வால்வுரல் இதய நோய் - Valvular Heart Disease in Tamil

Dr. Nabi Darya Vali (AIIMS)MBBS

May 14, 2019

March 06, 2020

வால்வுரல் இதய நோய்
வால்வுரல் இதய நோய்

வால்வுரல் இதய நோய் என்றால் என்ன?

மனித இதயம் நான்கு வால்வுகளை கொண்டது அவை - மிட்ரல், டிரிக்ஸ்பைடு, அயோர்டிக் மற்றும் பல்முனரி வால்வுகளாகும். இந்த வால்வுகள் கட்டுப்பாட்டு முறையில் இரத்த ஓட்டத்தை இதயத்தினுள் மற்றும் வெளியே சுற்றிச்செலுத்துகிறது, அதன்விளைவாக வெளியேற்ற பட்ட இரத்தம் மீண்டும் இதயத்தினுள் செல்வதை தடுக்கமுடிகிறது. பல்வேறு வகையான வால்வுரல் இதய நோய் பின்வருமாறு:

  • பின்னோக்கிப் பாய்தல்: இரத்த ஓட்டம் தவறான திசையை நோக்கி பாய்தல் (பின்னோக்கி பாய்தல்).
  • மிட்ரல் வால்வு ப்ரொலப்சஸ்: மிட்ரல் வால்வின் மூடு இதழ் இறுக்கமாக மூடாத நிலையில் வளைந்திருத்தல்.
  • ஸ்டெனோசிஸ்: வால்வு குறுகியிருப்பதால் இரத்த ஓட்டத்தில் ஏற்படும் அடைப்பு.

இதன் முக்கிய அடையாளங்களும் அறிகுறிகளும் யாவை?

ஆரம்ப கட்டத்தில் வால்வுலர் இதய நோயிக்கான எந்த அறிகுறிகளும் கவனிக்கத்தக்க ஏற்படுவதில்லை. உடல் ரீதியான செயல்பாடுகளைச் செய்யும்போது சிலர் அயர்ச்சியடைந்தது போல உணரலாம், எனவே அவர்கள்  மூச்சு திணறல் அல்லது சோர்வு போன்ற உணர்வுகளை தவிர்க்க உடல் பயிற்சியை தொடராமல் விலகிவிடலாம். இந்நிலையில் பொதுவாக காணப்படும் சில அறிகுறிகள் மற்றும் அடையாளங்கள் பின்வருமாறு:

  • மிகுதியான அயர்ச்சி, சோர்வு அல்லது பலவீனத்தை உணர்தல்.
  • ஏதெனும் செயல்பாடுகளில் ஈடுபடும் போது அல்லது சில நேரங்களில் கீழே படுத்திருக்கும் போது கூட மூச்சுத்திணறலை ஏற்படுத்தக்கூடும்.
  • வீங்கியிருக்கும் கணுக்கால், பாதம் அல்லது உப்பியிருக்கும் வயிறு.
  • படபடப்பு ஏற்படுதல்.
  • அசாதாரண இதயத்துடிப்பு அல்லது இதய முணுமுணுப்பு ஏற்படுதல்.
  • முக்கியமாக அயோர்டிக் அல்லது மிட்ரல் வால்வ் ஸ்டெனோசிஸ் ஏற்பட்டிருக்கும் ஒருவர் தலைச்சுற்றியோ அல்லது மயக்கமுற்றோ கீழே விழும் நிலை ஏற்படலாம்.

இதன் முக்கிய காரணங்கள் யாவை?

வால்வுரல் இதய நோய்க்கு வழிவகுக்கும் முக்கிய காரணங்கள் பின்வருமாறு:

இதன் கண்டறியும் முறை மற்றும் சிகைச்சையளிக்கும் முறை யாவை?

வால்வுரல் இதய நோய் இதய முணுமுணுப்பை ஏற்படுத்துகிறது, இது இந்த நோய்க்கான மிகவும் பொதுவான அறிகுறியாக இருப்பதோடு உங்கள் மருத்துவர் ஸ்டெதாஸ்கோப் மூலம் பரிசோதிக்கும் போது உணரக்கூடியதாகவும் இருக்கின்றது. முணுமுணுப்புக்கள் இல்லாத வழக்குகளில், வால்வுரல் இதய நோய் இருப்பதாக சந்தேகம் இருக்கும் பட்சத்தில் இதய செயல்பாட்டையும் அதன் அமைப்பையும் சரிபார்க்க மருத்துவரால் பின்வரும் சோதனைகள் பரிந்துரைக்கப்படலாம்:

  • மார்பு எக்ஸ்-கதிர்.
  • எலக்ட்ரோகார்டியோகிராம் (ஈசிஜி).
  • எக்கோகார்டியோகிராம்.
  • அழுத்த சோதனை.
  • ஆஞ்சியோக்ராம்.

இந்நிலையின் தீவிரத்தைச் சார்ந்தே இதற்கான சிகிச்சை அளிக்கப்படுகிறது, சில சிறிய வழக்குகளுக்கு சிகிச்சை தேவைப்படாமல் கூட இருக்கலாம். வால்வுரல் இதய நோய்க்கான சிகிச்சை இதன் அறிகுறிகளிலிருந்து நிவாரணம் பெறவும் வால்வுகளை சரிசெய்யும் நோக்கத்துடனும் அளிக்கப்படுகிறது. இந்த நோய்க்கு பல்வேறு சிகிச்சை வாய்ப்புகள் இருக்கின்றன, அவை வாழ்க்கை முறை, மருந்துகள், மற்றும் வால்வை சரிசெய்யும் செயல்முறைகள் போன்றவையாகும்.

வாழ்க்கைமுறை மாற்றங்கள் பின்வருமாறு:

  • ஆரோக்கியமான உணவுப்பழக்கத்தை ஏற்றுக்கொள்தல்.
  • புகைப்பிடிப்பதை நிறுத்துதல்.
  • தடகள போட்டிகளில் பங்கு பெறுவதிலிருந்து விலகுதல்.
  • அதிக உழைப்பை தவிர்த்தல்.
  • பின்வரும் செயல்பாடுகளை கட்டுப்படுத்த எடுத்துக்கொள்ளும் மருந்துகள் பின்வருமாறு:
  • இரத்த அழுத்தத்திற்கு சிகிச்சையளிக்க மற்றும் பீட்டா பிளாக்கர்கள், வாசுடிலிட்டர்கள், ஏசிஇ தடுப்பான்கள்.
  • இரத்த தின்னர்கள் இரத்தம் உறைதலை தடுக்கின்றது.
  • உடலில் அதிகப்படியாக இருக்கும் திரவத்தை வெளியேற்ற டையூரிடிக்ஸை உபயோகப்படுத்துதல் நன்று.
  • ஆன்டிஆர்த்மிக் மருந்துகள் மூலம் இதயத்தின் ரிதத்தை பராமரித்தல்.
  • சேதமடைந்த அல்லது நோயுற்ற வால்விற்கு சிகிச்சையளிக்கும் நடைமுறைகள் பின்வருமாறு:
  • சேதமடைந்த வால்வை பழுது பார்த்தல் என்பது வால்வு மாற்றம் எனவும் அழைக்கப்படுகிறது, இந்த சிகிச்சை முறை ஒருவருக்கு ஏற்பட்டிருக்கும் நோயின் தீவிரம், ஒருவரின் வயது மற்றும் இதற்கு இணையான மற்ற நோய்களை பொறுத்து அறிவுறுத்தப்படலாம்.



மேற்கோள்கள்

  1. American College of Cardiology. Understanding Heart Valve Disease Washington [Internet]
  2. American College of Cardiology. Valvular Heart Disease Washington [Internet]
  3. MedlinePlus Medical Encyclopedia: US National Library of Medicine; Heart Valve Diseases
  4. Kameswari Maganti et al. Valvular Heart Disease: Diagnosis and Management . Mayo Clin Proc. 2010 May; 85(5): 483–500. PMID: 20435842
  5. Cleveland Clinic. [Internet]. Cleveland, Ohio. Valve Disease Types