உலர் மூக்கு என்றால் என்ன?
உலர் மூக்கு எனும் நிலையில் மாசு துகள்கள் (மாசுப்பொருட்கள், வைரஸ்கள் மற்றும் பாக்டீரியாக்கள்) மனித உடலின் நாசிப் பகுதி வழியாக நுழைந்து, ஈரப்பதத்தின் அளவைக் குறைப்பதற்கு காரணமாகிறது, இதன் மூலம், வறட்சிக்கு வித்திடுகிறது. இது ஒருவரை அசௌகாரியமாக உணரவைப்பதில்லாமல் மேலும் பிற அறிகுறிகளுக்கும் வழிவகுக்கிறது.
இதன் முக்கிய அடையாளங்களும் அறிகுறிகளும் யாவை?
அறிகுறிகள் பின்வருமாறு:
- மூக்கு உள் புறத்தில் விரிசல்கள் மற்றும் காயங்கள்.
- நாசி எரிச்சல்.
- நாசியினுள் ஏற்படும் கடுமையான அரிப்பு.
- வாய் மற்றும் தொண்டைக்குள்ளே உண்டாகும் வறட்சி.
- அரிதாக, வீக்கம் மற்றும் மூக்கில் ஏற்படும் இரத்தக்கசிவு.
- சில நேரங்களில், அது நாசி வழிகளில் ஒடுக்கம் ஏற்படக் காரணமாயிருக்கிறது.
இதன் முக்கிய காரணங்கள் என்ன?
உலர்ந்த மூக்கிக்கான பிரதான காரணங்கள் பின்வருமாறு:
- குறைந்த ஈரப்பதம்.
- சுற்றுச்சூழல் காரணிகள்.
மருந்துகளின் பக்கவிளைவுகள் போன்றவை பின்வருமாறு:
- டிகன்ஜெஸ்டண்ட்ஸ்.
- ஆண்டிஹிஸ்டமைன்கள்.
- தடுப்பாற்றல் குறைப்பு மருந்துகள்.
- மது மற்றும் போதை மருந்து உட்கொள்தல்.
- உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள் (மாதவிடாய் நின்ற பெண்கள்).
- நாசியழற்சி.
- உயர் இரத்த அழுத்தம்.
இதன் கண்டறியும் முறை மற்றும் சிகைச்சையளிக்கும் முறை யாவை?
ஆரம்பக்கட்டத்தில், உங்கள் மருத்துவர் அறிகுறிகள் மற்றும் அடையாளங்களோடு சேர்த்து உங்கள் நிலை குறித்த விரிவான மருத்துவ அறிக்கையை எடுக்க முனைவார், அதன் பிறகு வெளி மற்றும் உள் மூக்கின் முழுமையான உடலிலியல் பரிசோதனை மேற்கொள்வர். நோயாளியின் மருத்துவ வரலாற்றைப் பொறுத்து, ஒருவரின் வயது மற்றும் உடலியல் பரிசோதனையின் முடிவை கொண்டு, மருத்துவர் பின்வருவனவற்றை அறிவுறுத்துவார்:
- நாசி குழி (மற்றும் பாராநேசல் சைனஸ்) மற்றும் நசோபார்னெக்சின் எண்டோஸ்கோபியினுடன் கூடிய வரியோட்டவழிக் கணித்த குறுக்குவெட்டு வரைவி (சிடி).
- பல்வேறு இரத்த பரிசோதனைகள், ஒவ்வாமை பரிசோதனை, மற்றும் நுண்ணுயிரியல் துடைப்பிகள் ஆகியவற்றை உள்ளடக்கிய ஆய்வக சோதனைகள்.
சிகிச்சை முறைகள் உள்ளடக்கியவை:
- நோய்த்தாக்கநிலை காரணிகள் அகற்றப்பட வேண்டும்.
- ஈரப்பதம் ஏற்படுத்துதல்: ஒரு சுத்திகரிக்கப்பட்ட ஈரப்பதமூட்டி அல்லது ஆவியாக்கிகளின் உதவியுடன் ஈரப்பதத்தை சுற்றுச்சூழலுடன் சேர்க்கலாம்.
- மேலோடுகள் அகற்றுதல்.
- காயங்களை ஏற்படுத்தும் காரணிகள் தவிர்த்தல் மற்றும் முறையான மியூகோசல் பராமரிப்பு எடுத்துக்கொள்தல்.
- வாய்வழி அல்லது குறிப்பிட்ட பகுதிக்கான ஆண்டிபையோட்டிக்சினைக் கொண்டு நோய்த்தொற்றைக் கையாளுதல்.
- முக்கியமாக இல்லாத பட்சத்தில் தாழ்வான மற்றும் நடுத்தர டர்பைனேட்டை அறுவை சிகிச்சையின் மூலம் அகற்றுவதை தவிர்க்கவும், ஏனினெனில் இதுவும் உளர் மூக்கு ஏற்பட காரணமாக இருக்கலாம்.