வைட்டமின் B12, உங்கள் சருமம், முடி மற்றும் நகங்களுக்கு மிகவும் இன்றியமையாத ஒரு வைட்டமின் ஆகும். அது, அவற்றை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. அது, சருமம் வறண்டு போவதைத் தடுக்க உதவுகின்ற வகையில், சருமத்துக்கு முறையான நீரேற்றம் மற்றும் போதுமான ஈரப்பதம் ஆகியவற்றை உறுதி செய்கிறது. வைட்டமின் B12 ஒரு மூலப்பொருளாக, சரும க்ரீம்கள் மற்றும் களிம்புகளில் அடிக்கடி பயன்படுத்தப்படுகிறது. மேலும் அது, வறண்ட சருமத்தைக் கொண்ட நபர்களுக்கு நன்மை அளிக்கக் கூடியது என்று கண்டறியப்பட்டு இருக்கிறது. இந்தக் காரணத்துக்காக அது, எக்ஸிமா போன்ற சரும வறட்சியோடு தொடர்புடைய பிரச்சினைகளுக்கு சிகிச்சை அளிப்பது, மற்றும் அவை ஏற்படாமல் தடுப்பதிலும் கூட மிகவும் உதவிகரமாக இருக்கிறது. எக்ஸிமாவுக்கு, குறிப்பாக குழந்தைகளுக்கு ஏற்படும் பொழுது, சிகிச்சை அளிக்க வைட்டமின் B12 மேற்பூச்சாகத் தடவப்படுவது, நன்மை அளிப்பதாகக் கண்டறியப்பட்டு இருக்கிறது.
வைட்டமின் B12 -இல் ஏற்படும் குறைபாடு, சருமத்தில் மிகை நிறமேற்றம் (தோலில் கருப்பு பட்டைகளை ஏற்படுத்துகின்ற அதிப்படியான நிறமேற்றம்) மற்றும் சரும வெண்படலம் (பட்டைகள் போன்று சரும நிறத்தில் இழப்பு ஏற்படுதல்) போன்ற மற்ற பல்வேறு தோல் சார்ந்த வெளிப்பாடுகளோடு தொடர்புடையதாக இருக்கிறது.
வைட்டமின் B12 பற்றாக்குறையினால் ஏற்படும் சரும மிகை நிறமேற்றம், எவ்வாறாயினும், குணப்படுத்தக் கூடியது ஆகும். சியானோகோபாலமின் என்ற தசைவழி செலுத்தப்படும் ஊசிகள், நிறமேற்றத்தைக் குறைத்து, பாதிக்கப்பட்ட பகுதியில் சரும நிறத்தை இயல்பான தோற்றத்துக்கு கொண்டு வரும் திறன்மிக்கது என, ஆராய்ச்சி ஆதாரங்கள் தெரிவித்திருக்கின்றன.
இது மட்டும் அல்லாமல், வைட்டமின் B12, காயங்கள் முறையாக ஆறுவதிலும் கூட உதவுவதாக அறியப்படுகிறது. வைட்டமின் B12 -ஐ மேற்பூச்சாகத் தடவுவது, காயங்கள் ஆறுகின்ற உடலியல் செயல்முறையை அதிகரிக்கிறது. வைட்டமின் B12, முடி மற்றும் நகத்தின் வளர்ச்சியை ஊக்குவிப்பதன் காரணமாக, இந்த வைட்டமினில் ஏற்படும் பற்றாக்குறை, எளிதில் உடையக் கூடிய நகங்கள் மற்றும் முடிகளுக்கு வழிவகுக்கிறது. இந்த மாதிரி தோன்றுபவற்றைத் தவிர்க்க, உங்கள் உணவுமுறையில் அதிக அளவு வைட்டமின் B12 சேர்த்துக் கொள்ளுமாறு பரிந்துரைக்கப்படுகிறது. மேலும் நீங்கள், உங்கள் முடி மற்றும் சருமத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்த, மருத்துவரின் பரிந்துரை சீட்டு இல்லாமல் மருந்துக் கடைகளில் வாங்கக் கூடிய பொருட்களையும் கூடத் தேர்ந்தெடுக்கலாம்.