொல்லாகும். இவை, சிறுநீரகங்களில் இருந்து சிறுநீர் குழாய் (சிறுநீர் பையிலிருந்து சிறுநீரை வெளிப்புறம் காலி செய்யும் ஒரு குழாய்) வரை, சிறுநீர் பாதையின் எந்தப் பகுதியுடனும் தொடர்புடையதாய் இருக்கக் கூடும். சிறுநீர் பை, வழக்கமாக, சிறுநீரகங்கள் மற்றும் சிறுநீர் குழாயைத் தொடர்ந்து, சிறுநீர் பாதை நோய் தொற்று காணப்படும் ஒரு இடமாகும். சிறுநீரகங்களில் இருந்து சிறுநீர் பைக்கு சிறுநீர் பாய்ந்து செல்கிற சிறுநீரக குழாய்கள் எனப்படும் குழாய்கள், அரிதாகவே நோய் தொற்றுக்கு உள்ளாகின்றன. சிறுநீர் பாதை நோய் தொற்றுக்கள், பெண்கள் குறைந்த நீளமுள்ள சிறுநீரக குழாய்களைக் கொண்டிருப்பதால், வழக்கமாக ஆண்களை விட பெண்களிடமே அதிகம் காணப்படுகிறது. குழந்தைகளுக்கு, சிறுநீர் பாதை நோய் தொற்று, சில குறிப்பிட்ட குறைபாடுகளால் (வெசிகொரடோரால் குறைபாடு போன்ற அமைப்பு ரீதியான குறைபாடுகள்)அல்லது நரம்பு மண்டல பிரச்சனைகள் (மூளை நீர் கோர்வை, தண்டுவட பிதுக்கம்) மற்றும் பாலுறுப்பு பகுதிகளை, குறிப்பாகப் பெண்கள், தவறான முறையில் சுத்தம் செய்தல் போன்றவற்றால் ஏற்படுகிறது. ஆண்கள், வழக்கமாக ப்ரோஸ்டேட் சுரப்பியில் ஏற்படும் ஒரு நோய் தொற்றால் மற்றும் ஆண் இனப்பெருக்க அமைப்பின் பல்வேறு பகுதிகளில் ஏற்படும் நோய் தொற்றுக்களால் (விரை வீக்கம் மற்றும் விரை அழற்சி போன்றவை) சிறுநீர் பாதை நோய் தொற்றுக்கு ஆளாகிறார்கள்.

நீண்ட காலத்திற்கு ஒரு சிறுநீர் வடிகுழாயை, சிறுநீர் பையில் சொருகி இருக்கும் நபர்களுக்கு, போதுமான அளவு தண்ணீர் குடிக்காதவர்களுக்கு, படுத்த படுக்கையாக, நாள்பட்ட நோய்வாய்ப்பட்டவர்களுக்கு, நீரிழிவு உள்ளவர்களுக்கு, அதிக அளவு பாலியல் செயல்பாடுகளில் ஈடுபடுபவர்களுக்கு மற்றும் கர்ப்பமாக இருக்கும் பெண்களுக்கு, சிறுநீர் பாதை நோய் தொற்று ஏற்படும் அபாயம் அதிகளவில் உள்ளது. சிறுநீர் பாதை நோய் தொற்றின் அறிகுறிகளில் அடங்கியவை, சிறுநீர் கழித்தலின் பொழுது ஒரு எரிச்சல் உணர்வு, குளிரோடு கூடிய காய்ச்சல், முதுகு மற்றும் அடி வயிற்றில் வலி, அதிகரித்த அல்லது திடீரென்று சிறுநீர் கழிக்க வேண்டுமென்ற உந்துதல் ஆகியனவாகும். மருத்துவர்கள், சிறுநீர் பாதை நோய் தொற்றை, நோய் கண்டறிதலை உறுதிப்படுத்த தேவையான, சிறுநீர் ஆய்வுகள் மற்றும் இமேஜிங் சோதனைகளோடு சேர்த்து மருத்துவ அறிகுறிகளையும் கொண்டு, சிறுநீர் பாதை நோய் தொற்றைக் கண்டறிகிறார்கள். சிறுநீர் பரிசோதனைக்குப் பிறகு, மிதமான நோய் தொற்றுக்கள் கண்டறியப்பட்டால், அறிகுறிகளில் இருந்து விடுபட, ஒரு குறிப்பிட்ட அளவு நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகள் மற்றும் மற்ற மருந்துகளைக் கொண்டு சிகிச்சையளிக்கப்படுகிறது. கடுமையான நோய் தொற்றுக்களுக்கு, மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டிய தேவை ஏற்படலாம். அது போன்ற நோய் தொற்றுக்களுக்கு, நரம்பு வழி சொட்டும் நீர் (ஒரு சொட்டும் நீர் நரம்புகளில் ஒன்றில் ஊசி மூலம் சொருகப்பட்டு, மருந்துகளை ஒரு குறிப்பிட்ட கால அளவில் இரத்தத்தில் விடுவித்தல்) மூலமாக நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்து ஊசிகள் கொடுக்கப்படுகின்றன. அரிதாக, சிறுநீர் பாதை நோய் தொற்றின் காரணமாக இருக்கக் கூடிய, அமைப்பு ரீதியான குறைபாடை சரி செய்ய, ஒரு அறுவை சிகிச்சை தேவைப்படலாம். மருத்துவ சிகிச்சைகளோடு சேர்ந்து, போதுமான அளவு தண்ணீர் குடிப்பது, சுய-சுகாதாரத்தைப் பராமரிப்பது போன்ற சுய-கவனிப்புகளும், சிறுநீர் பாதை நோய் தொற்றுக்களில் இருந்து விரைவில் குணமடைய உதவுகின்றன.

சிறுநீர் பாதை நோய் தொற்று அறிகுறிகள் என்ன - Symptoms of UTI in Tamil

நோய் தொற்றை-உருவாக்கக் கூடிய நுண்ணுயிரி, சிறுநீர் குழாய் வழியாக சிறுநீரக அமைப்பிற்குள் நுழைந்து, சிறுநீர் பாதையின் உட்புற தோலைப் பாதிக்கிறது. மேலும், இருக்குமிடத்தைப் பொறுத்து (சிறுநீர் பை, சிறுநீர் குழாய், சிறுநீரகங்கள்) அது நுண்ணுயிர் வளர்ச்சிக்கும், பெருக்கத்துக்கும் எளிதில் பாதிக்கப்படக் கூடியதாக இருக்கிறது. நுண்ணுயிரின் கட்டுப்பாடில்லா வளர்ச்சி, அழற்சி மற்றும் சிவந்து போதலோடு, இவை போன்ற மற்ற அறிகுறிகளையும் ஏற்படுத்துகிறது:

 • சிறுநீர் கழித்தலின் பொழுது, சிறுநீர் பையில் எரிச்சல் காரணமாக, எரிச்சல் உணர்வு அல்லது வலி. (மேலும் படிக்க - வலிமிகுந்த சிறுநீர் கழித்தல் சிகிச்சை)
 • சிறுநீர் பையில் அழற்சி காரணமாக, சிறுநீர் கழிக்கும் பொழுது, எரிச்சல் உணர்வுடன் கூடவே அடிவயிற்றில் வலியும் இணைந்து கொள்கிறது. (மேலும் படிக்க - வயிற்று வலி காரணங்கள் மற்றும் சிகிச்சை)
 • கடுமையான சிறுநீரக நோய் தொற்றுக்களில், இடுப்பு பக்கவாட்டில் அல்லது முதுகில் வலி ஏற்படுகிறது.
 • சிறுநீர் பை காலியாக இருக்கும் பொழுது அல்லது சிறுநீர் கழித்த பிறகு, உடனடியாக சிறுநீர் கழிக்க வேண்டுமென்ற உந்துதல்.
 • அவ்வப்போது, அந்த நபரால் சிறுநீரை அடக்க முடியாமல் போகலாம்.
 • அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டுமென்ற எண்ணம் அல்லது உந்துதல்.
 • சிறுநீரில் மோசமான வாடை.
 • சிறுநீரின் நிறம் இளஞ்சிவப்பாக ( இரத்தக் கறையுடன்), அடர் மஞ்சளாக மாறுதல், வெள்ளை துகள்கள் தோன்றுவதால் மங்கலான சிறுநீர்.
 • உயர்-தர நோய் தொற்றுக்கள் மற்றும் சிறுநீரக நோய் தொற்றுக்களில், குளிரோடு கூடிய அதிக காய்ச்சல் வழக்கமானது.
 • உடல் முழுவதுமான பலவீனம் மற்றும் சோர்வு.
 • கடுமையான நோய் தோற்றோடு, குமட்டல் மற்றும் வாந்தியும் தோன்றலாம்.
 • சிலநேரங்களில், கடுமையான பிரச்சினைகளில், சிறுநீரில் இரத்தம் காணப்படக் கூடும்.

சிறுவர்களுக்கு வரும் சிறுநீரக பாதை நோய் தொற்று இவற்றோடு தோன்றுகிறது:

 • குளிரோடு கூடிய காய்ச்சல்.
 • சிறுநீரில் ஒரு மங்கலான அல்லது பனி படர்ந்த தோற்றம்.
 • சிறுநீரில் மோசமான வாடை.
 • பசியின்மை.
 • சில குழந்தைகளுக்கு வாந்தியும் தோன்றலாம்.
 • வேண்டுமென்றே சிறுநீரை, சிறுநீர் பையில் அடக்குவது, அல்லது, வலி அல்லது எரிச்சல் உணர்வு காரணமாக சிறுநீர் கழிக்கும் பொழுது தீவிரமாக அழுவது.
 • சிறுநீர் பாதை நோய் தோற்று உள்ள குழந்தைகள், அடிக்கடி தங்கள் உடைகளை சிறுநீரால் நனைக்கக் கூடும்.

சிறுநீர் பாதை நோய் தொற்று சிகிச்சை - Treatment of UTI in Tamil

மருந்துகள்

சிறுநீர் பாதை நோய் தொற்றுகளுக்கு சிகிச்சையளிக்க மற்றும் நோய் தொற்று சிறுநீரகங்களுக்குப் பரவாமல் தடுக்க மருந்துகள் பயன்படுத்தப்படுகின்றன. மருந்துகள், சிறுநீர் பாதை நோய் தொற்றின் அறிகுறிகளில் இருந்து விடுபடவும் பயன்படுத்தப்படுகின்றன. சிக்கல் அதிகமில்லாத சிறுநீர் பாதை நோய் தொற்றுக்கள், வழக்கமாக, நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகளை எடுத்தவுடன் சரியாகி விடுகின்றன.

 • சிக்கல் இல்லாத சிறுநீர் பாதை நோய் தொற்றுகளுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படும் நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகளில், ட்ரைம்த்தோபிரிம்-சல்ஃபமெத்தோக்ஸசோல் முதல் தேர்வாக இருக்கிறது.
 • நிட்ரோஃபுரன்டாய்ன், நுண்ணுயிரைக் கொல்லும் ஒரு நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்தாகும். இது, ஈ.கோலி, ஸ்டாஃபிலோகோக்கஸ் அவுரஸ், க்ளெப்சியெலா மற்றும் பிற நுண்ணயிர்களால் ஏற்படும் சிறுநீர் பாதை நோய் தொற்றுக்களில் சுட்டிக் காட்டப்படுகிறது. இது பொதுவாக, சிறுநீர் பை நோய் தொற்றில் (சிறுநீர் பை அழற்சி) பயன்படுத்தப்படுகிறது.
 • சிக்கலில்லாத சிறுநீர் பாதை நோய் தொற்றுக்கான சிகிச்சையில் பயன்படுத்தப்படும் மற்ற நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகளில் அடங்கியவை, ஃபோஸ்போமைசிலின், ட்ரைம்த்தோபிரிம், ஃபுலவ்ரோகுயின்னோலோனஸ் ஆகியனவாகும்.
 • ஆஃப்லோக்ஸாசின் மற்றும் லெவோஃபுளோக்ஸாசின் ஆகியவை சிக்கலான மற்றும் சிக்கலில்லாத சிறுநீர் பாதை நோய் தொற்றுக்கள், இரண்டுக்கும் சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படுகின்றன.
 • அமாக்ஸிலின்  மற்றும் ஆம்பிஸிலின் ஆகியவை, சிக்கலான சிறுநீர் பாதை நோய் தொற்றுக்களுக்கு சிக்கிச்சையளிக்க பயன்படுத்தப்படுகின்றன.
 • செஃபலோஸ்போரின்கள், சிறுநீர் பையில் ஏற்படும் சிக்கலில்லாத சிறுநீர் பாதை நோய் தொற்றுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படும், சக்தி வாய்ந்த நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகள் (இரண்டாம் தலைமுறை) ஆகும்.
 • குறிப்பிட்ட அளவு நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகள், அமிங்னோகிளிகோசைட்டுகள், சிக்கலான சிறுநீர் பாதை நோய் தொற்றுக்களுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படுகின்றன.
 • திரும்பத் திரும்பத் தோன்றும் சிறுநீர் பாதை நோய் தொற்றுகளுக்கு, மருத்துவர்,ஒரு ஒற்றை வகை நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்தை, தினமும் உடலுறவுக்குப் பிறகு எடுக்க பரிந்துரைக்கலாம்.
 • ஃபெனோசோப்பிரிடைன், நோய் தொற்றுக்களினால் ஏற்படும் வலி, அசௌகரியம் மற்றும் சிறுநீர் பையில் ஏற்படும் எரிச்சலில் இருந்து விடுபட உதவுகிறது.

அறுவை சிகிச்சை

பிறவியிலிருந்தே இருக்கும் அசாதாரணங்கள் (எ.கா. வெசிகோரட்டோரல் ரெஃப்ளக்ஸ், நியுரோஜெனிக் சிறுநீர் பை மற்றும் ஆண்குறி முன்தோல் குறுக்கம்), பிந்தைய வாழ்க்கையில் தோன்றக் கூடிய அசாதாரணங்கள் (எ.கா. சிறுநீரக கற்கள், சிறுநீர் வடிகுழாய் போன்ற அந்நியமான பொருட்கள், பால்வினை நோய்களின் சிக்கல், பெரிதாக வளர்ந்த ப்ரோஸ்டேட் காரணமாக ஏற்படும் அடைப்பு),கட்டி, நீர்க்கட்டி அல்லது சீழ் சேர்வதன் காரணமாக ஏற்படும் அடைப்பு மற்றும் இன்னும் பல பிரச்சினைகள் ஏற்படும் நிலை உள்ள, திரும்பத் திரும்பத் தோன்றும் சிறுநீர் பாதை நோய் தொற்றுகளுக்கு சிகிச்சையளிக்க, அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது.

சிறுநீர் பை அறுவை சிகிச்சையை உள்ளடக்கிய பல்வேறு அறுவை சிகிச்சைகள், சிக்கலான சிறுநீர் பாதை நோய் தொற்றின் கடுமையான நிலைகளில் மேற்கொள்ளப்படுகின்றன. அவற்றுள் அடங்கியவை:

 • சிறுநீரை வேறு வழி திருப்புதல்ஆர்த்தோடாபிக் வேறு வழி திருப்புதல்
  உடலின் வெளியே இணைக்கப்பட்டிருக்கும் ஒரு பையில் சேகரிப்பதற்கு, சிறுநீர் பாய்வது, சிறுநீர் பையிலிருந்து வெளியே திருப்பப்படுகிறது.
 • பெருக்குதல் சிஸ்டோபிளாஸ்டி
  சிறுநீர் பை நீக்கப்பட்டு, குடலின் ஒரு பகுதியைப் பயன்படுத்தி, ஒரு புதிய சிறுநீர் பை கட்டமைக்கப்படுகிறது.
 • சிறுநீர் குழாய் ஸ்டென்ட் 
  இது, சிறுநீர் பாதை நோய் தோற்று காரணமாக அடைபட்ட சிறுநீர் குழாயை விரியச் செய்ய பயன்படுத்தப்படுகிறது.
 • லேசர் அறுவை சிகிச்சை
  லேசர் கதிர்களைப் பயன்படுத்தி என்டாஸ்கோப் அல்லது லேப்ராஸ்கோப் வழியாக செய்யப்படும் அறுவை சிகிச்சையின் உதவியால் அடைப்புகள் நீக்கப்படுகின்றன.

வாழ்க்கைமுறை மேலாண்மை

சிறுநீர் பாதை நோய் தொற்றுக்கள், சிகிச்சைக்குப் பிறகு குறிப்பிட்ட வாழ்க்கைமுறை மாற்றங்கள் இல்லாத பொழுது, திரும்ப வருவதற்கான ஒரு முனைப்பைக் கொண்டிருக்கின்றன. சிக்கலில்லாத சிறுநீர் பாதை நோய் தொற்றுக்கள் மருந்துகளால் குணமடைந்தாலும், அவை திரும்ப வர முனைகின்றன. சிக்கலான சிறுநீர் பாதை நோய் தொற்றுக்களினால் ஏற்பட்ட அசாதாரணங்களை சரி செய்வதற்கு, அறுவை சிகிச்சை மேற்கொண்ட பிறகு, நோய் தொற்று திரும்ப வரும் ஆபத்தைக் குறைக்க சுய-கவனிப்பு அவசியமானதாகும். சில பயனுள்ள  குறிப்புகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன:

 • ஒரு நல்ல சிறுநீர் வெளியேற்றத்தின் பொருட்டு, அதிக அளவு தண்ணீர் அருந்தவும்.
 • சிறுநீர் கழிக்கும் உந்துதல் ஏற்படும் பொழுது, அதை அடக்க வேண்டாம்.
 • மது அருந்துவதையும், காஃபின் எடுத்துக் கொள்வதையும் கட்டுப்படுத்தவும்.
 • இறுக்கமான உள்ளாடைகளைத் தவிர்க்கவும்.
 • பெண்கள், நல்ல சுகாதாரத்தைப் பராமரிக்க, பாலுறுப்பு பகுதிகளை சுத்தம் செய்யும் சரியான முறைகளை (முன்புறமிருந்து பின்புறம் வரை)  கற்றுக் கொள்ள வேண்டும்.
 • முறையாக குளியல்கள் போடுவதன் மூலம் உங்களை சுத்தமாகப் பராமரிக்கும் ஆரோக்கியமான பழக்கங்களைப் பின்பற்றவும். சோப்பு நுரை குளியல்களைத் தவிர்க்கவும்.
 • நோய் தொற்றுக்களைத் தடுக்கும் பொருட்டு, விந்தணுக்களைக் கொல்லும் களிம்புகள் மற்றும் தெளிப்பான்களுக்குப் பதிலாக, தடுப்புச்சுவர் முறை கருத்தடை அல்லது கருத்தடை மாத்திரைகளைப் பயன்படுத்தவும்.
 • உங்கள் நீரிழிவு, சிறுநீர் பாதை நோய் தொற்றுக்கள் ஏற்படும் வாய்ப்புக்களை அதிகரிப்பதால், அதனை கட்டுப்பாட்டுக்குள் வைக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்கவும்.
Patrangasava
₹450  ₹500  10% OFF
BUY NOW


மேற்கோள்கள்

 1. MedlinePlus Medical Encyclopedia: US National Library of Medicine; Urinary tract infection - adults
 2. Ana L. Flores-Mireles, Jennifer N. Walker, Michael Caparon, Scott J. Hultgren. Urinary tract infections: epidemiology, mechanisms of infection and treatment options. Nat Rev Microbiol. 2015 May; 13(5): 269–284. Published online 2015 Apr 8. PMID: 25853778
 3. Shashi Kant, Ayush Lohiya, Arti Kapil, Sanjeev Kumar Gupta. Urinary tract infection among pregnant women at a secondary level hospital in Northern India. Year : 2017, Volume : 61, Issue : 2, Page : 118-123 [Internet]
 4. Richard Colgan et al. Am Fam Physician. 2006 Sep 15;74(6):985-990. [Internet] American Academy of Family Physicians; Asymptomatic Bacteriuria in Adults.
 5. Am Fam Physician. 2015 Nov 1;92(9). [Internet] American Academy of Family Physicians; Dysuria: What You Should Know About Burning or Stinging with Urination.
 6. Center for Disease Control and Prevention [internet], Atlanta (GA): US Department of Health and Human Services; Urinary Tract Infection
 7. National Health Service [Internet]. UK; Urinary tract infections (UTIs)
 8. Janet M. Torpy, Laura A. Schwartz, Robert M. Golub. Urinary Tract Infection. JAMA. 2012;307(17):1877. May 2, 2012 [Internet]
 9. MedlinePlus Medical Encyclopedia: US National Library of Medicine; Urinary tract infection in women - self-care
 10. National Center for Complementary and Integrative Health [Internet] Bethesda, Maryland; Cranberry
 11. Health Harvard Publishing. Published: February, 2015. Harvard Medical School [Internet]. Stay a step ahead of urinary tract infections. Harvard University, Cambridge, Massachusetts.
 12. National Institute of Diabetes and Digestive and Kidney Diseases [internet]: US Department of Health and Human Services; Urinary Tract Imaging.
 13. Paul A. Bergamin, Anthony J. Kiosoglous. Surgical management of recurrent urinary tract infections: a review. Transl Androl Urol. 2017 Jul; 6(Suppl 2): S153–S162. PMID: 28791234
 14. MedlinePlus Medical Encyclopedia: US National Library of Medicine; Urinary tract infection - children
 15. Krieger JN. Complications and treatment of urinary tract infections during pregnancy. Urol Clin North Am. 1986 Nov;13(4):685-93. PMID: 3535210

சிறுநீர் பாதை நோய் தொற்று க்கான மருந்துகள்

Medicines listed below are available for சிறுநீர் பாதை நோய் தொற்று. Please note that you should not take any medicines without doctor consultation. Taking any medicine without doctor's consultation can cause serious problems.