குளூட்டன் ஒவ்வாமை என்றால் என்ன?
குளூட்டன் ஒவ்வாமை என்பது செரிமான அமைப்பை/மண்டலத்தை பாதிக்கும் ஒரு மரபணு சார்ந்த தன்னெதிர்ப்பு கோளாறு ஆகும். இந்த கோளாறில், கம்பு, கோதுமை மற்றும் பார்லி ஆகியவற்றில் அதிகமாக காணப்படும் குளூட்டன் என்று அழைக்கப்படும் புரதத்திற்கு எதிராக நமது உடல் நோயெதிர்ப்புத்திறனை வெளிப்படுத்தும் பொருட்டு, அதன் எதிர்செயலாக ஒவ்வாமை ஏற்படுத்துகிறது. குளூட்டன் நிறைந்த உணவை உட்கொண்டபின், குடல் நுண்ணுறுஞ்சியின் வீக்கம் காரணமாக, குடல் அமைப்பில் பாதிப்பு ஏற்படுகிறது. எனவே, செரிமான பிரச்சனைகள் எழும், மேலும் அது தீவிரமாகவும் இருக்கலாம். இந்த செயல்முறை மேலும் ஊட்டச்சத்து பற்றாக்குறைக்கு வழிவகுக்கிறது.
நோயின் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை?
இதனால் குடல் சார்ந்த அறிகுறிகள் பொதுவாக காணப்படும், இது பெரியவர்கள் மற்றும் குழந்தைகளிடத்தில் மாறுபடும். இவற்றில் சில கீழே பட்டியலிடப்பட்டுள்ளன:
- வயிற்றுப்போக்கு.
- அடிவயிற்று வீக்கம்.
- மலச்சிக்கல்.
- வாந்தி.
- மங்கலான, இலகுவான, மிதக்கும் மலம்.
- அஜீரணம்.
- நெஞ்செரிச்சல்.
- அமிலப் பின்னோட்ட நோய்.
செரிமான அமைப்பில் தென்படும் அறிகுறிகளைத் தவிர்த்து மற்ற அறிகுறிகள் பின்வருமாறு:
- இரத்த சோகை மற்றும் எடை இழப்பு.
- எலும்பு அடர்த்தி இழப்பு.
- தோலில் அரிப்பு மற்றும் தடிப்பு (மேலும் படிக்க: தோல் தடிப்பிற்கான சிகிச்சை)
- பல்மிளரியின் நிறச்சிதைவு அல்லது இழப்பு.
- தலைவலி.
- வாய் புண்.
நோய் தாக்குதலுக்கான முக்கிய காரணங்கள் என்ன?
குளூட்டன் ஒவ்வாமை மரபணு காரணிகள், சுற்றுச்சூழல் காரணிகள் மற்றும் சில நோய்த்தடுப்பு கோளாறுகளால் ஏற்படுகிறது, இவை உணவுகளில் உள்ள குளூட்டனுக்கு எதிராக நோயெதிர்ப்பு எதிர்வினைகளை உருவாக்குகின்றன. இது வகை 1 நீரிழிவு நோய், பெருங்குடல் அழற்சி/குடற்புண்கள், தைராய்டு கோளாறுகள், கால்-கை வலிப்பு மற்றும் மனநலிவு நோய் போன்ற சில அடிப்படை உடல் நலக்குறைவுகள் காரணமாக ஏற்படலாம்.
இதன் பரிசோதனை முறைகள் மற்றும் சிகிச்சை முறைகள் யாவை?
குளூட்டன் ஒவ்வாமைக்கான அறிகுறிகள் மாறிக்கொண்டே இருக்கக்கூடிய தன்மையை உடையதாகும். எனவே, 20% நோயாளிகள் மட்டுமே ஆரம்பத்திலேயே சிகிச்சை அளிக்கப்படுகின்றனர். இது குடும்ப வரலாறு, மருத்துவம் சார்ந்த வரலாறு மற்றும் உணவு திட்டம் சார்ந்த முறை, மேலும் இரத்த பரிசோதனைகள் மற்றும் திசுப் பரிசோதனை போன்ற சோதனைகளை நோயறிதல் உள்ளடக்குகிறது. இரண்டு இரத்த பரிசோதனைகள் செய்யப்படுகின்றன: ஒன்று குளுட்டனுக்கு எதிரான ஆன்டிபாடி/பிறபொருளெதிரி இருப்பை கண்டறிவதற்கான நீணநீரிய சோதனை மற்றும் இரண்டாவது மனித லியூகோசைட் ஆன்டிஜன் (ஹெச்.எல்.ஏ) க்கான மரபியல் சோதனை ஆகும். குடல் நுண்ணுறுஞ்சியில் ஏற்படும் கட்டமைப்பு சேதத்தை சரிசெய்ய குடல் சார்ந்த திசுப் பரிசோதனை செய்யப்படுகின்றது. துல்லியமான மற்றும் சரியான முடிவுக்கான கண்டறிதலை உறுதிப்படுத்தும் வரை குளூட்டன் உள்ளடிக்கிய உணவு திட்டத்தை பின்பற்றுவது முக்கியம். தொடர்கண்காணிப்பு சோதனை ஆண்டுதோறும் மற்றும் வாழ்நாள் முழுவதும் தொடரப்பட வேண்டும்.
கண்டிப்பாக, குளூட்டன் இல்லாத உணவு திட்டத்தை பின்பற்றுவதே நிரந்தரமாக குளூட்டன் ஒவ்வாமைக்கு சிகிச்சையளிக்கும் ஒரே வழி ஆகும். குளூட்டன் நிறைந்த உணவுகள், மருந்துகள், வைட்டமின் பிற்சேர்வுகள்/சப்ளிமெண்ட்ஸ் அல்லது பானங்கள் ஆகியவற்றை உட்கொள்வதை தவிர்க்க வேண்டும். ஒரு ஊட்டச்சத்து நிபுணர், நீங்கள் முக்கியமான புரதங்களை தவிர்த்திடாத வகையில் தனிப்பட்ட குளூட்டன் இல்லாத உணவு திட்டத்தை வரையறுக்க உதவலாம். சேதமடைந்த குடல் குணமடைவது சில வாரங்களுக்குள் தொடங்குகிறது, மேலும் சில மாதங்களில் குடல் நுண்ணுறுஞ்சியின் மறுமலர்ச்சி ஏற்படுகிறது. குடல் அமைப்பு சீர்பெற்று, அழற்சி/வீக்கம் சரியானவுடன், அறிகுறிகள் மறைந்துவிடும்.உணவு பொருட்கள், பானங்கள், முதலியவற்றை உட்கொள்ளும் போது, சரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். ஒவ்வொரு பேக் செய்யப்பட்ட உணவு பொருளின் விவரத்துணுக்கை கவனமாக பார்த்து குளூட்டன் இருக்கிறதா இல்லையா என்று உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். சில குளூட்டன் இல்லாத உணவு, தானியங்கள், அல்லது மாச்சத்துக்கள் ஆகியவை பின்வருமாறு:
- மக்காச்சோளம், தண்டுக்கீரை, மக்காச்சோள மாவுணவு, அரிசி, வெள்ளாவி வைத்த கோதுமை, மரவள்ளிக்கிழங்கு மற்றும் கூவைக்கிழங்கு.
- சுத்தமான இறைச்சி, மீன், கோழி, வாத்து முதலிய உணவு பொருட்கள், பெரும்பாலான பால் கொண்டு தயாரிக்கப்பட்ட உணவுகள் மற்றும் காய்கறிகள்.