பல் சீழ்கட்டி என்றால் என்ன?
பல் சீழ்கட்டி எனும் நிலை பற்களின் நடுவில் பாதிக்கப்பட்ட திசுக்கள் குவியும்போது ஏற்படுகிறது. இது சிகிச்சையளிக்கப்படாத பிளவினை கொண்ட பற்களினாலோ, காயங்களினாலோ அல்லது முந்தைய பல் சிகிச்சையின் காரணமாகவோ கூட ஏற்படலாம். நடுத்தர-வயதினரோடு ஒப்பிடுகையில் இளம்வயதினறுக்கும் முதியவர்களுக்குமே இது மிகவும் பொதுவாக ஏற்படுகிறது.
இதன் முக்கிய அடையாளங்களும் அறிகுறிகளும் யாவை?
பல் சீழ்கட்டியின் முக்கிய அடையாளங்கள் மற்றும் அறிகுறிகள் பின்வருமாறு:
- தொடர்ந்து, ஏற்படும் பற்களின் வலி தாடைக்கும் பரவலாம்.
- சூடான அல்லது குளிர்ந்த தட்பவெப்பநிலைக்கு உணர்திறன் ஏற்படுதல்.
- திண்பண்டங்களை அழுத்தி கடிப்பதினாலோ அல்லது மெல்லும் போதோ ஏற்படும் உணர்திறன்.
- காய்ச்சல்.
- முகத்தில் வீக்கம்.
- ஒருவேளை கட்டி சிதைந்தால் திடீரென ஏற்படும் வாய்-துறுநாற்றம், வாயில் உப்பு நீர் சுரத்தல் ஆகியவற்றை எதிர்கொள்ள நேரிடும்.
பல் சீழ்கட்டி தாக்குதலுக்கான முக்கிய காரணங்கள் என்ன?
இதன் முக்கிய காரணம் பாக்டீரியாக்களின் படையெடுப்பு பற்களின் அடிக்கூழ்ப்பொருளில் ஏற்படுவதனாலேயே - அதாவது பற்களின் உள்ளேயிருக்கும் பாகமான இரத்தகுழாய்கள், நரம்புகள் மற்றும் இணைப்பு திசுக்கள் ஆகியவை இருக்கின்ற இடத்தில் ஏற்படும் பாதிப்பு. இது பல்சிதைவின் காரணத்தினால் கூட ஏற்படலாம். பற்களில் வெடிப்பு அல்லது பிளவின் வழியே பாக்டீரியா உள்ளே சென்று பற்களின் மத்தியில்(பற்கூழ்களில்) தொற்றினை ஏற்படுத்துவதால், வீக்கம் மற்றும் சீழ் சேரச்செய்கிறது.ஆபத்து காரணிகள் பின்வருமாறு:
- பற்களை முறையாக பராமரிக்காதது: முறையான பல் துலக்கும் பழக்கம் மற்றும் வாய் கொப்புளிக்கும் பழக்கம் இல்லாதது.
- அதிகமான சர்க்கரை உட்கொள்தல்: இனிப்புகள் மற்றும் சோடாக்கள் போன்ற அதிக சர்க்கரை நிறைந்த உணவுகள் மற்றும் பானங்களை உட்கொள்தல்.
இதனை கண்டறியும் முறைகள் மற்றும் சிகிச்சை முறைகள் யாவை?
பல் சீழ்கட்டியை கண்டறிய, பல் மருத்துவர் பாதிக்கப்பட்ட பல்லினை சோதனை செய்யும் போது பற்களுக்கு தொடுவதினாலோ அல்லது அழுத்தம் கொடுப்பதினாலோ ஏதேனும் உணர்திறன் இருக்கிறதா என்பதை அறிந்துகொள்ள அவற்றை தட்டி பார்க்க நேரிடலாம். மற்ற பரிசோதனைகள் பின்வருமாறு:
- பல் எக்ஸ்-கதிர்கள் (எக்ஸ் - ரே) சோதனை பல் சீழ்கட்டியையும் மற்றும் நோய்தொற்றின் பரவியிருக்கும் அளவினையும் கண்டுபிடிக்க உதவலாம்.
- சிடி ஸ்கேனிற்கு உட்படவும் கட்டளையிடலாம்.
தொற்று நோய் மேலும் பரவாமல் இருக்க கீழ் வரும் சிகிச்சை முறைகள் அறிவுறுத்தப்படுகிறது. சிகிச்சை முறைகள் பின்வருமாறு:
- ஆழமான கீறல் மற்றும் வடிகாலமைப்பு.
- வேர்க்கால்களில் சிகிச்சை.
- பல்லை பிரித்தெடுத்தல்.
- ஆண்டிபையோட்டிக்ஸ்.
சுய பாதுகாப்பு குறிப்புகள்:
- சாப்பிட்ட பிறகு சூடான உப்புநீரில் வாயை கொப்பளித்தல் வேண்டும், எனவே வாயில் உணவு துகள்கள் ஒட்டிக்கொண்டிருக்காது.
- வலிநிவாரணிகளை எடுத்துக்கொள்ளலாம்.
- குறைந்தபட்சம் ஒரு நாளைக்கு இரண்டு முறையாவது ஃப்ளோரைடு நிறைந்த பற்பசைகளைக் கொண்டு பற்களை துலக்க வேண்டும்.
- பல் துலக்கியை 3-4 மாதங்களுக்கு ஒருமுறை மாற்றுதல் அவசியம்.
- ஆரோக்கியமான உணவுபழக்கம், தொற்றுநோய் மற்றும் வாயில் ஏற்படும் துர்நாற்றத்தை குறைக்கும்.
- கிருமிநாசினி அல்லது ஃப்ளோரைடு வாய்க்கழுவிகளை உபயோகிக்கலாம்.