மூளை முடக்குவாதம் (செரிப்ரல் பால்சி) என்றால் என்ன?
மூளை முடக்குவாதம் (சிபி) என்பது காயத்தினாலோ அல்லது குழந்தைகளின் வளரும் நிலையில் இருக்கும் மூளையில் ஏற்படும் வடிவக்குறைபாடு காரணமாகவோ ஏற்படும் முன்னேற்றமடையாத நரம்பியல் சிக்கலாகும்.இது குழந்தை பருவத்தில் ஏற்படும் தீவிரமான இயலாமைக்கு ஒரு மிகப்பொதுவான காரணமாகும்.இது முக்கியமாக அவர்களின் இயங்கங்கள் மற்றும் தசை ஒருங்கிணைப்பில் சிக்கல்களை ஏற்படுத்தும். இந்தியாவில் பிறக்கும் குழந்தைகளில் 1000 குழந்தைகளுக்கு 3 பேர் என்ற அளவில் சிபியின் தாக்கம் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
இதன் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் என்னென்ன?
பிறந்தது முதல் 5 வயது வரை அடையவேண்டிய மைல்கற்களான புரண்டு விழுவது,எழுந்து உட்காருவது மற்றும் நடப்பது போன்றவை மூளை முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளில் தாமதமாக ஏற்படலாம்.இது பெண்குழந்தைகளை விட ஆண்குழந்தைகளிடம் பொதுவாக காணப்படுகிறது மற்றும் வெள்ளைநிறத்தவரை விட கறுப்பினத்தவரிடையே மிகப்பொதுவாக உள்ளது.வயது-வாரியான அறிகுறிகள் பின்வருமாறு:
3 - 6 மாதங்கள்:
- குழந்தையை படுக்கையிலிருந்து எடுக்கும்போது தலை தொங்கி விழுவது.
- உடல்முழுதும் விறைப்பான தன்மை.
- குறைவான தசை வலிமை.
- அதிகமாக நீடிக்கப்பட்ட முதுகு மற்றும் கழுத்து.
6 மாதத்திற்கும் அதிகமான வயதுள்ள குழந்தைகள்:
- புரண்டு விழாமல் இருப்பது.
- இருகைகளையும் ஒன்றாக கொண்டு வருவதில் சிக்கல்.
- கைகளை வாய்க்கு கொண்டுவருவதில் சிரமம்.
10 மாதத்திற்கும் அதிகமான வயதுள்ள குழந்தைகள்:
- ஒருபக்கமாக சாய்ந்து தவழுதல்.
- ஆதரவில்லாமல் நிற்க முடியாதது.
இதன் முக்கிய காரணங்கள் என்ன?
மூளையின் வளரும் நிலையில் ஏற்படும் ஏதேனும் காயம் அல்லது அசாதாரணதன்மையினால் உண்டாகும் மூளை சேதம்தான் இதன் முக்கிய காரணமாகும்.இது தசைத்தொனி, அனிச்சை செயல்கள்,தோற்றப்பாங்கு, ஒருங்கிணைப்பு,இயக்கங்கள் மற்றும் தசைகளை கட்டுப்படுத்துதல் போன்றவற்றை பாதிக்கிறது.
மூளை வளர்ச்சியில் சிக்கல்களை ஏற்படுத்தும் மற்ற காரணிகள் பின்வருமாறு:
- பிறழ்வுகள்: மரபு ரீதியான அசாதாரணத்தன்மை, குறைபாடுள்ள மூளை வளர்ச்சிக்கு வழிவகுக்கிறது.
- தாயின் மூலம் ஏற்படும் தொற்றுகள்: கர்ப்பகாலத்தில் ஏற்படும் ரூபெல்லா போன்ற வளர்ச்சியை பாதிக்கும் தொற்றுகள்.
- கருவில் ஏற்படும் வாதம்: குழந்தையின் மூளைக்கு செல்லும் ரத்த ஓட்டம் பாதிக்கப்படுவதால் அதன் மூளை இயக்கங்களில் குறைபாடு ஏற்படுகிறது.
- குழந்தை பருவத்தில் ஏற்படும் தொற்று:பெருமூளை பகுதிகளை பாதிக்கும் வீக்கங்கள்.
- அதிர்ச்சிகரமான தலை காயம்: வாகன விபத்துகளால் தீவிரமான மூளை சேதம் ஏற்படலாம்.
- ஆக்சிஜன்/பிராணவாயு குறைபாடு: சிக்கலான பிரசவத்தினால் ஆக்சிஜன்/பிராணவாயு குறைபாடு ஏற்படுவது.
இது எவ்வாறு கண்டறியப்பட்டு மற்றும் சிகிச்சையளிக்கப்படுகிறது?
மருத்துவர் குழந்தையிடம் காணப்படும் அடையாளங்கள் மற்றும் அறிகுறிகளை மேதிப்பீடு செய்கிறார் மற்றும் ஒரு உடல் பரிசோதனையை செய்கிறார். அந்த குழந்தை ஒரு குழந்தைநல நரம்பியல் மருத்துவரிடம் பரிந்துரைக்கப்படலாம்.
கீழ்காணும் சோதனைகளை செய்வதற்கு அறிவுறுத்தப்படலாம்:
மூளை ஸ்கேன்கள்:
- காந்த ஒத்ததிர்வு தோற்றுருவாக்கல் (எம்.ஆர்.ஐ): மூளையிலுள்ள ஏதேனும் புண்கள் அல்லது அசாதாரணத்தன்மையை அறிவதற்காக பயன்படுத்தப்படுகிறது.
- மண்டையோட்டுக்குரிய அல்ட்ராசவுண்ட்: மூளையின் ஆரம்ப மதிப்பீடு; இது விரைவாக செய்யக்கூடியதும் அதிக செலவில்லாததுமாகும்.
- மூளை மின்னலை வரைவி (ஈ.ஈ.ஜி): வலிப்பு நோயை கண்டறிய பயன்படுகிறது.
கீழ்கொடுக்கப்பட்டுள்ளவற்றுக்கு செய்யப்படும் மற்ற சோதனைகள்:
- பார்வைக்கோளாறு.
- காதுகேளாமை.
- பேச்சு பிறழ்வது.
- அறிவுபூர்வமான இயலாமை.
- இயக்கத்தில் குறைபாடுகள்.
மூளை முடக்குவாதத்திற்கான சிகிச்சையானது குழந்தையின் குறைபாட்டை பொறுத்து சுகாதார வல்லுநர்களை கொண்ட ஒரு குழுவின் மூலம் அளிக்கப்படும் நீண்டகால மருத்துவ கவனிப்பை உள்ளடக்கியது.இதற்கு வழங்கப்படும் மருந்துகள் முக்கியமாக இயக்கங்களின் குறைபாடுகள்,வலி மேலாண்மை,தனித்த மற்றும் பொதுவான இசிப்புநோய்க்கூறுடன் தொடர்புடைய அறிகுறிகளை குறிக்கோளாகக்கொண்டு வழங்கப்படுகிறது.
குழந்தையின் வாழ்க்கை முறையை மேம்படுத்துவதற்கான மருந்தில்லா முறைகள் பின்வருமாறு:
- பிசியோதெரபி/முடநீக்கியல்: தசைகளின் வலிமை மற்றும் நெகிழ்வுத்தன்மையை அதிகரிப்பதற்காக செய்யப்படுகிறது.பிடிப்புகள் அல்லது அணைவரிக்கட்டைகள் பரிந்துரைக்கப்படலாம்.
- தொழில்முறை சிகிச்சை: குழந்தையின் பங்களிப்பு திறனையும் அதன் சுதந்திரமான நடவடிக்கைகளையும் அதிகரிப்பதற்கு செய்யப்படுகிறது.
- பேச்சு மற்றும் மொழி சிகிச்சை: மொழியை புரிந்துகொண்டு அதை தொடர்பிற்கு பயன்படுத்துவதற்கு அல்லது சைகை மொழியை பயன்படுத்துவதற்கு செய்யப்படுகிறது.
- பொழுதுபோக்கு சிகிச்சை: வெளிப்புற நடவடிக்கைகளில் பங்கெடுப்பதற்கு செய்யப்படுகிறது.
- ஊட்டச்சத்து மற்றும் உணவுமுறை சிகிச்சை: உணவு உண்பதிலுள்ள சிக்கல்களை கையாளுவதற்கும் போதுமான ஊட்டச்சத்து கிடைப்பதை உறுதி செய்வதற்கும் செய்யப்படுகிறது.
சுய-பராமரிப்பு முறைகள்:
- பெரும்பாலான சமயங்களில் மூளை முடக்குவாதத்தை தடுக்க முடியாது, ஆனால் போதுமான கர்ப்பகால பராமரிப்பு, பாதுகாப்பான பிரசவம் மற்றும் விபத்துகளை தவிர்ப்பது போன்றவை ஏற்கனவே ஏற்பட்டுவிட்ட சிபி யின் அபாயத்தை குறைக்க உதவும்.
- பயணங்களின் போது ஹெல்மெட்கள் மற்றும் பாதுகாப்பான சீட் பெல்ட்களை பயன்படுத்தி குழந்தைகளின் தலையில் காயம் ஏற்படுவதை தவிருங்கள்.
- குழந்தைகளின் தினசரி நடவடிக்கைகளை கண்காணியுங்கள்.
குழந்தைகளின் நிலையை மேம்படுத்தவும், அவர்களின் தேவைக்கேற்ப சிகிச்சையை சரிசெய்யவும் பெற்றோர்/பராமரிப்பாளர் மருத்துவக்குழுவிற்கு ஆதரவு அளித்து அவர்களுடன் சேர்ந்து பணியாற்ற வேண்டியது மிகவும் முக்கியமானதாகும். நீண்டகால உணர்வுரீதியான ஆதரவும் பராமரிப்பும் குழந்தையின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்துக்கும் நல்வாழ்விற்கும் மிகவும் இன்றியமையானதாகும்.