மூளை இரத்த ஒழுக்கு என்றால் என்ன?
மூளையில் உள்ள இரத்த நாளம் வெடிப்பதன் காரணமாக மூளையிலும் அதனை சுற்றியும் ஏற்படும் இரத்தப்போக்கு அடிப்படியில் வகைப்படுத்தப்பட்ட ஒரு நிலையே மூளை இரத்த ஒழுக்கு ஆகும். இது மூளை இரத்தக்கட்டு என்றும் அழைக்கப்படுகிறது.
மூளை இரத்த ஒழுக்கு மூளைப் பகுதியில் அழுத்தத்தை அதிகரிக்கலாம் மற்றும் ஆக்ஸிஜன் அளவை குறைக்கலாம். மேலும், இதனால் மூளை செல்கள் அழிக்கப்படலாம். மூளை இரத்த ஒழுக்குக்கான அறிகுறிகளை உடனடியாக கவனிக்க வேண்டும்.
பாதிக்கப்பட்ட பகுதியைப் பொறுத்து, நான்கு வகையான மூளை இரத்த ஒழுக்குகள் உள்ளன:
- எபிடூரல்/தண்டுவட மேலுறை இரத்த ஒழுக்கு.
- சப்டூரல்/மூளை நடு உறையடி இரத்த ஒழுக்கு.
- சப்அரக்னாய்டு/வலையுறையடி இரத்த ஒழுக்கு.
- இன்ட்ராசெரிப்ரல்/பெருமூளை இரத்த ஒழுக்கு.
நோயின் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை?
,மூளையில் இரத்தப்போக்கு ஏற்படுகையில், மூளை செல்களால் எந்த ஒரு இடையூறையும் பதிவு செய்ய முடியாமல் போவதன் காரணமாக, தலைவலி ஏற்படுவதில்லை. ஆனால், மூளையுறைகளில் இரத்தப்போக்கு ஏற்படும் போது, கடுமையான தலைவலியே மிகவும் பொதுவான அறிகுறியாகும்.
பிற அறிகுறிகள் பின்வருமாறு:
- பலவீனம் அல்லது கூச்ச உணர்வு அல்லது உணர்வின்மை (ஒரு பக்கத்தில்).
- பேசுவதில் சிரமம்.
- சமநிலை இழப்பு.
- பார்வை குறைபாடு.
- சுய நினைவு இழப்பு.
- வலிப்பு.
நோய் தாக்குதலுக்கான முக்கிய காரணங்கள் என்ன?
பல காரணங்களால் மூளை இரத்த ஒழுக்கு ஏற்படலாம். அவை பின்வருமாறு:
- மூளையில் ஏற்படும் பேரதிர்ச்சி அல்லது காயம்.
- பெருமூளை தமனி பலவீனமடைதல் அல்லது முறிதல்.
- குருதிச் சிறுதட்டுக்கள்/பிளேட்லெட் குறைபாடு போன்ற இரத்தப்போக்கு கோளாறுகள்.
- கல்லீரல் அழற்சி போன்ற கல்லீரல் நோய்கள்.
- உயர் இரத்த அழுத்தம்.
- மூளை கட்டி.
அதிகமான இரத்த அழுத்தம் மூளை இரத்த ஒழுக்கிற்கான மிகவும் பொதுவான காரணம் ஆகும். இது பெருமூளை நாளங்களை பாதிப்படையச்செய்து, இரத்தக் கட்டு ஏற்படுவதற்கு வழிவகுகிறது. மேலும் இதனால், பக்கவாதம் ஏற்படும். பாதிக்கப்பட்டவரிடத்தில், பக்கவாதம் ஏற்படும் சாத்தியம் 13 சதவீதம் ஆகும்.
காயத்தினால் ஏற்படும் இரத்தக்கசிவு, திசுக்களை எரிச்சலடையச்செய்து, வீக்கம் அடையச் செய்கிறது. இது பெருமூளை நீர்க்கட்டு/நீர் வீக்கம் என்று அழைக்கப்படுகின்றது. இதனால், இரத்த கழலை ஏற்பட்டு, அருகில் உள்ள மூளை திசுக்களில் இரத்த அழுத்தம் அதிகரித்து, மூளை உயிரணுக்களுக்கு குறைந்த அளவில் ஆக்ஸிஜனை(பிராணவாயு) வழங்குகிறது. இதையொட்டி, மூளை உயிரணுக்கள் செயலிழந்து விடுகின்றன.
இதன் பரிசோதனை முறைகள் மற்றும் சிகிச்சை முறைகள் யாவை?
அறிகுறிகளின் அடிப்படையில், இரத்தக் கசிவு ஏற்பட்டிருக்கும் இடத்தை அறிய, மருத்துவர் ஒரு எம்.ஆர்.ஐ. ஸ்கேன் அல்லது சி.டி. ஸ்கேன் மேற்கொள்ளும்படி அறிவுறுத்தலாம். பிற சோதனைகள் பின்வருமாறு:
- குருதிக் குழாய் அமைப்புப்படம்/ஆஞ்சியோகிராம் - கசிவு ஏற்படும் சரியான இடத்தை அறிய, மூளை தமனியில் ஒரு சாயத்தை(டை) உட்புகுத்துகின்றனர்.
- கணிப்பொறி பருவரைவு குருதிக் குழாய் வரைவி/கணிப்பொறி பருவரைவு ஆஞ்சியோகிராஃபி.
- செரிப்ரோஸ்பைனல்/மூளை தண்டுவட திரவ பரிசோதனை.
- முதுகுத் தண்டுவட துளையிடுதல்.
நிலையான நிலைமை ஏற்படும் வரை, ஆரம்ப சில மணி நேரங்களில், நோயாளியை கூர்ந்து கவனித்தல் மிகவும் அவசியமானதாகும். இரத்த அழுத்தம் மற்றும் சுவாசத்தை நிலைப்படுத்துதல் இதன் முதல் படியாகும். இதனைத் தொடர்ந்து அறுவை சிகிச்சை தேவைப்பட்டால், அறிவுறுத்தப்படுகிறது.
மூளை அறுவை சிகிச்சை ஒரு நூதனமான சிகிச்சை முறையாகும். பாரம்பரிய அறுவை சிகிச்சையை ஒப்பிடுகையில் விரைவில் நோயிலிருந்து மீட்பதோடு, குறைவான வடுக்களையே ஏற்படுத்துகிறது.
அழுத்தத்திலிருந்து விடுவு பெற, மூளையை சுற்றியுள்ள இரத்தம் வெளியேற்றப்படுகிறது.
இரத்த அழுத்தம், வலிப்புத்தாக்கங்கள் மற்றும் தலைவலி ஆகியவற்றை கட்டுப்படுத்த மருந்துகள் பயன்படுத்தப்படுகின்றன. மூளை இரத்த ஒழுக்கின் அறிகுறிகளை கட்டுப்படுத்துவதற்கு, அடிப்படை காரணங்களை சரி செய்வது மிகவும் முக்கியமானதாகும்.
மூளை இரத்த ஒழுக்கின் தாக்கத்தின் அளவு, மற்றும் இடத்தைப் பொறுத்து, சிகிச்சைக்கான எதிர்ச்செயல் மாறுபடுகிறது.
சில நேரங்களில், சரியான மருத்துவ கவனிப்பு இருந்தும்கூட மரணம் ஏற்படலாம்.
மொத்தத்தில், இதற்கான நோய்முடிவு முன்கணிப்பு குறிப்பிடும் வகையில் இல்லை. பல நோயாளிகள் நன்றாக வாழ்கின்றனர், அதே சமயம் மூளையின் சில பகுதிகளில் இரத்தப்போக்கு ஏற்படும் போது அல்லது இரத்தப்போக்கு அதிகமாக இருக்கும் போது சிலர் நன்றாக வாழ்வது இல்லை. சிலர் தொடர்ச்சியான அல்லது நீண்டகால பலவீனம், புலன்கள் சார்ந்த குறைபாடுகள், வலிப்புத்தாக்கங்கள், தலைவலி அல்லது நினைவக பிரச்சினைகள் ஆகியவற்றுடன் வாழ்கின்றனர்.