சிறுநீர்ப்பை அழற்சி (சிஸ்டிட்டிஸ்) என்றால் என்ன?
சிஸ்டிட்டிஸ் என்பது சிறுநீர்ப்பை அழற்சிக்கு வழிவகுக்கும் ஒரு பொதுவான நோய்த்தொற்று ஆகும். இது கீழ் சிறுநீர்ப் பாதையில் ஏற்படும் ஒரு தொற்று மற்றும் இது ஆண்களுடன் ஒப்பிடுகையில் பெரும்பாலும் பெண்களிடம் அதிகளவில் காணப்படுகிறது. 25 மற்றும் அதற்கு மேல் வயதிலுடையவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தி மற்றும் அவர்களை மருத்துவமனையில் சேர்க்கும் நிலைக்கு வழிவகுக்கிறது. உலகளவில் 20 மில்லியன் மக்களுக்கு மேற்பட்டவர்கள் சிறுநீர்ப்பை அழற்சியைக் கொண்டுள்ளனர்.
இதன் முக்கிய அடையாளங்களும் அறிகுறிகளும் யாவை?
பொதுவான அறிகுறிகளிலும் அடையாளங்களிலும் பின்வருவனவற்றில் அடங்கலாம்:
- சிறுநீர் கழிக்க வேண்டும் என நீடித்த மற்றும் வலுவான நோக்கம் (மேலும் வாசிக்க: அடிக்கடி சிறுநீர் கழிக்கும் காரணங்கள்).
- சிறுநீர் வடிகுழாயிலிருந்து சிறுநீர் கடந்து செல்லும் பொது ஏற்படும் எரிச்சல் உணர்ச்சி.
- கலங்கலான/வண்டலான மற்றும் துர்நாற்றமான சிறுநீர்.
- இடுப்பு பகுதியில் ஏற்படும் அசௌகரியம்.
- மிதமான காய்ச்சல்.
- சிறுநீரில் இரத்தம்.
இதன் முக்கிய காரணங்கள் என்ன?
இது பெரும்பாலும் பாக்டீரியா தொற்றுகளின் காரணமாக ஏற்படுகிறது. சிகிச்சையளிக்கப்படாமல் இருந்தால், இந்த தொற்றுநோயானது மேலே ஊடுருவி சென்று சிறுநீரகத்தை பாதித்து பைலோநேஃப்ரிட்டிஸ் நோய்க்கு வழிவகுக்கிறது. சிறுநீரக வடிக்குழாயின் குறுகிய அளவின் காரணமாக ஆண்களைவிட பெண்களே இந்த தொற்று நோயினால் அதிகளவு பாதிக்கபடுவார்கள்.
மற்ற காரணிகள் பின்வருமாறு:
- சிறுநீர்ப்பை செயல்முறையில் ஏற்படும் குறைபாடு.
- சிறுநீரப்பையில் எரிச்சல் ஏற்படுத்தும் ஏதெனும் வெளி பொருள்.
- சிறுநீர்ப்பையின் நரம்பு செயலிழப்பு.
- நோய் எதிர்ப்பு அமைப்பில் ஏற்படும் கோளாறு சிஸ்ட்டிஸிற்கு வழிவகுக்கலாம்.
- சீறுநீர்ப்பையில் ஏற்படும் கல்.
அரிதாக, இது மருந்துகள், கதிர்வீச்சு சிகிச்சை, பெண்களுக்கு உபாயோகப்படுத்தும் ஆரோக்கியமான ஸ்ப்ரேக்கள் அல்லது விந்தணுக்கொல்லியின் பயன்பாடு போன்ற குறிப்பிட்ட எரிச்சலூட்டிகளாலும் சிறுநீர்ப்பை அழற்சி ஏற்படலாம். வடிகுழாய் தொடர்புடைய சிறுநீர்ப்பாதை நோய்தொற்று பொதுவாக ஏற்படக்கூடியது.
இதை கண்டறியும் முறைகள் மற்றும் சிகிச்சையளிக்கும் முறைகள் யாவை?
ஆரம்பத்தில், அறிகுறிகள், அவை ஏற்படும் காலங்கள் மற்றும் தினசரிப் பழக்கத்தில் ஏற்படுகின்ற பாதிப்பு போன்றவைகள் மற்ற சாத்தியமான நிலைகளை தீர்மானிக்க மதிப்பீடு செய்யப்படலாம். நோய் கண்டறியும் முறையில் அடங்குபவைகள் பின்வருமாறு:
- உடல் மற்றும் நரம்பியல் சோதனைகள்.
- வலி மதிப்பீடு மற்றும் சிறுநீர் வெளியேற்றும் சோதனைகள்.
- சிறுநீர் ஆய்வு.
- சிறுநீர் வளர்ப்பு ஊடகம்.
- சிஸ்டோஸ்கோபி - சிறுநீர்ப்பையின் உள்ளே ஆராய கேமரா பொருத்தப்பட்ட குழாயைப் உபயோகப்படுத்துதல்.
- அல்ட்ராசோனோகிராஃபி மற்றும் இடுப்பின் எக்ஸ்-கதிர்கள் போன்ற இமேஜிங் ஆய்வுகள்.
சிறுநீர்ப்பை அழற்சி சிகிச்சையில் ஆண்டிபையோட்டிக்ஸின் மூலம் உயிரினங்களை ஒழிப்பதும் அடங்குகிறது. லேசான தொற்று ஏற்பட்டால், நுண்ணுயிர் எதிர்ப்பி சிகிச்சையானது பெண்களுக்கு 3 நாட்களுக்கும் ஆண்களுக்கு 7-14 நாட்களுக்கும் தேவைப்படாலாம். அறிகுறிகள் குணமடைய துவங்கினாலும் முழு நுண்ணுயிர் எதிர்ப்பி சிகிச்சையும் எடுத்துக்கொள்வது அவசியம். மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் மருந்துகள் மற்றும் அஸ்கார்பிக் ஆசிட் போன்ற சில அசிடிக் பொருட்களைக் கொண்ட பயனுள்ள மருந்துகள் அசிடிக் தன்மையின் காரணமாக தொற்றுக் கிருமிகளை கொன்றுவிடுகின்றன.
வாழ்க்கைமுறை மாற்றங்கள் பின்வருமாறு:
- நிறைய தண்ணீர் அருந்துதல் வேண்டும்.
- நோய்த்தொற்றுகளைத் தடுப்பதற்கு நெருக்கமான பகுதிகளில் முழுமையான சுத்தத்தை பேணிக்காத்தல் வேண்டும்.
- அசௌகரியத்தை ஏற்படுத்தும் உணவுகளின் பட்டியலை தயார் செய்து அவற்றை முற்றிலும் தவிர்க்கவும்.
- காரமான உணவு, சாக்லேட் மற்றும் காஃபின் போன்ற குறிப்பிட்ட சில உணவுகளை தவிர்க்கவும்.
- சிறுநீர் கழிக்க நேரிடும் போது அதை அடக்கிக்கொள்வதால் சீறுநீர்பையின் கொள்ளும் திறனை அதிகரிக்கலாம்.
- சிறுநீர் கழித்த பிறகு, குறிப்பாக பெண்கள் முன்னிலிருந்து பின் வரை சுத்தம் செய்ய வேண்டும் அதாவது இவ்வாறு செய்வதானால் மலவாயிலிருந்து சிறுநீர் வடிகுழாய் வரை பரவும் தொற்றை தவிர்க்கலாம்.
- குளியல் தொட்டியைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக ஷவர்களின் பயன்பாடு தொற்றுக்களை குறைக்க உதவுகிறது.
கவனிக்கப்படாமல் விட்டுவிட்டால் சிறுநீர்ப்பை அழற்சி அசௌகரியமானதாக மாறக்கூடும், பொதுவாக இது முறையான சிகிச்சையின் மூலம் எளிதாகவும் மற்றும் திறம்படவும் சிகிச்சையளிக்கப்படலாம்.