மூச்சுக் குழாய் தளர்ச்சி என்றால் என்ன?
மூச்சுக் குழாய் தளர்ச்சி என்பது காற்று பாதையின் தொற்று காரணமாக சுவாசப்பாதையின் சுவர்கள் தடிமனாக மாறும் நுரையீரலின் ஒரு நீண்டகால நிலைமை ஆகும். மூச்சுக்குழாய் சுவர்கள் தளர்வாகலாம் மற்றும் வடுக்கள் உண்டாகலாம், இதனால் நிரந்தச சேதம் ஏற்படலாம்.
இந்த நிலைமையில், சளியை வெளியேற்றும் தன்மையை சுவாசப்பாதை இழக்கிறது.இதனால் சளி ஒன்றுசேர்ந்து பாக்டீரியா வளர்வதற்கான சாதகமான சூழ்நிலைகளை உண்டாக்குகிறது, இது மீண்டும் மீண்டும் நுரையீரல் தொற்றுக்கு வழிவகுக்கிறது.
நுரையீரலில் மீண்டும் மீண்டும் தொற்று ஏற்பட்டு கொண்டிருந்தால் சுவாசப்பாதை மூலம் காற்று உள்ளே வரும் மற்றும் வெளியேறும் திறன் குறைகிறது, இதையொட்டி, முக்கிய உறுப்புகளுக்கு செல்லும் ஆக்சிஜென் (பிராண வாயு) குறைகிறது.
நோயின் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை?
மூச்சுக் குழாய் தளர்ச்சியின் பொதுவான அறிகுறிகள் பின்வருமாறு:
- அடிக்கடி இருமலுடன் கபம் வெளியேறுதல்.
- கடுமுயற்சியின் பொது மூச்சுத்திணறல் அதிகரித்தல்.
- சுவாசிக்கும் போது விசில் சப்தம் கேட்பது (மூச்சு இழுப்பு).
- மார்பில் வலி.
- விரல்நுனிப் பெருக்கம் - நகத்திற்கு கீழ் உள்ள திசு தடித்தல் மற்றும் விரல்நுனி வட்டமாதல் மற்றும் குமிழ்வடிவமாதல்.
- காலம் செல்ல செல்ல, இருமல் வரும்போது சளியுடன் இரத்தம் சேர்ந்து வருதல்.
நோய் தாக்குதலுக்கான முக்கிய காரணங்கள் என்ன?
பெரும்பாலான நிகழ்வுகளில், சுவாச பாதையின் நோய்த்தொற்றின் காரணமாக மூச்சுக் குழாய் தளர்ச்சி ஏற்படுகிறது மற்றும் இதனால் இதன் சுவர்கள் தடிமனாக மாறுகிறது. எனினும், சில சந்தர்ப்பங்களில், இதன் காரணம் தெரியவில்லை. (காரணம் அறியப்படாத மூச்சு குழாய் விரிவு).
சில காரணிகள் பின்வருமாறு:
- நுரையீரல் அழற்சி, கக்குவான் இருமல் அல்லது காசநோய் போன்ற நாள்பட்ட நுரையீரல் நோய்களின் வரலாறு.
- முடக்கு வாதம்.
- குரோன்'ஸ் நோய், இது ஒரு குடல் அழற்சி நோய்.
- குறைந்த நோய் எதிர்ப்பு சக்தி (நோய் எதிர்ப்பு தன்மை நிலை).
- நீர்க்கட்டி ஃபைப்ரோஸிஸ்- ஸ்வாசப்பாதையில் சளி அடையும் ஒரு மரபணு கோளாறு. இது பாக்டீரியா வளர மிகவும் சாதகமான சூழ்நிலை ஆகும்.
- நெடுங்கால நுரையீரல் அடைப்பு நோய் (சி.ஓ.பி.டி).
இது எப்படி கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகின்றது?
மருத்துவர் இதயத்துடிப்பளவி மூலமாக நுரையீரலில் அசாதாரணமான சப்தத்தை கவனிப்பார் மற்றும் தொற்றின் இருப்பை பரிசோதிக்க முழுமையான இரத்த பரிசோதனைகள் பரிந்துரைக்கப்படலாம்.
- சளி பரிசோதனை- இது பாக்டீரியா அல்லது பூஞ்சை உள்ளதா என்பதைக் கண்டறிய உதவுகிறது.
- மார்பில் எக்ஸ் - ரே சோதனை அல்லது சிடி ஸ்கேன் சோதனை
- எவ்வளவு வேகமாக காற்று உள்ளே மற்றும் வெளியே வந்துபோகிறது என்பதையும் அதன் அளவைக் கணக்கிடவும் நுரையீரல் செயல்பாடு சோதனை செய்யப்படுகிறது. மேலும் இது இரத்தத்தில் எவ்வளவு பிராணவாயு கடந்து செல்கிறது என்பதையும் சரிபார்க்கிறது.
- உடலில் நீர்க்கட்டி ஃபைப்ரோஸிஸ் உள்ளதா என சோதிக்க வியர்வை பரிசோதனை.
- சுவாசப்பாதைகளின் உள்ளே பார்க்க நுரையீரல் ஊடல் சோதிப்பு செய்யப்படலாம்.
மூச்சுக்குழாய் விரிவு பொதுவாக கீழ்கண்டவாறு நிர்வகிக்கப்படுகிறது:
- நுண்ணுயிர்கொல்லிகள் போன்ற மருந்துகள், சளி நீக்க மருந்து மற்றும் முகோலிடிக் ஆகியவை பொதுவாக பயன்படுத்தப்படுகின்றன. மற்ற மருந்துகளான மூச்சு குழாய் தளர்த்தி மற்றும் இயக்க ஊக்கி மருந்துகள் தேவைக்கேற்ப பயன்படுத்த படுகிறது.
- நீரேற்றம் - தண்ணீர் நிறைய குடிக்க பரிந்துரைக்கபடுகிறது, ஏனென்றால் இது காற்று பாதையை ஈரமாக்குகிறது மற்றும் சளி ஒட்டும் தன்மையை குறைகிறது அதனால் மிக சுலபமாக சளியை வெளியேற்றிட முடியும்.
- நேரடி மார்பு சிகிச்சை.
- பிராணவாயு சிகிச்சை.
மூச்சுக்குழாய் தளர்ச்சியுடன் வாழ்தல்:
- மூச்சுக்குழாய் தளர்ச்சியால் நீங்கள் கஷ்டப்பட்டால், நிமோனியா போன்ற நுரையீரல் தொற்றுநோயை தவிர்க்க நீங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும். பாக்டீரியல் தொற்றுக்களைத் தவிர்ப்பதற்க்காக உங்கள் கைகளை அடிக்கடி கழுவவும் மற்றும் உங்கள் மருத்துவரிடம் பாக்டீரியா தடுப்பூசிகளை போட்டுக்கொள்ளவும்.
- நீங்கள் ஆரோக்கியமான உணவு பழக்கங்களை பின்பற்ற வேண்டும், புகைபிடிப்பதை தவிர்க்கவும் மற்றும் நன்றாக தண்ணீர் குடிக்கவும்.
- உடல் ரீதியாக சுறுசுறுப்பாக செயல்படுதல் உதவும்.