கர்ப்ப காலத்தில் உண்டாகும் அமிலத்தன்மை என்றால் என்ன?
கர்ப்ப காலத்தில் உண்டாகும் அமிலத்தன்மை என்பது ஒரு பொதுவான புகராகும். இது நெஞ்செரிச்சல் எனவும் அழைக்கப்படுகிறது, அமிலத்தன்மை வயிற்றுக்கு மேலே, மார்பின் மையத்தில் ஏற்படும் எரிச்சல் உணர்வின் மூலமே பண்பிடப்படுகிறது. கர்ப்ப காலத்தில் உண்டாகும் அமிலத்தன்மை என்பது பாதிப்பில்லாததாகவும் பொதுவானதாகவும் கருதப்பட்டாலும், மிகுந்த அசௌகரியத்தைத் தருவதாக இருக்கக்கூடும்.
இதை சார்ந்த முக்கிய அடையாளங்களும் அறிகுறிகளும் யாவை?
அமிலத்தன்மை என்பது எரிச்சல் உணர்வாக ஏற்படுகிறது, இது தொண்டையின் கீழ் பகுதியிலிருந்து மார்பெலும்பின் அடிப்பகுதி வரை நீடிக்கின்றது. இது இரண்டாவது மற்றும் மூன்றாவது டிரிம்ஸ்டர் (மும்மாதம்) கர்ப்பகாலத்தில் மிகவும் பொதுவாக ஏற்படக்கூடியது.
அமிலத்தன்மை அல்லது நெஞ்செரிச்சல் என்பது அடிப்படையில் வயிற்றின் உள்ளடக்கங்கள் பின்னோக்கி உணவு குழாயினுள் செல்லுதல் ஆகும். புளித்த ஏப்பம், குமட்டல் மற்றும் வாயில் புளிப்புச் சுவை போன்ற அறிகுறிகள் அமிலத்தன்மையுடன் சேர்ந்து இருக்கக்கூடியவை.
இதன் முக்கிய காரணங்கள் என்ன?
கர்ப்ப காலத்தில் ஏற்படும் அமிலத்தன்மை முக்கியமாக ஹார்மோன் மாற்றங்களால் ஏற்படுகிறது. புரோஜெஸ்ட்டிரோன் என்று அழைக்கப்படும் ஹார்மோன் காரணமாக கர்ப்பகாலத்தின் போது அடிக்கடி நெஞ்செரிச்சல்களின் அத்தியாயம் ஏற்படுகின்றது, இது செரிமான மண்டலத்தின் தசைகளை பாதிக்கின்றது, உணவு குழாயின் கீழ் வால்வைத் தளர்வடையச் செய்கிறது (உணவு எதிர்க்களிப்பை தடுக்கிறது) மேலும் சில உணவுகளை ஏற்கும் தன்மையை மாற்றியமைக்கலாம்.
கூடுதலாக, விரிவடைந்த கருப்பை அடிவயிற்றை சூழ்ந்து வயிற்றின் உள்ளடக்கங்களை மேல்நோக்கி தள்ளிவிடுகிறது, இதன் விளைவாகவே அமிலத்தன்மை மற்றும் எரிச்சல் உணர்வு ஏற்படுகின்றன.
இதனை கண்டறியும் முறை மற்றும் சிகைச்சையளிக்கும் முறை யாவை?
கர்ப்ப காலத்தில் ஏற்படும் அமிலத்தன்மை பொதுவாக அறிகுறிகளின் அடிப்படையில் கண்டறியப்படுகிறது. இதன் அத்தியாயங்கள் அடிக்கடி இருந்தால், மருத்துவர் ஆன்டசிட் மாத்திரைகளை பரிந்துரைக்கலாம்.
கர்ப்ப காலத்தில் அமிலத்தன்மை மிகவும் பொதுவாக ஏற்படக்கூடியதாக இருப்பதாக அறியப்படுவதாலும் மற்றும் பொதுவாக இது ஆபத்தான நிலைமையாக இல்லததாலும், இதை எளிமையான வீட்டு வைத்தியத்தின் மூலமே குணப்படுத்திவிடலாம். இதற்கான வீட்டு வைத்தியங்கள் பின்வருமாறு:
- இஞ்சி தேநீர் (மிதமாக பயன்படுத்தப்பட வேண்டும்).
- தண்ணீர்.
- நீர்மோர்.
- சூயிங் கம்.
- குளிர்ந்த பால்.
- தேங்காய் தண்ணீர்.
அமிலத்தன்மையின் அத்தியாயங்களை தடுக்கக்கூடியப் பல நடவடிக்கைகள் உள்ளன. அவை, அதை குறைப்பதற்கு மிகவும் உதவக்கூடியவையாக இருக்கின்றன. அவைகள் பின்வருமாறு:
- நாள் முழுவதும் தண்ணீர் மற்றும் திரவங்களை அதிகம் உட்கொள்ளவும்.
- மசாலா மற்றும் எண்ணெய் உணவுகள், மது (ஆல்கஹால்), சிட்ரஸ் பழங்கள் மற்றும் காபி ஆகியவற்றை தவிர்க்கவும். இவை அமிலத்தன்மையை தூண்டக்கூடும் அல்லது மோசமாக்கக்கூடும்.
- அதிக அளவு உப்பு அல்லது எண்ணெய் கொண்டு சமைத்த உணவு பொருட்கள் மற்றும் பிற தயார்-நிலையில்-சாப்பிடக்கூடிய உணவுகளை தவிர்க்கவும்.
- குறைவாக மற்றும் அடிக்கடி உணவு சாப்பிட வேண்டும். உங்கள் உணவை நன்றாக மென்று அதன் பின் விழுங்க வேண்டும்.
- நீண்ட நேரத்திற்கு பசியுடன் இருப்பதை தவிர்த்து விட வேண்டும்.
- உணவு அருந்தும் போது அதிக அளவு திரவங்களை குடிக்கக் கூடாது. கார்பனேடட் தண்ணீர் அல்லது சோடாவை தவிர்க்க வேண்டும்.
- உணவை அருந்திவிட்டு உடனே படுக்கைக்கு செல்லக் கூடாது.
- வயிற்றில் உள்ள அமிலம், உணவு குழாய்க்கு நுழையாதபடி தலையணையைப் பயன்படுத்தி, மேல் உடலை உயர்த்திக் கொள்ள வேண்டும்.