யுவெயிட்டிஸ் என்றால் என்ன?
சார்நயம் (கண்ணின் மத்திய அடுக்கு) மற்றும் சுற்றியுள்ள திசுக்களில் ஏற்படும் வீக்கம் அல்லது அழற்சியே யுவெயிட்டிஸ் என அழைக்கப்படுகிறது. இந்நிலையினால் ஒன்று அல்லது இரண்டு கண்களுக்கும் பாதிப்பேற்படலாம்.இதற்கான சிகிச்சையை சரியான நேரத்தில் அளிக்கத் தவறிவிட்டால் இது குருட்டுத்தன்மைக்கு வழிவகுக்கக்கூடும். இவை சார்நயம் பாதிக்கப்பட்ட இடத்தை பொறுத்து மூன்று வகைப்படுகின்றன - அவை முன்புறம் (ஆன்டீரியர்), இடையில் (இடைநிலை) மற்றும் பின்புறம் (போஸ்டீரியர்) ஆகியவை ஆகும். சில சந்தர்ப்பங்களில், 3 அடுக்குகளிலுமே பாதிப்பேற்படக்கூடும். இது திடீரென்று ஏற்பட்டு குறுகிய காலத்திற்கோ (கடுமையானது) அல்லது நீண்ட காலத்திற்கோ நீடிக்கக்கூடியது.(நாள்பட்டது).
இதன் முக்கிய அடையாளங்களும் அறிகுறிகளும் யாவை?
பொதுவான அறிகுறிகள் மற்றும் அடையாளங்கள் பின்வருமாறு:
- குறைந்த பார்வை திறன்.
- மங்கலான அல்லது புரை விழுந்த பார்வை.
- இடங்கள் இருண்டதாகவும் மிதப்பது போன்றும் தோற்றமளிக்கும் காட்சி.
- ஒளி அல்லது போட்டோபோபியா உணர்திறன்.
- கண்கள் வலிமிகுந்திருப்பதோடு சிவிந்திருத்தல்.
- தலைவலி.
- சிறிய கண்மணியை கொண்டிருத்தல்.
- கருவிழியின் நிறம் மாறுதல்.
- கண்களின் நீர் வழிதல்.
இதன் முக்கிய காரணங்கள் யாவை?
யுவெயிட்டிஸ்க்கான சரியான காரணம் இன்னும் புலப்படவில்லை. இது நோயெதிர்ப்பு மண்டலம் உடலில் உள்ள பல்வேறு திசுக்களுள் அடங்கிய கண்களின் திசுக்களையும் பாதிப்பதால், இது பொதுவாக ஆட்டோ இம்யூன் நிலைகளிலேயே காணப்படுகிறது. இந்நிலைக்கு பங்களிக்கும் சில காரணங்கள் பின்வருமாறு:
- கிரோன்'ஸ் நோய்.
- பெருங்குடல் புண்.
- எய்ட்ஸ் அல்லது எச்.ஐ.வி தொற்று.
- ஹெர்பெஸ்.
- லைம் நோய்.
- சிபிலிஸ்.
- காசநோய்.
- முடக்கு வாதம்.
- சொரியாஸிஸ்.
- சிறுவர்களுக்கான கீல்வாதம்.
- கண்ணில் ஏற்படும் காயம்.
- கண்ணினுள் ஊடுருவிச் செல்லும் ஒரு நச்சுத்தன்மையின் வெளிப்பாடு.
- புகைப் பிடித்தல்.
இதன் கண்டறியும் முறை மற்றும் சிகைச்சையளிக்கும் முறை யாவை?
மருத்துவர் தெளிவான அல்லது வெண்மையான காட்சிக்கான சாத்தியத்தை அறிய உடல் பரிசோதனையை மேற்கொள்வார். மேற்கொள்ளப்படும் சில சோதனைகள் பின்வருமாறு:
- வெள்ளை இரத்த அணுக்களின் எண்ணிக்கை மற்றும் புரத அளவுகளை சாதாரண இரத்த பரிசோதனைகள் மூலம் பரிசோதித்தல்.
- விரிவான உடல் பரிசோதனையுடன் முழுமையான மருத்துவ வரலாற்றைக் குறித்துக்கொள்தல்.
- தோல் சோதனைகள்.
- கண் திரவங்களிளை பரிசோதித்தல்.
இந்நிலை கண்டறிந்த பின், நோயாளிக்கு பின்வரும் பல்வேறு சிகிச்சை முறைகளின் மூலம் சிகிச்சை அளிக்கப்படுகின்றன:
- அழற்சியை குறைப்பதற்காக கார்டிகோஸ்டிராய்டு மருந்துகள் பயன்படுத்தப்படுகின்றன.
- மிட்ரியாட்டிக் கண் மருந்துகள் கண்மணியை விரிவுபடுத்துதலுக்கு உதவுகிறது.
- தொற்று நோய் இருக்கும் வழக்குகளில், அதை கட்டுப்படுத்துவதற்கு ஆண்டிபயோட்டிக்ஸ் உதவுகிறது.
- ஒரு வேளை பார்வை இழப்புக்கான அபாயம் ஏற்பட்டால், தடுப்பாற்றடக்கிகள் பரிந்துரைக்கப்படலாம்.
- ஒளி உணர்திறனை எதிர்கொள்ள டார்க் கண்ணாடிகள் பயனுள்ளதாக இருக்கும்.