தொப்புள் நோய்த்தொற்று என்றால் என்ன?
தொப்புள் நோய்த்தொற்று என்பது பாக்டீரியா அல்லது பூஞ்சை காளான் தொப்புள் பகுதியில் வளர்வதால் ஏற்படுகின்றது, இது சுகாதாரமற்று இருப்பதால் உண்டாகிறது.
நோயின் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை?
தொப்புள் நோய்த்தொற்றின் அறிகுறிகள் பின்வருமாறு:
- பாதிக்கப்பட்ட பகுதியில் இருந்து ஏதேனும் திரவம் போல் வடிவது.
- சொறி, தடிப்பு மற்றும் தொப்புளை சுற்றி உள்ள பகுதி சிவந்து காணப்படுவது.
- அரிப்பு.
- தோல் உறிதல்.
- தொப்புள் தோலின் மேல் உள்ள பக்கு உதிர்வு.
- துர்நாற்றம்.
- தொப்புள் பகுதியில் நீர்க்கட்டி.
- தொப்புள் பகுதியில் வலி ஏற்படுதல்.
- தொப்புள் மென்மையாக இருத்தல்.
இதன் காரணங்கள் யாவை?
தொப்புள் நோய்த்தொற்று என்பது பாக்டீரியா அல்லது பூஞ்சை காளான் வளர்வதால் ஏற்படுகின்றது. மோசமான சுகாதாரம் பாக்டீரியாவின் வளர்ச்சிக்கு காரணமாகி அதனை நோய் தொற்றாக மாற்றுகிறது.இந்த நோய் தொற்று பொதுவாக தொப்புள் குத்துவதாலும் எதாவது காயத்தாலும் ஏற்படும். எனவே தொப்புள் குத்தும் பொழுது ஏற்படும் திறந்த காயம் தொற்று நோயாக மாறும் ஆபத்து உள்ளது.
சர்க்கரை நோய் உள்ளவர்களும் இந்த நோயால் பாதிக்கப்பட அதிக வாய்ப்புள்ளது. ஏனெனில் அதிக அளவு சர்க்கரை உடலில் இருந்தால் அது பாக்டீரியா மற்றும் பூஞ்சைக் காளான் வளர உதவிடும்.
இது எப்படி கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்க படுகிறது?
இந்த தொப்புள் நோய்த்தொற்று கண்டறிய மருத்துவர் உடல் பரிசோதனை செய்வார். எனினும் தொற்றுக்கான காரணங்களை கண்டறிய மருத்துவர் உங்கள் தொப்புளை சுற்றி உள்ள பகுதியில் அல்லது வடிதல் ஏற்படும் இடத்திலிருந்து தோலை பரிசோதனைக்கு எடுத்து காரணம் என்னவென்று கண்டறிவார்.
மருத்துவர் இதற்கு பூஞ்சைக்காளான் எதிர்ப்பு கிரீம்கள் அல்லது களிம்பு ஓயின்மெண்ட் பரிந்துரைப்பார். மருதத்துவர் சர்க்கரை குறைவாக இருக்கும்படியான உணவு திட்டத்தை பரிந்துரைப்பார். அது விரைவில் குணமடைய உதவும். பாதிக்கப்பட்ட பகுதி ஈரமில்லாமல் மட்டும் சுத்தமாக இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். சர்க்கரை நோயாளிகள் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்த வேண்டும் அப்பொழுது தான் தொற்று சீக்கிரமாக குணமடையும் மற்றும் எதிர்காலத்தில் மீண்டும் வராமலும் தடுக்க முடியும்.