சோலிங்கர் எலிசன் சிண்ட்ரோம் என்றால் என்ன?
சோலிங்கர் எலிசன் சிண்ட்ரோம் என்பது கணையம் அல்லது சிறு குடலில் உள்ள ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கட்டிகள் காரணமாக கேஸ்ட்ரின் ஹார்மோனின் அதிகப்படியான உற்பத்தியை குறிக்கிறது. இந்த கட்டிகள் வயிற்றில் உள்ள கேஸ்ட்ரின் என்ற இரைப்பை அமிலத்தை சுரக்கின்றன. வயிற்றில் உணவு செரிமானத்திற்கு இந்த இரைப்பை கேஸ்ட்ரின் அமிலத்தின் சரியான அளவு தேவைப்படுகிறது. சோலிங்கர் எலிசன் நோய்க்குறியில் அதிகமாக சுரக்கப்படும் இந்த ஹார்மோன் வயிற்றுப் பகுதியில் மற்றும் செரிமான மண்டலத்தின் பிற பாகங்களிலும் புண்கள் ஏற்பட வழிவகுக்கிறது.
அதன் முக்கிய அடையாளங்களும் அறிகுறிகளும் என்ன?
சோலிங்கர் எலிசன் சிண்ட்ரோமின் அறிகுறிகள்:
- வயிற்றுப்போக்கு.
- வாந்தி.
- வயிற்று வலி.
- வயிற்றில் புண்கள்.
- வயிறு புடைத்தல்.
- எடை இழப்பு.
- பசியின்மை.
- ஏப்பம் விடுதல்.
- சிறு குடலில் புண்கள்.
மலத்தில் இரத்தம் அல்லது வாந்தி காணப்பட்டால் உடனடியாக மருத்துவரை தொடர்பு கொள்ளவும்.
முக்கிய காரணங்கள் என்ன?
பெரும்பாலானவர்களுக்கு,இந்த நோய்க்குறியின் காரணம் வெளிப்படுவதில்லை; இருப்பினும், சோலிங்கர் எலிசன் சிண்ட்ரோம், மக்கள் தொகையில் சுமார் 25% பேர் பாதிக்கப்பட காரணமாக இருப்பது, பன்மடங்கு என்டோக்ரைன் நியோபிளாசியா வகை1 என அழைக்கப்படும் மரபணு கோளாறு ஆகும். இதுவே சோலிங்கர் எலிசன் நோய்க்குறியை ஏற்படுத்துவதாக கருதப்படுகிறது. இந்த மரபணு கோளாறால் காஸ்ட்ரிநோமோக்கள் ஏற்படுகிறது, இந்த கேஸ்ட்ரிநோமோக்கள் கட்டிகளை உற்பத்தி செய்யும் கேஸ்ட்ரின் ஹார்மோனை சுரக்கிறது, இது வயிற்றில் அதிகப்படியான அமில உற்பத்திக்கு வழிவகுக்கிறது.
இது எப்படி கண்டறியப்படுகிறது மற்றும் சிகிச்சையளிக்கப்படுகிறது?
இந்த நிலையில் நோயறிதல் பொதுவாக பின்வரும் முறையில் மேற்கொள்ளப்படுகிறது:
- விரிவான நோய் பின்புலம் மற்றும் ஆய்வு.
- உடல் பரிசோதனை.
- கேஸ்ட்ரின் ஹார்மோனின் அளவை கண்டறிய இரத்த பரிசோதனை.
- மேல் இரைப்பை குடல் எண்டோஸ்கோபி மூலம்செரிமான மண்டலம், அதாவது உணவு குழாய், வயிறு, சிறு குடல் ஆகியவற்றின் மேல் பகுதியில் உள்ள வீக்கம் மற்றும் புண்களை சோதனை செய்வது.
- செரிமான மண்டலத்தின் தற்போதைய நிலையை சரிபார்க்க டோமோகிராபி (சிடி) ஸ்கேன் மற்றும் காந்த அதிர்வு இமேஜிங் (எம்.ஆர்.ஐ) போன்ற இமேஜிங் சோதனைகள்.
- வயிற்று அமில அளவுகளை தீர்மானிப்பதற்கான சோதனை.
சோலிங்கர் எலிசன் சிண்ட்ரோமை சரிசெய்ய மருத்துவர் பின்வரும் சிகிச்சை முறைகளை பரிந்துரைக்கலாம்:
- மருந்துகள்: பாண்டோப்ரசோல், ரபீப்ரசோல், ஏசோமெப்ரசோல் போன்ற புரோட்டான் பம்ப் தடுப்பான்கள், வயிற்றில் அமில உற்பத்தியை தடுப்பதற்க்காக பரிந்துரைக்கப்படுகிறது. இது வலி, புண், மற்றும் இதர அறிகுறிகளில் இருந்து நிவாரணம் அளிக்கிறது.
- கீமோதெரபி: அறுவை சிகிச்சை மூலம் குணப்படுத்த முடியாத சோலிங்கர் எலிசன் சிண்ட்ரோமை கட்டிகளுக்கு டாக்ஸோரூபிசின் போன்ற கீமோதெரபி மருந்துகள் மூலம் சிகிச்சை அளிக்க பரிந்துரைக்கப்படுகின்றன.
- அறுவைசிகிச்சை: அறுவைசிகிச்சை மூலம் நோய்க்குறி நீக்கம் செய்யப்படுகிறது.
- உணவு: இந்த கட்டிகள் மறுபடியும் தோன்றாமல் இருக்க மருத்துவர் கொடுக்கும் ஆலோசனைப்படி உணவுதிட்டத்தை பின்பற்றவும்.