பாலுணர்வு என்பது ஒரு நபரின் செக்ஸ் ஊக்கம், அல்லது செக்ஸ் வைத்துக் கொள்வதற்கான ஆசையைக் குறிக்கிறது. இது, செக்ஸ் ஹார்மோன்கள், மற்றும் மூளையில் அவற்றுக்கான மையங்களின் ஆதிக்கத்தினால் ஏற்படுகிறது. ஆனால், இது எளிதான ஒன்றாகத் தோன்றினாலும், பாலுணர்வானது உங்கள் உணவுமுறை, மற்றும் உங்கள் துணையின் மீதான உங்கள் ஈர்ப்பு போன்ற மற்ற பல்வேறு காரணிகளாலும் ஆதிக்கம் செலுத்தப்படுகிறது. அநேகமாக உறவுகளில் ஏற்படும் பிரச்சினைகளும் உங்கள் செக்ஸ் ஊக்கத்தைப் பாதிக்கின்றன.
பெண்களின் பாலுணர்வின் மீது, பெண்ணுறுப்பில் வறட்சி, அல்லது வலிமிகுந்த உடலுறவு போன்ற குறிப்பிட மருத்துவப் பிரச்சினைகளினாலும் கூட ஆதிக்கம் செலுத்தப்படுகிறது. மன இறுக்கம், தன்னம்பிக்கை குறைவு, தூக்கம் பாதிக்கப்படுதல் மற்றும் குறிப்பிட்ட மருந்துகளும் கூட, ஒரு விளைவைக் கொண்டிருக்கின்றன. இந்தப் பிரச்சினைகளில் பெரும்பாலானவை, சரியான நடவடிக்கைகளை எடுப்பதன் மூலம், மற்றும் ஒரு சிறந்த முறையில் உடலுறவு கொள்வதன் மூலம் சமாளிக்கப்படக் கூடியவை ஆகும்.
(மேலும் படிக்க: தூக்கமின்மை மேலாண்மை)
இருந்தாலும், செக்ஸ் ஊக்கம் என வரும் பொழுது, 'இயல்பு நிலை' என்ற ஒன்று கிடையாது என்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும். சில நபர்கள் இயற்கையாகவே மற்றவர்களை விட அதிக ஊக்கத்துடனும், மற்றும் செக்ஸ் வைத்துக் கொள்வதற்கான அதிக விருப்பத்தையும் கொண்டவர்களாக இருக்கின்றனர். ஆனால், இந்தக் கட்டுரையில் விவரிக்கப்பட்டு இருக்கும் நடவடிக்கைகளை எடுப்பதன் மூலமாக, நீங்கள் உறுதியாக பாலுணர்வு ஊக்கத்தின் மீது ஆதிக்கம் செலுத்த முடியும். இந்தக் கட்டுரை, பாலுணர்வுத் தூண்டிகளின் மீதான ஒரு சிறப்பு கவனத்துடன், ஆண்கள் மற்றும் பெண்கள் இருபாலினத்தவருக்கும் பாலுணர்வை அதிகரிக்கின்ற ஒரு சில வீட்டு நிவாரணிகளைப் பற்றி விவரிக்கிறது.
ஆக, பாலுணர்வுத் தூண்டிகள் என்பவை என்ன? தெரிந்து கொள்ள மேலும் படிக்கவும்.