இருமல் - Cough in Tamil

Dr. Nadheer K M (AIIMS)MBBS

May 03, 2019

March 06, 2020

இருமல்
இருமல்

முன்னுரை

இருமல் என்பது, சளி மற்றும் எரிச்சலூட்டிகளான புகை அல்லது தூசியினை நீக்கி, உங்கள் சுவாசப் பாதைகள் மற்றும் தொண்டையை சுத்தமாக வைத்திருக்க ஏற்படுகின்ற ஒரு மன உந்துதல் ஆகும். வறண்ட இருமலானது, சளியை உற்பத்தி செய்யாமல், தொண்டையில் ஒரு கூச்ச உணர்வுடன் இருக்கின்ற அதே சமயத்தில், ஆற்றல் வாய்ந்த இருமலில், சுவாசப் பாதையை சுத்தம் செய்கின்ற சளி உற்பத்தி இருக்கிறது. பெரும்பாலானோருக்கு இருமல், எந்த மருத்துவ சிகிச்சையும் தேவைப்படாமலே  மூன்று வார காலத்துக்கு முன்னரே குணமாகி விடுகிறது. இருப்பினும், இருமல் நீடிக்கின்ற ஒரு சூழ்நிலையில், தகுந்த சிகிச்சைக்காக உங்கள் மருத்துவரை சந்திப்பது நல்லது ஆகும்.

தொடர்ந்து நீடிக்கும் ஒரு இருமலை ஏற்படுத்தக் கூடிய பல மருத்துவப் பிரச்சினைகள் இருக்கின்றன. உதாரணமாக, காய்ச்சல்,சைனஸ், தொண்டை வீக்கம், ஒவ்வாமை நாசி அழற்சி, அல்லது ஆஸ்துமா, நீடித்த மூச்சுக்குழாய் அழற்சி, அல்லது நீடித்த நுரையீரல் அடைப்பு நோய் COPD) போன்ற ஒரு நீடித்த நோய் வெடித்துக் கிளம்புதல்அல்லது அவற்றின் ஒரு நீடித்த அதிகரித்தல் ஆகிய மருத்துவப் பிரச்சினைகளைக் குறிப்பிடலாம். ஒரு குறுகிய கால இருமலுக்கு எப்போதும் மருத்துவ சிகிச்சை தேவைப்படுவதில்லை, ஏனென்றால் ஒரு சில வாரங்களில் அது சரியாகி விடுகிறது. போதுமான அளவு திரவ பானங்களை எடுத்துக் கொள்வது, மற்றும் எளிதான வீட்டு மருத்துவங்களுடன், போதுமான அளவு ஓய்வு எடுத்துக் கொள்வது உதவிகரமாக இருக்கக் கூடியதாகும். ஒருவேளை உங்கள் இருமல் ஒரு குறிப்பிட்ட காரணத்தினால் ஏற்படுகிறது என்றால், அந்த மறைந்து இருக்கும் காரணத்துக்கு சிகிச்சை அளிப்பது உதவக் கூடியதாகும். சில அரிதான நிலைகளில், ஒரு நீடித்த இருமலானது, ஒரு கடுமையான ஆரோக்கியப் பிரச்சினையின், எடுத்துக்காட்டுக்கு காசநோய் அல்லது சிஸ்டிக் பைப்ரோசிஸ் போன்ற சரியான நேரத்துக்கு சிகிச்சை அளிக்கப்பட வேண்டிய பிரச்சினையின். ஒரு அறிகுறியாக இருக்கக் கூடும். இந்தக் கட்டுரையின் வழியாக இந்த மன உந்துதலைப் பற்றி மேலும் கற்க, மற்றும் அறிந்து கொள்ளலாம்.

இருமல் காரணங்கள் என்ன - Causes of Cough in Tamil

காரணங்கள்

இருமலுக்கான காரணங்கள் அதன் மூல உற்பத்தி இடத்தின் அடிப்படையில் வகைப்படுத்தப்படக் கூடியவை ஆகும்.

சுவாசப்பாதை சார்ந்த காரணங்கள்

 • நோய்த்தொற்றுக் காரணங்கள்
  • மேற்பகுதி சுவாசப் பாதை நோய்த்தொற்றுக்கள் (URTக்கள்): மேற்பகுதி சுவாசப் பாதை நோய்த்தொற்றுகள் மிகவும் வழக்கமானவை, மற்றும் நீர்த்துளி நோய்த்தொற்றுகள் மூலமாக ஒரு நபரிடம் இருந்து மற்றொரு நபருக்கு எளிதாகப் பரவக் கூடியவை ஆகும். இதன் பொதுவான எடுத்துக்காட்டுகளாக, ஜலதோஷம், சைனஸ், மற்றும் ஃபுளு காய்ச்சலை ஏற்படுத்துகின்ற இன்ஃபுளுயென்சா வைரஸ் நோய்த்தொற்று ஆகியவற்றைக் கூறலாம். இவற்றுள் ஃபுளு காய்ச்சல் மிகவும் தீவிரமான பிரச்சினை ஆகும்.
  • கீழ்பகுதி சுவாசப் பாதை நோய்த்தொற்றுகள் (LRTIக்கள்): கீழ்பகுதி சுவாசப் பாதை நோய்த்தொற்றுகள், மூச்சுப் பாதைகள் மற்றும் அள்வியோலி என அழைக்கப்படும் நுரையீரல் திசுக்களைப் பாதிக்கின்றன. சரியான நேரத்தில் சிகிச்சை அளிக்கப்படாவிட்டால், இந்த நோய்த்தொற்றுக்கள் நுரையீரலின் ஒரு மடல் பகுதியின் அழிவுக்கு காரணமாகக் கூடும். இதன் வழக்கமான உதாரணங்களில், நுரையீரல் அழற்சி, மூச்சுக்குழாய் அழற்சி, மற்றும்  மூச்சுக்குழாய் விரிவு ஆகியவை அடங்கும். காசநோய் மிகவும் அபாயகரமான ஒரு நோய், ஆனால் ஒரு வழக்கமான LRTI ஆகும். ஃபுளு காய்ச்சல், மேற்பகுதி மற்றும் கீழ்ப்பகுதி சுவாசப் பாதைகள் இரண்டையுமே பாதிக்கக் கூடியவையாக, மற்றும் ஒரு வழக்கமான காரணமாக இருக்கிறது.
    
 • இதயம் தொடர்பான காரணங்கள்
  இதய செயலிழப்பு: இதயத்தின் போதுமான அளவு இரத்தத்தை செலுத்துகின்ற செயல்பாட்டில் ஏற்படும் ஒரு செயலிழப்பு, இதய செயலிழப்பு என்று குறிப்பிடப்படுகிறது. பல்வேறு நீடித்த இதய நோய்கள், இதய செயலிழப்புக்கு வழிவகுக்கக் கூடும். இதயத்தில் சேர்கின்ற அதிகப்படியான இரத்தமானது, நுரையீரல்களில் திரவங்கள் சேர்வதற்கு வழிவகுக்கிறது, அதே போல இருமலையும், முக்கியமாக ஒருவர் இரவில் படுக்கின்ற பொழுது ஏற்படுத்துகிறது.
   
 • நோய்த்தொற்று அல்லாத காரணங்கள்
  • ஒவ்வாமை பிரச்சினைகள்: நச்சுத்தன்மை மிக்க வேதிப் பொருட்களின் புகையை நுகர்வது, மற்றும் மூச்சில் உள்ளிழுப்பது, ஒவ்வாமை நாசி அழற்சி மற்றும் இருமலை ஏற்படுத்தக் கூடிய வகையில், மூக்கு மற்றும் சுவாசப் பாதையில் ஒரு ஒவ்வாமை விளைவு ஏற்பட காரணமாகக் கூடும். மகரந்தம், தூசு, சுற்றுச்சூழல் மாசுகள் அல்லது விலங்கு உன்னிகள் போன்ற வழக்கமான சுற்றுச்சூழல் ஒவ்வாமைப் பொருட்களும் கூட, ஒரு ஒவ்வாமை இருமலைத் தூண்டக் காரணமாகக் கூடும். இது சளிக்காய்ச்சல் எனவும் குறிப்பிடப்படுகிறது.
  • ஆஸ்துமாஆஸ்துமா என்பது, மூச்சு விடும் பாதை குறுகலாகி விடுவதன் காரணமாக இருமல், மூச்சுத்திணறல், மற்றும் மூச்சிரைப்பு ஆகியவற்றுக்கு வழிவகுக்கின்ற, நுரையீரல்களின் சுவாசப்பாதையில் ஏற்படுகின்ற ஒரு கடுமையான ஒவ்வாமை, அல்லது  அழற்சி ஆகும். ஆஸ்துமாவைத் தூண்டுகின்ற வழக்கமான காரணிகளில், உடற்பயிற்சி, குளிர்ந்த காலநிலை, மகரந்தம், தூசு, குறிப்பிட்ட வேதிப்பொருட்கள், சாயங்கள் மற்றும் பிறவும் அடங்கும்.
  • நீடித்த நுரையீரல் அடைப்பு நோய் (COPD): வழக்கமாக இந்த நோய், புகைப்பிடிப்பவர்களுக்கு, தொடர்ந்து மோசமாகிக் கொண்டே செல்கின்ற ஒரு நீடித்த இருமல் வடிவத்தில் காணப்படுகிறது. நுரையீரல் திசுக்களில் ஏற்படும் அழற்சியானது, மூச்சிரைப்பு மற்றும் சளி உற்பத்தியுடன் கூடிய நீடித்த இருமலுக்கு வழிவகுக்கிறது.
  • நுரையீரல் இரத்த உறைவு: நுரையீரல்களின் இரத்தக் குழாய்களில் தோன்றுகின்ற இரத்த உறைவு கட்டிகள், நுரையீரல் இரத்தக் குழாய் அடைப்பு எனவும் அறியப்படுகிறது. இந்தப் பிரச்சினை, இருமலுடன் கூடவே திடீரென ஏற்படும் தீவிரமான மூச்சிரைப்புக்கும் வழிவகுக்கக் கூடிய, ஒரு மருத்துவ அவசர நிலை ஆகும். இரத்தக் கட்டிகள், கால்களில் இருந்து இரத்தக் குழாய்கள் வழியாக நுரையீரல்களுக்கு செல்கின்றன.
  • நுரையீரல் அழிவு: நுரையீரல் காற்று அறை சிதைவு எனவும் அறியப்படும், நுரையீரல்களின் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட அறைகளின் சிதைவானது, நுரையீரலின் ஒரு பகுதியானது நெஞ்சில் காற்றினை வெளிப்படுத்துகின்ற பொழுது ஏற்படுகிறது. நெஞ்சில் ஏற்படுகின்ற ஒரு காயம், அல்லது மார்ஃபன் குறைபாடு போன்ற மரபணு குறைபாடுகள் காரணமாக, மிகவும் தன்னிச்சையாக நுரையீரல் சிதைவு ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கிறது. இந்தப் பிரச்சினை வழக்கமாக, எம்பிசிமா இருக்கிறது எனக் கண்டறியப்பட்ட புகைப்பழக்கம் உள்ளவர்களிடம் காணப்படுகிறது.
  • மூக்கு ஒழுகுதல்: தொண்டைக்குள் தொடர்ச்சியாக மூக்கு ஒழுகுவது இருமலுக்கு, முக்கியமாக படுத்திருக்கும் பொழுது, வழிவகுக்கிறது. பொதுவாக இது, URTI அல்லது ஒவ்வாமை நாசி அழற்சி பிரச்சினையில் ஏற்படுகிறது.
  • நுரையீரல் புற்றுநோய்: எந்த ஒரு நுரையீரல் திசுவிலும் உள்ள செல்களின் கட்டுப்பாடற்ற வளர்ச்சியானது, நுரையீரல் புற்றுநோய்க்கு வழிவகுக்கக் கூடியது ஆகும். இது, இருமலுக்கான ஒரு வழக்கமான காரணம் ஆகும். உடலின் மற்ற உறுப்புகளில் இருந்து புற்றுநோய், அல்லது கட்டிகள் நுரையீரலுக்குப் பரவுதலும் கூட இருமலுக்கு காரணமாகக் கூடும். அது போன்ற இருமல் இரத்தத்துடன் கூடியதாக இருக்கும்.
 • செரிமான காரணங்கள்
  இரைப்பை -உணவுக்குழாய் பின்னொழுக்கு நோய் (GERD): வயிற்றில் உற்பத்தி செய்யப்படும் அமிலமானது உணவுக் குழாய்க்குள் மேல்நோக்கி பயணிப்பது, இருமலுக்கான ஒரு முக்கியமான காரணம் ஆகும். இது GERD என்று அழைக்கப்படும் ஒரு பிரச்சினையின் காரணமாக ஏற்படுகிறது.
 • மற்ற காரணங்கள்
  மருந்துகள்: உயர் இரத்த அழுத்தத்துக்கு சிகிச்சை அளிக்கப் பயன்படுத்தப்படுகின்ற, இரத்தக் குழாய் சுருக்கி -மாற்றுதல் நொதிகள் தடுப்பான்கள் (ACE-I) போன்ற சில மருந்துகள் வறண்ட இருமல் ஏற்படக் காரணமாகக் கூடும்.

இருமல் சிகிச்சை - Treatment of Cough in Tamil

இருமலுக்கான மருத்துவ சிகிச்சைத் தேர்வுகள் அதன் காரணத்தைப் பொறுத்து இருக்கின்றன. பின்வருபவை, இருமலுக்கு சிகிச்சை அளிப்பதற்காக உள்ள வாய்ப்புகளின் ஒரு பட்டியல் ஆகும்:

 • நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகள் மற்றும் பூஞ்சை எதிர்ப்பு மருந்துகள் ஆகியவை, சுவாசப் பாதையில் ஏற்படுகின்ற நோய்த்தொற்றுக்களுக்கு சிகிச்சை அளிக்கப் பயன்படுத்தப்படுகின்றன.
 • சுவாசப் பாதைகளில் சேர்ந்திருக்கின்ற சளியை நீக்குவதற்கு உதவ, சளி நீக்க மருந்துகள் பரிந்துரைக்கப்பட்ட வேண்டும்.  வழக்கமாக இருமல் எதிர்ப்பு மருந்துகளும் பரிந்துரைக்கப்படுகின்றன.
 • ·ஹிஸ்டமைன் எதிர்ப்பு மருந்துகள் மற்றும் மூக்கடைப்பு நீக்க மருந்துகள் ஆகியவை, ஒவ்வாமைகளின் காரணமாக ஏற்படுகின்ற இருமலுக்கு சிகிச்சை அளிக்கப் பயன்படுத்தப்படுகின்றன. ஆயினும், ஒவ்வாமைப் பொருட்களைத் தவிர்ப்பதே ஒவ்வாமை பிரச்சினைகளுக்கு சிகிச்சை அளிப்பதன் முதன்மையான படியாக நீடிக்கிறது.
 • குறுகலாகி விட்ட சுவாசப்பாதைகளை விரிவாக்க உதவுகின்ற ப்ரோஞ்சொடிலேட்டர்கள் என அழைக்கப்படும் மருந்துகள், ஆஸ்துமாவுக்கு சிகிச்சை அளிக்கப் பயன்படுத்தப்படுகின்றன. மேலும் அவை, ஆஸ்துமாவுடன் இணைந்த அறிகுறியான இருமலைக் குறைக்கவும் உதவுகின்றன.
 • ப்ரெட்னிசோன் போன்ற ஸ்டெராய்டு மருந்துகள், ஆஸ்துமா மற்றும் COPD யின் தீவிரமான நிலைகளில் பயன்படுத்தப்பட வேண்டியவை ஆகும்.
 • புரோட்டான் பம்ப் தடுப்பிகள் மற்றும் H2 - ஏற்பி தடுப்பிகள் ஆகியவை, இருமலுக்கான காரணமாக GERD இருக்கின்ற பொழுது பயன்படுத்தப்படுகின்றன.
 • மருந்துகள் எடுத்துக் கொள்வதன் காரணமாக இருமல் ஏற்படுகிறது என்று தீர்மானிக்கப்பட்ட நிலைகளில், அந்த மருந்தை அல்லது அதனை எடுத்துக் கொள்ளும் அளவினை மாற்றுவது, இருமலுக்கான சிகிச்சையாக இருக்கிறது.
 • நுரையீரல் சிதைவு அல்லது நுரையீரல்களில் ஒரு இரத்த உறைவுக்கட்டி ஏற்படுகின்ற பட்சத்தில், இரத்த மெலிதாக்கிகள், உயிர்வளி சிகிச்சை, மற்றும் பிற அவசர நிலை சிகிச்சைகள் தேவையாக இருக்கின்றன. சிதைவடைந்த நுரையீரலில் திரும்ப காற்று நிரம்புவதற்காக, மற்றும் நெஞ்சு அறைகளில் ஏதேனும் திரவம் சேர்ந்திருந்தால் அவற்றை வெளியேற்றுவதற்காக, ஒரு நெஞ்சு வெளியேற்ற குழாய் செருகப்பட வேண்டும்.

இருமலைக் கையாள்வதற்கான குறிப்புகள்

 • இருமும் பொழுது, அல்லது தும்மும் பொழுது ஒரு சுத்தமான காகிதம் அல்லது ஒரு துணியைக் கொண்டு, உங்கள் மூக்கு மற்றும் வாயை மூடிக் கொள்ளுங்கள். அந்தக் காகிதத்தை உடனடியாக அழித்து விடுங்கள். ஒரு வேளை உங்களுக்கு எதுவும் கிடைக்கவில்லை என்றால், உங்கள் முழங்கைகளின் வளைவுகளில், அல்லது தோளின் மேல்பகுதியில் இருமவும். உங்கள் கைகளால் மூடிக் கொண்டு இரும வேண்டாம்.
 • வீட்டில் மற்றும் பணிபுரியும் இடத்தில் நீங்கள் தொடுகின்ற இடங்களை, எப்போதும் சுத்தப்படுத்தியும், மற்றும் நோய்க்கிருமிகளை நீக்கியும் வையுங்கள்.
 • உங்கள் மூக்கு, கண்கள் மற்றும் வாயைத் தொட்ட பிறகு, வெந்நீர் மற்றும் சோப்பைப் பயன்படுத்தி உங்கள் கைகளை குறைந்த பட்சம் 15 முதல் 20 வினாடிகள் வரை முழுமையாகக் கழுவுங்கள். நீங்கள் ஆல்ஹகால் அடிப்படையிலான கை கழுவும் பொருட்களையும் கூடப் பயன்படுத்தலாம்.
 • புகைப்பிடித்தலை நிறுத்துவது, இருக்கின்ற இருமலை மேலும் மோசமாக ஆகாமல் தடுக்க மிகவும் முக்கியமானது ஆகும். மற்றவர்கள் புகைப்பிடிப்பதால் வெளிவரும் புகையை உள்ளிழுப்பதையும் தவிருங்கள்.
 • இருமல் மற்றும் சளியைக் குறைக்க, நீங்கள் நீராவி உறிஞ்சுதல் அல்லது ஒரு சூடான குளியலையும் பயன்படுத்தலாம்.
 • ஜலதோஷத்தின் போது வெதுவெதுப்பான தண்ணீரைக் குடிப்பது, ஜலதோஷம் மற்றும் வலிமிகுந்த தொண்டையினை சரி செய்ய, நீங்கள் பயன்படுத்தக் கூடிய மற்றொரு வழி ஆகும்.
 • கடினமான மிட்டாய் அல்லது மருந்து மிட்டாய்களை சுவைப்பது, உமிழ்நீர் உற்பத்தியை அதிகரிப்பதன் மூலம் வலிமிகுந்த தொண்டை, மற்றும் வறண்ட இருமலில் இருந்து விடுபட உதவக் கூடியது ஆகும். அவை, தொண்டையில் சிக்கிக் கொள்ளும் அபாயத்தைக் கொண்டிருப்பதால், 3 வயது, அல்லது அதற்கும் குறைவான வயதை உடைய குழந்தைகளுக்கு அவற்றைக் கொடுப்பதைத் தவிருங்கள்.
 • இஞ்சி தேநீர் அல்லது எலுமிச்சை தேநீர் போன்ற சூடான தேநீரைப் பருகுவதும் கூட இருமலில் இருந்து நிவாரணம் பெற உதவக் கூடியது  ஆகும்.
 • தேன், இருமல் ஏற்படும் நிகழ்வுகளின் எண்ணிக்கையைக் குறைக்க, மற்றும் அழற்சி ஏற்பட்ட தொண்டைக்கு இதமளிக்க உதவக் கூடியது ஆகும். ஒரு கடுமையான நோய்த்தொற்றான போட்டுலியம் ஏற்படுகின்ற அதிக பட்ச அபாயம் இருப்பதால், ஒரு வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு தேன் கொடுக்க வேண்டாம்.


மேற்கோள்கள்

 1. National Health Service [Internet] NHS inform; Scottish Government; Cough
 2. MedlinePlus Medical Encyclopedia: US National Library of Medicine; Cough
 3. P.A. Mahesh, B.S. Jayaraj, A.K. Prabhakar, S.K. Chaya, R. Vijayasimha. Prevalence of chronic cough, chronic phlegm & associated factors in Mysore, Karnataka, India. ndian J Med Res. 2011 Jul; 134(1): 91–100.PMID: 21808140
 4. Chest Foundation [Internet] American College of Chest Physicians, USA; Cough.
 5. MedlinePlus Medical Encyclopedia: US National Library of Medicine; Cough
 6. National Institutes of Health; [Internet]. U.S. Department of Health & Human Services; Marfan syndrome.
 7. Center for Disease Control and Prevention [internet], Atlanta (GA): US Department of Health and Human Services; Pertussis (Whooping Cough)
 8. American Pregnancy Association. [Internet]; Cough And Cold During Pregnancy.
 9. National Health Service [Internet]. UK; Cough.
 10. Irwin RS. Complications of cough: ACCP evidence-based clinical practice guidelines. Chest. 2006 Jan;129(1 Suppl):54S-58S. doi: 10.1378/chest.129.1_suppl.54S. PMID: 16428692
 11. Richard S. Irwin. Complications of Cough. American College of Chest Physicians, US [Internet]

இருமல் க்கான மருந்துகள்

Medicines listed below are available for இருமல். Please note that you should not take any medicines without doctor consultation. Taking any medicine without doctor's consultation can cause serious problems.