யாஸ் (பறங்கிவியாதி) என்றால் என்ன?
யாஸ் (பறங்கிவியாதி) என்பது, பாக்டீரியா ட்ரொபொனிமா பெர்டென்யூவினால் ஏற்படும் தொற்று நோய் ஆகும். இந்த தொற்று ஏற்பட்ட சில காலங்களிலேயே தோல், எலும்பு மற்றும் மூட்டுகளில் நோய்த்தாக்குதலுக்கான ஆரம்ப அறிகுறிகளை ஏற்படுத்தும் ஒரு நோயாகும். வறண்ட வானிலையை விட வெப்பமண்டல வானிலையில் இந்நோய் ஏற்படுவதற்கான ஆபத்து அதிகமாக உள்ளது. பாக்டீரியா உடலில் தோலின் வழியாக உள்நுழைகிறது. யாஸ் நுண்ணுயிர்களைக் கொண்டிருக்கும் பாக்டீரியம் சிஃபிலிஸ் ஏற்படுத்தும் பாக்டீரியத்தை ஒத்திருக்கிறது; ஆயினும் இந்நோய் சிஃபிலிஸைப் போன்று பாலியல் உறவுகளால் பரவுவதில்லை, ஆனால் நோய்த்தொற்றுடைய நபருடன் தொடர்பு கொண்டால் இது உடனே பரவும் தன்மை கொண்டது.
அதன் முக்கிய அடையாளங்களும் அறிகுறிகளும் என்ன?
தொற்று ஏற்படுத்தும் பாக்டீரியம் சரும பகுதியில் உள் நுழைந்த பிறகு புண் தோன்றும். இது பொதுவாக வலியற்றது, மற்றும் அந்த நபருக்கு அரிப்பு ஏற்படும். முதலில் உருவான புண்கள் குணமாவதற்கு முன்னர் அல்லது பின்னர் பல புண்கள் உருவாகும். ஆரம்ப கால யாஸின் பொதுவான அடையாளங்களும் அறிகுறிகளும்:
- எலும்பு வலி.
- வீங்கிய எலும்புகள் மற்றும் விரல்கள்.
- தோல் வடுக்கள்.
- காயங்களோடு கூடிய புண்கள் மற்றும் வலியுடைய பிளவுகள்.
ஆரம்ப கட்டத்தில் சரியான முறையில் சிகிச்சையளிக்கப்படாவிட்டால், நோயின் அடுத்த கட்டத்தில் எலும்பின் அமைப்பு மற்றும் செயல்பாடு கடுமையாக பாதிக்கப்படும்.
முக்கிய காரணங்கள் என்ன?
ட்ரொபொனிமா பெர்டென்யூ என்றழைக்கப்படும் சுழல் வடிவ பாக்டீரியத்தால் யாஸ் ஏற்படுகிறது, இது நோய்த்தொற்றுடையவர்களிடமிருந்து ஒரு ஆரோக்கியமான நபருக்கு நேரடி தோல் தொடர்பு மூலம் பரவுகிறது. அரிதாக, பாக்டீரியத்தால் பாதிக்கப்பட்ட ஒரு பூச்சி கடித்தாலும் இந்த நிலைக்கு ஒருவர் ஆளாகக்கூடும்.
இது எப்படி கண்டறியப்படுகிறது மற்றும் சிகிச்சையளிக்கப்படுகிறது?
நோயறிதல் பொதுவாக உடல் பரிசோதனையை உள்ளடக்குகியுள்ளது, அதன் பின் நோயறிதலை உறுதிப்படுத்த டாக்டர் பல்வேறு சோதனைகள் செய்ய பரிந்துரைப்பார். பாதிக்கப்பட்ட தோல் மற்றும் புண்கள் ஆகியவற்றின் நுண்ணுயிரியல் கண்காணிப்பு நிலை1 நிலைமையை கண்டறிய உதவும். வி.டி.ஆர்.எல் மற்றும் ட்ரிபோனிமால் ஆண்டிபாடி சோதனைகள் 3-ஆம் நிலையை கண்டறிய உதவுகின்றன.
மருத்துவர்கள் பொதுவாக பின்வரும் மருந்துகளை பரிந்துரைக்கின்றனர்:
- வாய்வழி அஸித்ரோமைசின் 30 மிகி / கிகி., இது உலக சுகாதார அமைப்பின் "யாஸ் அழிப்பு திட்டத்தினால்” அங்கீகரிக்கப்பட்ட சிகிச்சையாகும்.
- அஸித்ரோமைசினுக்கு செயல்படாத நபர்களுக்கு பென்சடைன் பென்சிலின் தசை வழியாக வழங்கப்படுகிறது.
ஆண்டிபையோட்டிக் சிகிச்சையிக்கு பின்னர் முழுமையான குணமடைதலுக்காக நான்கு வாரங்கள் மருத்துவர் தனிப்பட்ட நபரை தொடர்ந்து கண்காணிப்பார. யாஸ் நோய் மீண்டும் அதே நபருக்கு வருவது மிகவும் அரிதானதாகும்.