குடல் நுண்ணுயிர் அழற்சி என்றால் என்ன?
குடல் நுண்ணுயிர் அழற்சி என்பது பெருங்குடலைத் தாக்கும் ஒரு மருத்துவ நிலையாகும். குடல் நுண்ணுயிர் அழற்சி நோய்களில், பெருங்குடலின் சுவர்களில் வீக்கங்கள் உருவாகும். டிவெர்டிக்குலாவின் இந்த கட்டிகள் டிவெர்டிக்குலிட்டிஸ் அல்லது குடல் நுண்ணுயிர் அழற்சி என்று அழைக்கப்படுகிறது. பொதுவாக டிவெர்டிகுலா தோன்றும்போது நீங்கள் எந்த அறிகுறிகளையும் கவனிக்க மாட்டீர்கள். எனினும் அவை தொற்றினால் பாதிக்கப்படும்போதோ அல்லது வீங்கும்போதோ மிகுந்த வலியை ஏற்படுத்தும்.பெரும்பாலும் இந்த நிலை நீங்கள் உங்கள் உணவுமுறையில் போதுமான நார்ச்சத்தை சேர்த்துக் கொள்ளாதபோது ஏற்படுகிறது.
இதன் முக்கிய அறிகுறிகள் என்ன?
கீழ்காண்பவையே குடல் நுண்ணுயிர் அழற்சியின் அறிகுறிகள் ஆகும்:
- தீவிரமான வயிற்று வலி, பெரும்பாலும் இடது பக்கத்தில்.
- 38oC (104oF) அல்லது அதற்கும் அதிகமாக காய்ச்சல் ஏற்படுதல்.
- அடிக்கடி மலம் கழிப்பது.
- வாந்தி.
- சோர்வாக தோன்றுவது.
- மலத்தில் இரத்தம்.
இதன் முக்கிய காரணங்கள் என்ன?
குடல் நுண்ணுயிர் அழற்சி நோய் என்பது பெரும்பாலும் குறைவான நார்ச்சத்துள்ள உணவுமுறை மற்றும் முதுமையுடன் தொடர்புடையது. மரபுவழி காரணமும் இருக்கக்கூடும். குடல் நுண்ணுயிர் அழற்சி நோயில் குடலின் சுவர்களின் பலவீனமான இடங்களில் உருவாகும் டிவெர்டிகுலா என அழைக்கப்படும் சிறிய பைகளில் வீக்கம் ஏற்படுகிறது. இது பெரும்பாலும் சீழ்படிந்த கட்டியை உருவாக்கி தோற்று ஏற்படுத்துகிறது.
இதற்கான சரியான காரணம் தெரியாவிட்டாலும் இது பருமனானவர்கள்,வலி நிவாரணி மாத்திரைகளை அதிகமாக எடுத்துக்கொள்பவர்கள் மற்றும் மலச்சிக்கல் பிரச்சனை உள்ளவர்களிடையே அதிகமாக காணப்படுகிறது.
இது எவ்வாறு கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகிறது?
குடல் நுண்ணுயிர் அழற்சி நோய் பெரும்பாலும் உங்கள் வயிற்றில் கடுமையான வலி ஏற்படும்போது கண்டறியப்படுகிறது. மருத்துவர் ஒரு முழுமையான உடல் பரிசோதனையுடன் மலக்குடல் பரிசோதனையும் செய்வார். அவர் உங்கள் உணவுமுறை பழக்கங்களையும் குறித்துக்கொள்ளக்கூடும். தொற்று இருப்பதை அறிவதற்காக உங்கள் ரத்தமும் சோதிக்கப்படலாம். மருத்துவர் உங்கள் குடலை உள்ளிருந்து பார்ப்பதற்காக பெருங்குடல் அகநோக்கியல் (கொலொனோஸ்கோபி) செய்யப்படும். எக்ஸ்ரே எடுப்பதற்கு முன்னால் உங்கள் மருத்துவர் ஒரு மாறுபட்ட சாயத்தைக்கொண்டு (பேரியம்) உங்கள் குடலில் இருப்பதை மலக்குடல் வழியாக வெளியேற்றுவார். குடல் புறணியின் வெளிப்புறத்தில் உருவான சீழ்படிந்த கட்டியை கண்டறிவதற்காக சிடி ஸ்கேன் செய்யப்படுகிறது. ரத்தம் உள்ளதா என்பதை அறிவதற்காக உங்கள் மலமும் சோதிக்கப்படுகிறது.
குடல் நுண்ணுயிர் அழற்சி நோய் என்பது ஒரு மருத்துவ அவசர நிலையென்பதால் உடனடி மருத்துவ கவனிப்பு தேவைப்படுகிறது. வலி நிவாரணி மருந்துகளுடன் சேர்த்து தொற்றை கட்டுப்படுத்துவதற்காக ஆண்டிபையோட்டிக்களும் தரப்படுகிறது. குடலுக்கு ஓய்வளிப்பதற்காக நரம்பு வழியாக திரவங்கள் செலுத்தப்படுகிறது. குடலில் அடைப்பு போன்ற சிக்கல்கள் இருக்கும்பட்சத்தில் கோலக்டோமி என அழைக்கப்படும் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு குடலின் பாதிக்கப்பட்ட பகுதி நீக்கப்படுகிறது. கோலக்டோமிக்கு பிறகு கோலெஸ்டோமி என்ற நடைமுறை பின்பற்றப்படுகிறது, இதில் குடலின் ஆரோக்கியமான பகுதியின் முடிவு வயிற்றின் சுவற்றிலுள்ள ஒரு திறப்பின் வழியாக வெளியே கொண்டுவரப்பட்டு ஒரு பையுடன் சேர்க்கப்பட்டு அதில் மலம் சேகரிக்கப்படுகிறது. இது 6-12 மாதங்களுக்கான ஒரு தற்காலிக நடைமுறையாக செயல்படுத்தப்படுகிறது.
குடலின் இயக்கங்களை மேம்படுத்துவதற்காக நீங்கள் உங்கள் உணவுமுறையில் அதிக நார்ச்சத்து, திரவங்கள் போன்றவற்றை எடுத்துக்கொள்வது மற்றும் முறையாக உடற்பயிற்சி செய்வது போன்ற தற்காப்பு நடிவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.