குடல்வால் அழற்சி - Appendicitis in Tamil

Dr. Rajalakshmi VK (AIIMS)MBBS

October 13, 2018

April 28, 2023

குடல்வால் அழற்சி
குடல்வால் அழற்சி

சுருக்கம்

குடல்வால் என்பது பெருங்குடலின் ஒரு பகுதியான கேயிகம் உடன் ஒட்டியிருக்கும் ஒரு மெல்லிய குழாய் போன்ற உறுப்பாகும். இது வயிற்றின் கீழ்ப்புற வலது பக்கத்தில் (மார்புக்கும் இடுப்புக்கும் இடையிலுள்ள பகுதி) அமைந்திருக்கிறது. நமது உடலில் குடல்வாலின் துல்லியமான வேலை என்னவென்று இன்னும் தெரியாமலே இருக்கிறது, ஆனால் மற்ற விலங்குகளில், அது செரிமானத்திற்கு உதவுகிறது. குடல்வால் வீக்கமடைந்து, வயிற்றின் கீழ்ப்புற வலது பக்கத்தில் கடுமையான வலியை ஏற்படுத்தும் போது, குடல்வால் அழற்சி ஒரு அவசர நிலையாக இருக்கிறது. இது தவிர, குடல்வால் அழற்சி உள்ள நபர்கள் வாந்தி, காய்ச்சல் மற்றும் கீழ் முதுகு வலி போன்ற மற்ற அறிகுறிகளையும் உணர்கிறார்கள். ஒரு நோய்கண்டறிதலை நிறுவ, மருத்துவர்கள் குறிகள் மற்றும் அறிகுறிகளைப் பார்க்கிறார்கள், ஒரு மருத்துவப் பரிசோதனை நடத்துகிறார்கள், மேலும் தேவைப்பட்டால் அல்ட்ராசவுண்ட், ஆய்வக சோதனைகள் மற்றும் சிடி ஸ்கேன்களுக்குப் பரிந்துரைக்கிறார்கள். அப்பெண்டெக்டமி அல்லது அப்பெண்டிசெக்டமி என்பது குடல்வால் அழற்சியை நீக்குவதற்கு அடிவயிற்றில் கீறி செய்யப்படும் ஒரு அறுவை சிகிச்சை நடைமுறையாகும். சில நிலைமைகளில், கூடவே ஒரு நுண்ணுயிர் எதிர்ப்பு சிகிச்சையும் பயன்படுத்தப்படலாம். குடல்வாலின் குறுகிய குழாய் மலம் அல்லது உணவினால் அடைக்கப்படும் போது, அது வெடித்து அதனுள்ளே இருப்பவற்றை சூழ்ந்திருக்கும் வயிற்றுத் தசைகளில் பரவச் செய்து நோய்த்தொற்றை ஏற்படுத்தக் கூடும். அதுபோன்ற நிலையில், சரியான நேரத்தில் இந்த நோய்த்தொற்றை கட்டுப்படுத்துவது அவசியம்.

குடல்வால் அழற்சி என்ன - What is Appendicitis in Tamil

குடல்வால் அழற்சி என்பது எந்த ஒரு வயதிலும் ஏற்படக்கூடிய ஒரு மருத்துவ அவசரநிலை. ஆனால், இது  10-30 வயது உள்ள நபர்களுக்கிடையே மிகப் பொதுவானது. இது பெருங்குடலில் இருந்து நீட்டிக் கொண்டிருக்கும் ஒரு சிறிய, குழாய் அல்லது விரல் போன்ற பையான,  குடல்வாலின் வலி மிகுந்த வீக்கம் அல்லது கட்டியாகும். குடல்வாலின் திறப்பு சிறியது, உணவு மற்றும் மலம் அதில் சேகாரமாக இயலும், அது சில நேரங்களில் ஒரு அடைப்பை ஏற்படுத்துகிறது. இந்த அடைப்பு ஒரு பாக்டீரியா தொற்றாக உருவாக முடியும். ஒருவேளை இந்த நிலையில் குடல்வால் வெடித்தால், அடிவயிற்றுப் பகுதி முழுவதும், சரியான நேரத்தில் சிகிச்சை அளிக்காவிட்டால் உயிருக்கு அச்சுறுத்தலாகக் கூடிய, பாக்டீரியா நோய்த்தொற்று பரவும். குடல்வால் வீங்கும் பொழுது, நீங்கள் உங்கள் வயிற்றில் இடைவெளி விட்ட வலியை (வருகிற மற்றும் போகிற) உணரலாம். அந்த வலி படிப்படியாக கடுமையானதாகவும் நிலையானதாகவும் மாறுகிறது. அது குடல்வால் இருக்கக் கூடிய கீழ்ப்புற வலது பக்கம் நிலை கொள்கிறது. நடத்தல், இருமல் மற்றும் வயிற்றை அழுத்துவது வழியை மேலும் மோசமடையச் செய்யும்காய்ச்சல், பசியின்மை மற்றும் வயிற்றுப்போக்கு இவைகளும் அவ்வப்போது குடல்வால் அழற்சியோடு இணைந்து வருகிறது.

ADEL 16 Gastul Drop
₹279  ₹310  10% OFF
BUY NOW

குடல்வால் அழற்சி அறிகுறிகள் என்ன - Symptoms of Appendicitis in Tamil

வயிற்றின் கீழ்ப்புற வலது பக்க வலி, குடல்வால் அழற்சியில் வழக்கமானது. இருப்பினும், நீங்கள் அதனோடு தொடர்புடைய, இவை போன்ற மற்ற அறிகுறிகளையும் உணர இயலும்:

 • வயிற்றுப்போக்கு அல்லது மலச்சிக்கல்.
 • குறைவான காய்ச்சல்.
 • குமட்டல் மற்றும் வாந்தி.
 • பசியின்மை.
 • வயிறு வீக்கம்.
 • வீங்குதல் அல்லது வாயுவை வெளியேற்ற இயலாமை.
 • தொப்புளை சுற்றி ஏற்படும் வலி வயிற்றின் கீழ்ப்பகுதி வலது பக்கத்துக்கு முன்னேறுதல்.

நடக்கும் போது, அடிவயிற்றை அழுத்தும் போது அல்லது இருமும்போது அறிகுறிகள் மேலும் மோசமாகலாம்.

குடல்வால் அழற்சி சிகிச்சை - Treatment of Appendicitis in Tamil

ஒருமுறை குடல்வால் அழற்சி உறுதியாகிவிட்டால், ஒரு அறுவை சிகிச்சையே, சிகிச்சைக்கான தேர்வு. உடனடி அறுவை சிகிச்சை, குடல்வாலில் துளை ஏற்படுவதற்கான வாய்ப்புகளைக் குறைக்கிறது. குடல்வாலை நீக்குவது அறுவை சிகிச்சை சொற்கூறுகளின் படி அப்பெண்டெக்டமி அல்லது அப்பெண்டிசெக்டமி என அழைக்கப்படுகிறது.

அறுவை முறை சிகிச்சை

ஒவ்வொரு குடல்வால் அழற்சி நிலைகள், இருக்கின்ற வாய்ப்புகள், தனிநபர் விருப்பம் இவற்றைப் பொறுத்து, அப்பெண்டெக்டமி செய்வதற்கு பின்வரும் ஏதேனும் ஒரு முறை பயன்படுத்தப்படலாம்:

 • லேப்ராஸ்கோபிக் அறுவை சிகிச்சை  
  இதில் மீண்டு வரும் பருவம் குறுகியதாக இருப்பதால், இது மிகவும் விரும்பப்படும் முறையாகும். சிறப்புக் கருவிகளும் ஒரு கேமரா இணைக்கப்பட்ட நெகிழ்வான ஒரு குழாயும், வயிற்றில் ஏற்படுத்தப்பட்ட சிறிய வெட்டுக்கள் வழியாக குடல்வால் அழற்சி இருக்குமிடத்தைக் கண்டறிந்து நீக்குவதற்குப் பயன்படுகிறது.
 • லேப்ரோட்டமி
  இந்த அறுவை சிகிச்சையில், மருத்துவர் குடல்வால் அழற்சியை நீக்க ஒரே ஒரு வெட்டு மட்டுமே உருவாக்குகிறார். வயிற்றின் கீழ்ப்புற வலதுபக்கத்தில் ஒரு வெட்டு உருவாக்கப்படுகிறது. பெரிடோனிட்டிஸ் எனப்படும் அடிவயிற்றின் உட்புற சவ்வில் ஏற்படும் ஒரு நோய்த்தொற்று காணப்படும்போதும் இந்த நடைமுறை விரும்பப்படுகிறது.
 • திறந்த அறுவை சிகிச்சை
  பின்வரும் நேரங்களில் லேப்ராஸ்கோப்பிக்குப் பதிலாக ஒரு திறந்த அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது:
  • குடல்வால் அழற்சி உள்ள நபர் ஏற்கனவே வயிற்றுப் பகுதியில் அறுவை சிகிச்சை செய்திருந்தால்.
  • குடல்வால் திரட்சி எனப்படும் ஒரு கட்டி உருவாகி இருப்பது.
  • குடல்வால் அழற்சி வெடிப்புகள்.
 • நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்து சிகிச்சை
  சில ஆய்வுகளின் படி, குடல்வால் அழற்சிக்கு செய்யப்படும் அறுவை சிகிச்சைகள் மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்து சிகிச்சைகளின் விளைவுகளை ஒப்பிடும் போது 70% குடல்வால் அழற்சி நிலைகள், அறுவை சிகிச்சை தேவைப்படாமல் நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகளால் குணப்படுத்தப்படுகிறது.
  வழக்கமாக, ஒரு அறுவை சிகிச்சையில் ஈடுபட முடியாத மிகவும் பலவீனமான நபர்களுக்கு நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகள் வழங்கப்படுகின்றன. (நரம்பு வழியாக செலுத்தப்படுவது) நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகள், முன்னுரிமையாக செபலொஸ்போரின்ஸ், அப்பெண்டோக்டமிக்கு முன்னால் கொடுக்கப்படுகிறது. குடல்வால் அழற்சி வெடித்துத் திறந்தால் (துளையுள்ள குடல்வால் அழற்சி) சீழ் உடனடியாக உறிஞ்சப்படுகிறது, மேலும் நோயாளியின் இரத்த வெள்ளை அணுக்களும் உடல் வெப்பநிலையும் இயல்பாகும் வரை நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகள் வழங்கப்படுகின்றன.

வாழ்க்கைமுறை நிர்வாகம்

இந்தக் குறிப்புகள், நீங்கள் சிகிச்சைக்குப் பின் வீட்டுக்கு அனுப்பப்பட்ட பிறகு, மீண்டு வர உதவிகரமாக இருக்கும்:

 • உங்கள் மருத்துவர் பரிந்துரைக்காமல் எந்த நுண்ணுயிர் எதிர்ப்பு  எடுத்துக் கொள்ள வேண்டாம்.
 • உங்களுக்கு இன்னமும் காய்ச்சல் இருந்தால், ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கு ஒருமுறையான உங்கள் உடல் வெப்பநிலை பற்றிய குறிப்புகளை வைத்திருங்கள். அடுத்த முறை மருத்துவரை சந்திக்க செல்லும்போது அதைக் கொண்டு செல்லுங்கள்.
 • வலிநிவாரணிகளைப் பயன்படுத்தாதீர்கள். வலிக்காக மருந்துகள் எடுத்துக் கொள்வது, குடல்வால் அழற்சி நன்றாகிறதா அல்லது மோசமாகிறதா என்பதை அறிந்து கொள்வதை கடினமாக்குகிறது.
 • அடுத்த நாள் மற்றொரு உடல்நலப் பரிசோதனைக்கு செல்வதாக இருந்தால் குடிக்கவோ சாப்பிடவோ வேண்டாம்.
 • மலமிளக்கிகளையோ எனிமாக்களையோ பயன்படுத்த வேண்டாம்; அவை, கிழிவு குடல்வாழ் அழற்சிக்கான அபாயத்தை அதிகரிக்கக் கூடும்.
 • தாரளமான அளவு ஓய்வெடுங்கள் மற்றும் போதுமான அளவு தூங்குங்கள். அது அப்பெண்டெக்டமியில் இருந்து விரைவாக மீண்டு வர உதவுகிறது.
 • வயிற்றுப்பகுதி சதைகளுக்கு சிரமம் கொடுப்பதைத் தவிருங்கள் மற்றும் கனமான பொருட்களை தூக்காதீர்கள்.
 • மலச்சிக்கலைத் தடுப்பதாலும் குடல் அசைவுகளை எளிமையாக்குவதாலும் நார்ச்சத்து உள்ளவற்றை அதிகமாக உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளவும்.
 • தினந்தோறும் அதிகமான நீர் அருந்த வேண்டும்.

ஒருவேளை இவ்வாறு இருந்தால் உடனடியாக மருத்துவரைத் தொடர்பு கொள்ளவும்:

 • சிறுநீரில் அல்லது வாந்தி எடுக்கும் போது இரத்தம்.
 • குடலைக் காலி செய்வதில் நீடிக்கும் பிரச்சினை.
 • நிலையான வாந்தி.
 • தலைசுற்றல்.
 • வயிற்று வலியின் தீவிரம் அதிகரித்தல்.


மேற்கோள்கள்

 1. MedlinePlus Medical Encyclopedia: US National Library of Medicine; Appendicitis
 2. National Health Service [Internet]. UK; Overview - Appendicitis
 3. Hanumant P Lohar, Murtuza Ali Asger Calcuttawala, Dakshyani Satish Nirhale, Virendra S Athavale, Manish Malhotra, Nishant Priyadarshi. Epidemiological aspects of appendicitis in a rural setup. 2014; volume 7; D. Y. Patil Medical College, Hospital and Research Center; Pune, Maharashtra.
 4. Better health channel. Department of Health and Human Services [internet]. State government of Victoria; Appendicitis
 5. Margenthaler JA, Longo WE, Virgo KS, Johnson FE, Oprian CA, Henderson WG, Daley J, Khuri SF. Risk factors for adverse outcomes after the surgical treatment of appendicitis in adults.. Ann Surg. 2003 Jul;238(1):59-66. PMID: 12832966
 6. Stanford Health Care [Internet]. Stanford Medicine, Stanford University; Appendicitis
 7. National Institute of Diabetes and Digestive and Kidney Diseases [internet]: US Department of Health and Human Services; Symptoms & Causes of Appendicitis
 8. Cleveland Clinic. [Internet]. Cleveland, Ohio. Appendicitis: Management and Treatment
 9. MSDmannual consumer version [internet].Appendicitis. Merck Sharp & Dohme Corp. Merck & Co., Inc., Kenilworth, NJ, USA
 10. National Health Service [Internet]. UK; Overview - Abscess

குடல்வால் அழற்சி க்கான மருந்துகள்

Medicines listed below are available for குடல்வால் அழற்சி. Please note that you should not take any medicines without doctor consultation. Taking any medicine without doctor's consultation can cause serious problems.