யோனியழற்சி என்றால் என்ன?
யோனியழற்சி என்பது அழற்சி ஏற்பட்ட யோனியில் ஏற்படும் வலி, அரிப்பு மற்றும் வெளியேற்றம் (இந்த வெளியேற்றம் சில நேரங்களில் துர்நாற்றமடிக்கக் கூடியது) ஆகும். யோனியழற்சி ஏற்படுவதற்கான பொதுவான காரணம் தொற்றுநோய்களே ஆகும்.
இதன் முக்கிய அடையாளங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை?
தொற்றுநோய்களின் வகையினை பொறுத்து வேறுபடும் யோனியழற்சியின் அறிகுறிகள் பின்வருமாறு:
பாக்டீரியல் யோனியழற்சி எந்த அறிகுறியையும் ஏற்படுத்தாமலும் இருக்கலாம் அல்லது ஏற்படுத்தவும் செய்யலாம் அவற்றுள் அடங்குபவை பின்வருமாறு:
- மெலிதான வெள்ளை அல்லது சாம்பல் நிற யோனி வெளியேற்றம்.
- வலுவான மீன்-போன்ற வாடை (இது பொதுவாக பாலியல் உறவு கொண்ட பிறகு ஏற்படக்கூடியது).
ஈஸ்ட் தொற்று பின்வரும் அறிகுறிகளை கொண்டு ஏற்படுகிறது:
- கெட்டியான, பாலாடைக்கட்டி போன்ற வெள்ளை நிற வெளியேற்றம்.
- எந்த வாடையுமின்றி, நீராக ஏற்படும் வெளியேற்றம்.
- அரிப்புதன்மையுடன் சிவந்திருத்தல்.
ட்ரிகோமோனியாசிஸ் தொற்று எந்த அறிகுறியையும் ஏற்படுத்தாமலும் இருக்கலாம் அல்லது ஏற்படுத்தவும் செய்யலாம்:
- யோனி மற்றும் கருவாயில் ஏற்படும் நமைச்சல், எரிச்சல் மற்றும் வேதனை.
- சிறுநீர் கழிக்கும் போது ஏற்படும் எரிச்சல்.
- சாம்பல்-பச்சை நிற வெளியேற்றம்.
- துர்நாற்றமடிக்கும் வெளியேற்றம்.
இதன் முக்கிய காரணங்கள் யாவை?
யோனியிலிருக்கும் நுண்ணுயிர்களின் சமநிலையில் ஏற்படும் மாற்றத்தின் முக்கிய காரணத்தினாலேயே யோனியழற்சி ஏற்படுகின்றது, இந்நிலைக்கு பொருப்புவகிக்கும் காரணிகள் பின்வருமாறு:
- பாதுகாப்பற்ற பாலியல் உறவு கொள்தல் அல்லது பலருடன் பாலியல் தொடர்பு கொள்தல்.
- கருப்பையகமான சாதனத்தை (ஐ.யூ.டி) பயன்படுத்துதல்.
- கட்டுப்படுத்த முடியாத நீரிழிவு நோய் போன்ற நிலைகள்.
- கர்ப்பம்.
- மருந்துகள் எ.கா., ஆண்டிபயாடிக்குகள், ஸ்டீராய்டுகள்.
- கேண்டிடியாசிஸ், ட்ரிகோமோனியாசிஸ் போன்ற நோய்த்தொற்றுகள்.
- சோப்புகள், டிடெர்ஜெண்டுகள், ஸ்ப்ரேக்கள், டூச்சஸ், ஸ்பெர்மிசைட்ஸ் அல்லது துணி மென்மைப்படுத்திகள் போன்ற பொருட்களால் ஏற்படும் ஒவ்வாமை.
- ஹார்மோனல் மாற்றங்கள்.
இது எவ்வாறு கண்டறியப்படுகிறது?
முதலில் முழுமையான மருத்துவ வரலாற்றை எடுப்பதைத் தொடர்ந்து, முழுமையான இடுப்பு பரிசோதனையை மருத்துவர் மேற்கொள்ளக்கூடும் (அசாதாரண வெளியேற்றம், அதன் நிறம், வாசனை மற்றும் தரம் போன்றவைகளை சரிபார்க்கும் சோதனை). மருத்துவர் சில நேரங்களில் யோனி மாதிரியை நுண்ணோக்கி மூலம் ஆய்வு செய்யுமாறு அறிவுறுத்தலாம்.
- பாக்டீரியல் தொற்றுக்கு நுண்ணுயிர் எதிர்ப்பிகள் வாய்வழியாகவோ அல்லது மேற்பூச்சுகளாகவோ பயன்படுத்தப்படுகின்றன.
- ஆன்டிஃபங்கள் கிரீம்கள் அல்லது சப்போஸிட்டரிகள் மூலம் பூஞ்சை நோய்த்தொற்றுகள் சிகிச்சையளிக்கப்படுகின்றன.
- ட்ரிகோமோனியாசிஸ்க்கு சிங்கள்-டோஸ் ஆண்டிபயாடிக் மூலம் சிகிச்சை செய்யப்படுவதோடு இரண்டுப் பேருக்கும் சிகிச்சை தேவைப்படுகிறது.
- ஒவ்வாமை ஏற்படும் வழக்குகளில், ஒவ்வாமையூக்கிகளுக்கு வெளிப்படுதலை கட்டுப்படுத்துதல் வேண்டும் அல்லது ஒவ்வாமையூக்கிகள் நீக்கப்பட வேண்டும்.
யோனியழற்சியை தடுப்பதற்கான நடவடிக்கைகள்:
- வேதிக்கழுவல் அல்லது வஜினல் ஸ்ப்ரேக்களை தவிர்த்தல் அவசியம்.
- ஆணுறை பயன்பாடு ஊக்குவிக்கப்பட வேண்டும்.
- சுடு தன்மை மற்றும் ஈரப்பதத்தை கொண்டிருக்கும் ஆடைகள் உபயோகப்படுத்துதலை தவிர்த்தல் வேண்டும்.
- பருத்தி போன்ற சௌகரியமான துணிகளினால் ஆன உள்ளாடைகளை உபயோகப்படுத்த வேண்டும்.
- குறிப்பாக மாதவிடாய் காலங்களில் உகந்த சுகாதாரத்தை பராமரிப்பதற்காக உள்ளாடைகளை அடிக்கடி மாற்றுதல் அறிவுறுத்தப்படுகிறது.