வைட்டமின் பி9 குறைபாடு என்றால் என்ன?
வைட்டமின் (உயிர்ச்சத்து) பி9 ஃபோலிக் அமிலம் அல்லது ஃபோலேட் (இலைக்காடி) என்றும் அழைக்கப்படுகிறது.இது தண்ணீரில் கரையக்கூடிய வைட்டமின், அதாவது உடலால் அதனை சேமித்து வைக்க முடியாது என்பதால் உணவில் தினசரி அதனை சேர்த்துக்கொள்வது அவசியமாகும்.வைட்டமின் பி9 இரத்த சிவப்பணுக்கள் (ஆர்.சி.பி-க்கள்) தயாரிக்க மிகவும் முக்கியமானது, இரத்த சிவப்பணுக்களில் தான் ஹீமோகுளோபின் அடங்கியுள்ளது மற்றும் இது டி.என்.ஏ-வை (ஆக்சிசனற்ற ரைபோ கரு அமிலம்) உருவாக்கி அதனைப் பழுது பார்க்கிறது.வைட்டமின் பி9 குறைபாடு மெகாலோபிளாஸ்டிக் இரத்தசோகைக்கு வழிவகுக்கிறது.குறிப்பாக இது கர்ப்ப காலத்தில் ஏற்படுவது மிகவும் ஆபத்தானது ஆகும்.
நோயின் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை?
வைட்டமின் பி9 குறைபாட்டின் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் பின்வருமாறு:
- ஹீமோகுளோபின் குறைவு காரணமாக பலவீனம் மற்றும் சோர்வு.
- மூச்சு விடுவதில் சிரமம்.
- வாய் / நாக்கு புண்கள்.
- தலைவலி.
- எரிச்சலூட்டும் தன்மை.
- பசியிழப்பு.
- ஒருமுகப்படுத்துவதில் சிரமம்.
- கர்ப்பகாலத்தின் போது, ஃபோலேட் குறைபாடு பிறக்கப்போகும் குழந்தைக்கு பிறப்பு ரீதியான குறைபாடுகளை ஏற்படுத்தும், ஏனெனில், இதுவே குழந்தையின் நரம்பு மண்டலத்தின் வளர்ச்சிக்கு அவசியமானதாகும்.
நோய் தாக்குதலுக்கான முக்கிய காரணங்கள் என்ன?
சரியான அளவிலான வைட்டமின் பி9 இல்லாத உணவுத் திட்டத்தை மேற்கொள்ளுதல் ஃபோலேட் குறைபாட்டிற்கு வழிவகுக்கிறது.குளூட்டன் ஒவ்வாமை போன்ற அகத்துறிஞ்சாமை நோய்கள் ஃபாலேட் உணவில் இருந்து இரத்தத்திற்கு உறிஞ்சப்படுவதைத் தடுப்பதால் ஃபாலேட் குறைபாடுகளுக்கு வழிவகுக்கிறது.நெஞ்சடைப்பு, சிறுநீரக செயலிழப்பிற்காக சிறுநீர் பிரித்தல் நீண்ட காலத்திற்கு செய்தல் மற்றும் கல்லீரல் சேதமடைதல் ஆகியவற்றின் பிறழ்வு ஃபோலேட் குறைபாட்டிற்கு வழிவகுக்குக்கக்கூடும். மீத்தோடிரெக்சேட்டு, சல்ஃபாசலசின் போன்ற மருந்துகள் மற்றும் வலிப்புத்தாக்கங்களை கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட மருந்துகள் வைட்டமின் பி9 குறைபாட்டிற்கு வழிவகுக்கின்றன.
இது எப்படி கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகின்றது?
மருத்துவர் நோய் அறிகுறிகளை அறிந்து, மேலும் இந்த நிலைமையை கண்டறிய சில ஆய்வக பரிசோதனைகளை பரிந்துரை செய்யக்கூடும். ஊட்டச்சத்து குறைபாடுள்ள நோயாளிகளில் இரத்த சோகை உள்ளதா என்று உறுதி செய்ய முழுமையான குருதி எண்ணிக்கை சோதனை பரிந்துரைக்கப்படுகிறது. வைட்டமின் பி9 குறைபாடு மெகாலோபிளாஸ்டிக் இரத்தசோகையை ஏற்படுத்துகிறது, இதில் இரத்த சிவப்பணுக்கள் சாதாரண அளவை விட பெரியதாக மற்றும் முதிர்ச்சி அடையாதவையாக இருக்கும்.இரத்தத்தில் வைட்டமின் பி9 குறைந்த அளவில் இருப்பது வைட்டமின் பி9 குறைபாட்டை குறிக்கிறது.பிற மருந்துகளால் ஏற்படும் வைட்டமின் பி9-இன் அகத்துறிஞ்சாமை ஏற்படவில்லை என்று உறுதி செய்ய மருத்துவர் மருந்து உட்கொள்ளும் வரலாற்றைப் பெறக்கூடும்.
சிகிச்சை பொதுவாக வைட்டமின் பி9 குறைநிரப்புகள் உட்கொள்ளுதலை உள்ளடக்குகிறது.மருந்துச்சீட்டு இன்றி வழங்கப்படும் வைட்டமின் பி9 மாத்திரைகள் கிடைக்கின்றன.முட்டை, மட்டி, பீட்ரூட், பயறு வகைகள், பட்டாணி மற்றும் பச்சை இலை காய்கறிகள் (கீரை) போன்ற வைட்டமின் பி9 நிறைந்த உணவுப் பொருட்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லதாகும்.