மார்பு நோய்த்தொற்றுகள் - Chest Infections in Tamil

Dr. Nabi Darya Vali (AIIMS)MBBS

November 29, 2018

March 06, 2020

மார்பு நோய்த்தொற்றுகள்
மார்பு நோய்த்தொற்றுகள்

மார்பு நோய்த்தொற்றுகள் என்றால் என்ன?

மார்பு நோய்த்தொற்றுகள் என்பது பொதுவாக கீழ் சுவாசக் குழாயில் ஏற்படும் தொற்றுகள் ஆகும், அவை நுரையீரல்கள் மற்றும் மூச்சுக்குழாயில் கடும் விளைவுகளை ஏற்படுத்தும். இந்த நோய்த்தொற்றுகள் முக்கியமாக, மூச்சுக்குழாயினை நுரையீரல்களுடன் இணைக்கும் மூச்சுக் கிளைக்குழல்களின் சுவற்றிலுள்ள சீதச்சவ்வில்/சளிச்சவ்வில் ஏற்படும் ஒரு அழற்சி நோயான மூச்சுக்குழல் அழற்சி நோய், மற்றும் நுரையீரலின் காற்றுப்பையில் உண்டாகும் தொற்று நோயான நுரையீரல் அழற்சி நோய் போன்றவற்றை உள்ளடக்குகின்றன. அனைத்து மார்பு நோய்த்தொற்றுகளும் முதன்மையாக தொடர்ச்சியான இருமல், சளி மற்றும் காய்ச்சல் ஆகியவற்றால் வகைப்படுத்தப்படுகின்றன. 2030 ஆம் ஆண்டில் உலகளாவிய ரீதியில் மார்பக நோய்த்தொற்றுகள் தான் தொற்று நோய்களில் பொதுவான வகையாக இருக்கும் என்று கணிக்கப்படுகிறது.

நோயின் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை?

மார்பு நோய்த்தொற்றுகளில் தொடர்ச்சியான இருமல் என்பது ஒரு பொதுவான அறிகுறியாக இருந்தாலும், அதை தவிர்த்து பிற தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் காணப்படலாம். அவை பின்வருமாறு:

 • தொடர்ச்சியான சளியுடன் கூடிய இருமல்.
 • பச்சை அல்லது மஞ்சள் நிற சளி (கபம்).
 • மூச்சடைப்பு.
 • காய்ச்ச்ல்.
 • இருமல் ஏற்படும் போது மார்பில் வலி அல்லது அசௌகரியம்.
 • சோர்வு.
 • தசை வலி.

இருமல் மற்றும் மூச்சடைப்பு, மூச்சுத்தடை நோய்/ஆஸ்துமாவுடன் குழப்பப்படுகிறது. மார்பு நோய்த்தொற்றுகள் ஆஸ்துமா அறிகுறிகளை மோசமாக்கக் கூடும்.

நோய் தாக்குதலுக்கான முக்கிய காரணங்கள் என்ன?

மார்பு நோய்த்தொற்றுகள் பல காரணங்கள் காரணமாக ஏற்படலாம். சிறிய குழந்தைகள், புகைபிடிப்பவர்கள் மற்றும் கர்ப்பிணிப் பெண்கள் மார்பக நோய்த்தொற்றுகள் ஏற்படுவதற்கான அதிக ஆபத்தில் உள்ளனர். தன்னெதிர்ப்பு திறன் குறைபாடுகள் மற்றும் திசு இடைநார் நுரையீரல் நோய் போன்ற சில நிலைகள் மீண்டும் மீண்டும் மார்பு நோய்த்தொற்றுகளுக்கு வழிவகுக்கும். மார்பக நோய்த்தொற்று ஏற்படுவதற்கான பொதுவான காரணங்கள் பின்வருமாறு:

 • நீடித்த சளி மற்றும் ஃபுளூ/காய்ச்சல்: இவை மூச்சுக்குழாயில் அழற்சி மற்றும் தொற்றை ஏற்படுத்தலாம்.
 • மாசுபடுத்தப்பட்ட காற்று மற்றும் தூசுக்கு அடிக்கடி வெளிப்படுதல்: எந்தவொரு வகையான மாசுப்பொருட்களும் மூச்சுக்குழல்களின் உட்பூச்சை எரிச்சலடையச்செய்யும்.
 • நுண்ணுயிர்கள் காரணமாக ஏற்படும் தொற்றுநோய்: மூச்சுக்குழல் அழற்சி பொதுவாக ரைனோ வைரஸ் அல்லது இன்ஃபுளுவென்சா வைரஸ் போன்ற வைரஸ்கள் மற்றும் சில அரிதான நிகழ்வுகளில் பாக்டீரியாவால் ஏற்படுகிறது. நுரையீரல் அழற்சி நோய் பொதுவாக ஒரு பாக்டீரியா தொற்றின் காரணமாக ஏற்படுகிறது; இருப்பினும், வைரஸ்கள், மைக்கோபிளாஸ்மா மற்றும் பூஞ்சை ஆகியவையும் நுரையீரல் அழற்சி நோயை ஏற்படுத்தக்கூடும்.

இதன் பரிசோதனை முறைகள் மற்றும் சிகிச்சை முறைகள் யாவை?

இதயத்துடிப்பு மானியின் உதவியோடு மார்பகங்களை பரிசோதனை செய்தல் மார்பு நோய்த்தொற்றுகளை கண்டறிய உதவுகிறது. மார்பகங்களை பரிசோதனை செய்வதைத் தொடர்ந்து, தேவையான சிகிச்சை முறையை உறுதிப்படுத்த, பின்வரும் சோதனைகளை மேற்கொள்ள வேண்டும்:

 • மார்பின் எக்ஸ்-கதிர்கள் (எக்ஸ்-ரே) சோதனை.
 • தொண்டைச்சளியின் பரிசோதனை.
 • சுருள்அளவியை கொண்டு மேற்கொள்ளப்படும் நுரையீரல் இயக்கச் சோதனை.
 • நாடி ஆக்சிஜன் அளப்பான் (இரத்தத்தில் உள்ள ஆக்ஸிஜன் அளவுகளை சரிபார்க்க).

மூச்சுக்குழல் அழற்சி நோய் கடுமையாக அல்லது சில நேரங்களில் நாள்பட்டதாக இருக்கலாம். மூச்சுக்குழல் அழற்சி நோய் பொதுவாக பின்வரும் முறைகளை பயன்படுத்தி சிகிச்சை அளிக்கப்படுகின்றது:

 • துகள் தெளிப்பானை பயன்படுத்தி ஸ்டீராய்டுகளை உள்ளிழுத்தல்.
 • வாய்வழியாக ஸ்டீராய்டுகளை செலுத்துதல்.
 • வாய்வழியாக இன்டெர்லியுகின் தடுப்பான்களை செலுத்துதல்.
 • மூச்சுக் குழாய்த் தளர்த்தி.

நுரையீரல் அழற்சி நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நோய்க்கு காரணமான பாக்டீரியாவுக்கு எதிராக செயல்படக்கூடிய அதிக அளவிலான நுண்ணுயிர் எதிர்ப்பிகள் கொண்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. நுரையீரல் அழற்சி நோய்க்கு மேக்ரோலைட் மற்றும் பீட்டா-லாக்டம் நுண்ணுயிர் எதிர்ப்பிகளையும் காய்ச்சலுக்கு காய்ச்சல் நீக்கமருந்துகளையும் (காய்ச்சல்-குறைக்கும் மருந்துகள்) மருத்துவர்கள் பரிந்துரை செய்வார்கள். கூடுதலாக, இரண்டு வகை மார்பு நோய்களுக்கும், பின்வரும் சுய-பாதுகாப்பு நடவடிக்கைகள் பரிந்துரைக்கப்படுகின்றன:

 • நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும்.
 • ஓய்வு எடுக்க வேண்டும்.
 • புகை பிடித்தலை தவிர்க்க வேண்டும்.
 • மூக்கு சார்ந்த சளியிளக்கிகளை பயன்படுத்த வேண்டும்.

சில சமயங்களில் நிலைமை மோசமடைந்தாலும் அல்லது கூடுதல் ஆக்ஸிஜன் உதவி தேவைப்பட்டாலும், நோயின் ஆரம்பித்திலேயே அதனை கண்டறிதல் மற்றும் சரியான நேரத்தில் சிகிச்சை அளித்தல் மூலம் மார்பக நோய்த்தொற்றுக்களை கட்டுப்படுத்த முடியும்.மேற்கோள்கள்

 1. Verma N et al. Recent advances in management of bronchiolitis.. Indian Pediatr. 2013 Oct;50(10):939-49. PMID: 24222284
 2. Evertsen J et al. Diagnosis and management of pneumonia and bronchitis in outpatient primary care practices.. Prim Care Respir J. 2010 Sep;19(3):237-41. PMID: 20490437
 3. Peter Wark et al. Bronchitis (acute). BMJ Clin Evid. 2015; 2015: 1508. PMID: 26186368
 4. Better health channel. Department of Health and Human Services [internet]. State government of Victoria; Chest infections
 5. Chapman C et al. Risk factors for the development of chest infections in acute stroke: a systematic review.. Top Stroke Rehabil. 2018 Sep;25(6):445-458. PMID: 30028658

மார்பு நோய்த்தொற்றுகள் க்கான மருந்துகள்

Medicines listed below are available for மார்பு நோய்த்தொற்றுகள். Please note that you should not take any medicines without doctor consultation. Taking any medicine without doctor's consultation can cause serious problems.

Medicine Name

Price

₹449.0

Showing 1 to 0 of 1 entries