தமனிக்கூழ்மைத் தடிப்பு (ஆத்தெரோசிகிளீரோசிஸ்) என்றால் என்ன?
தமனிக்கூழ்மைத் தடிப்பு என்பது தமனியின் சுவர்களில் பிளேக்குகள் குவிவதால் அவை கடினப்படுவதும் குறுகுவதுமான குணாதிசயங்களை கொண்ட உடலின் தமனிகள் பாதிக்கப்படும் ஒரு நிலையாகும்.
அதன் சுவர் கடினப்பட்டு தமனி குருகுவதன் காரணமாக சம்பந்தபட்ட உடல் பாகத்திற்கு குறைவான ரத்தம் வழங்கப்படுகிறது.
தமனிக்கூழ்மைத் தடிப்பின் முக்கிய அறிகுறிகள் மற்றும் நோய்க்குறிகள் என்னென்ன?
- ஆரம்ப கால தமனிக்கூழ்மைத் தடிப்பில் எந்த முக்கிய அறிகுறியும் காணப்படுவதில்லை.அது மெதுவாக முன்னேறும் ஒரு நோயாகையால் தொடக்க நிலையில் அது கண்டறியப் படாமலே போய்விடுகிறது.
- தமனிக்கூழ்மைத் தடிப்பின் அறிகுறிகள் பாதிக்கப்பட்ட தமனிகளின் அமைந்திருக்கும் இடத்தை பொறுத்து அமைகிறது.
- இதயத்துக்கு செல்லும் தமனிகளில் அடைப்பு இருந்தால் இடத கை,தோள் அல்லது தாடைக்கு (ஆன்ஜினா) பரவும் நெஞ்சு வலி ஏற்படும்.
- தமனிக்கூழ்மைத் தடிப்பால் மூட்டின் தமனி பாதிக்கப்பட்டிருந்தால் மூட்டுகளில் வலியும் உணர்வினமையும் ஏற்படும்.
- ஒருவேளை தமனிக்கூழ்மைத் தடிப்பு தமனிகளில் உள்ளதென்றால் குழப்பம், தலைவலி, மூட்டுகளில் பலவீனம்,பார்வைக்குறைபாடு மற்றும் தலைசுற்றல் போன்ற அறிகுறிகள் தோன்றும்.
இதன் முக்கிய காரணங்கள் என்ன?
வாழ்க்கை முறை, உணவு முறை மற்றும் பழக்கங்கள் மற்றும் சில மருத்துவ நிலையுடன் தொடர்புடைய காரணிகளே தமனிக்கூழ்மைத் தடிப்பு ஏற்படுவதற்கான காரணங்களாகும்.
- உயர் ரத்த அழுத்தம், அதிக கொழுப்புச்சத்து மற்றும் நீரிழிவு போன்ற மருத்துவ நிலைகள் ஒருவரை சுலபமாக தமனிக்கூழ்மைத் தடிப்பால் பாதிக்கப்பட செய்கின்றன.
- புகை பிடிப்பது, மது அருந்துவது, உடல் பருமன் மற்றும் உடலுழைப்பில்லாத வாழக்கை முறை ஆகியவை இதன் அபாய காரணிகளாகும்.
- அதிக கொழுப்புச்சத்து உள்ள உணவுமுறை அல்லது உணவுமுறையில் அதிக சர்க்கரை அல்லது உப்பு சேர்ப்பது போன்றவையும் இதன் பங்களிப்பு காரணிகளாகும்.
இது எவ்வாறு கண்டறியப்படுகிறது மற்றும் சிகிச்சையளிக்கப்படுகிறது?
இதை கண்டறிவதென்பது நோயாளியின் புகார்கள்,மருத்துவ வரலாறு மற்றும் உடல் பரிசோதனையை அடிப்படையாக கொண்டு அமைகிறது. உடல் பரிசோதனையின் போது இதய நோய் நிபுணர் நாடித்துடிப்பு மற்றும் இதயத்துடிப்பின் வலிமையை சோதித்து இதயத்தில் ஏதேனும் அசாதாரண சத்தங்கள் உள்ளதா என கேட்பார்.
தமனிக்கூழ்மைத் தடிப்பை கண்டறிவதற்கான விசாரணைகள் பின்வருமாறு:
- கொழுப்புச்சத்து,சர்க்கரை, சோடியம் மற்றும் புரதங்களின் அளவுகளை மதிப்பிடுவதற்கு ரத்த சோதனைகள் செய்யப்படும்..
- தமனியில் அடைப்புள்ளதா என்பதை சோதிக்க சிடி ஸ்கேன் செய்யப்படுகிறது.
- ஒரு சாயத்தை பயன்படுத்தி செய்யப்படும் ஆன்ஜியோக்ராம் மூலம் அடைப்புகள் உள்ளதா என சோதிக்கிறது.
- அடைப்புள்ள தமனி அமைந்திருக்கும் இடத்தை கண்டறிவதற்கு ஒரு டாப்ளர் அல்ட்ராசவுண்டும் செய்யப்படுகிறது.
- மற்ற விசாரணைகளில் மனஅழுத்திற்கான சோதனையும் ஈசிஜியும் அடங்கும்.
தமனிக்கூழ்மைத் தடிப்பிற்கான சிகிச்சைகள் இவையாகும்:
- புகைபிடிப்பதை விடுதல், முறையான உடற்பயிற்சி செய்தல் மற்றும் சம நிலையான உணவு முறையை பின்பற்றுதல் போன்ற முக்கிய வாழ்க்கை முறை மாற்றங்கள் இதன் நிலையை மேம்படுத்தும்.
- மருந்துகளில் ஆன்டிகோயாகுலன்ட்கள் (இரத்தஉறைவுத் தடுப்பான்கள்), இரத்த அழுத்தத்தை குறைக்க சிறுநீரிறக்கிகள் மற்றும் கொழுப்புச்சத்தை கட்டுப்படுத்தும் மருந்துகள் போன்றவை அடங்கும்.
- அடைப்பு தீவிரமானதாக இருந்தால் ஒரு இதய நிபுணரால் பைபாஸ் போன்ற அறுவை சிகிச்சையோ அல்லது ஒரு ஆன்ஜியோபிளாஸ்ட்டியோ செய்யப்படுகிறது.
தமனிக்கூழ்மைத் தடிப்பிற்கான வீட்டு பராமரிப்புகள்:
- கொழுப்புச்சத்துள்ள உணவையும் சோடியம் அதிகமுள்ள உணவையும் உண்பதை தவிருங்கள்.புரதச்சத்து நிறைந்துள்ள உணவுகளை சேர்த்துக்கொள்ளுங்கள்.
- குறைந்தது 30 நிமிடங்களாவது தினமும் உடற்பயிற்சி செய்யுங்கள்.
- உங்கள் மனஅழுத்த நிலைகளை கட்டுப்பாட்டில் வைத்திருங்கள் மற்றும் திடீரென்று உங்கள் வேலை செய்யும் திறனில் ஏதேனும் குறைபாடு தென்பட்டால் ஒரு மருத்துவரை கலந்தாலோசியுங்கள்.