காதில் சீழ் வடிதல் என்றால் என்ன?
காதிலிருந்து வெளியேறும் திரவமானது, காதில் ஏற்படும் தொற்று, காதில் ஏற்படும் வீக்கம், வெளிப்புற அல்லது நடு காதில் ஏற்பட்ட காயம் அல்லது அரிதாக காணப்படும் காது புற்றுநோய் போன்ற பல நிலைமைகளுடன் தொடர்புடைய ஒரு அறிகுறி ஆகும். ஓட்டோரோயா என அழைக்கப்படும் இது கடுமையாக அல்லது நாள்ப்பட்ட நோயாக இருக்கலாம். இவ்வாறு வெளியேறுதல் மிகவும் வெறுப்பு உண்டாக்கும் மற்றும் இது அனைத்து வயதிலும் ஏற்பட்டாலும் பெரும்பாலும் குழந்தைகளிடம் காணப்படும். காதிலிருந்து வெளியேறும் நீர்க்கசிவு சீழ், சளி, மெழுகு அல்லது இரத்தம் ஆகிய வடிவங்களில் இருக்கலாம்.
நோயின் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை?
வெளிப்புற காது அல்லது நடுக்காதில் ஏற்பட்ட தொற்று மற்றும் அழற்சி ஆகியன காதிலிருந்து சீழ் வடிவதற்கான பொதுவான காரணங்களாகும்.
காதிலிருந்து சீழ் வடிவத்திற்கு நீங்கள் பின்வரும் அறிகுறிகளைக் கொண்டிருக்கலாம்:
- காதில் வலி.
- காதிலிருந்து நாற்றத்துடன் நீர் கசிதல்.
- சமநிலை இழப்பு.
- எரிச்சல்.
- தூக்கமின்மை.
- காதில் இழுப்பது போன்ற உணர்வு ஏற்படுதல்.
- காய்ச்சல்.
நோய் தாக்குதலுக்கான முக்கிய காரணங்கள் என்ன?
காதில் ஏற்படும் வலி என்பது, 5 வயதிற்கும் குறைவான வயதுடைய நடுச்செவிக்குழல் மோசமாக வளர்ந்த மற்றும் நோய் எதிர்ப்புசக்தி குறைந்த குழந்தைகளிடம் பொதுவான காணப்படும் ஒரு அறிகுறி ஆகும். பெரியவர்களிடமும் இந்நோய் காணப்படலாம். காதுகளிலிருந்து வெளிவரும் விரும்பத்தகாத சீழால் ஒரு தனி நபர் பாதிக்கப்படுவதன் காரணங்கள் கீழ்வருமாறு:
- நடுக்காதில் ஏற்பட்ட தொற்று (நடுச்செவி அழற்சி).
- புறக்காதில் ஏற்பட்ட தொற்று (வெளிக்காது அழற்சி).
- காதில் ஏற்பட்ட வீக்கம்.
- சளி.
- எலும்பில் ஏற்பட்ட தற்காலிக காயம்.
- காதில் ஏற்படும் உயிரணுப் புற்று அல்லது திசுப்பெருக்கம் (அரிதாக காணப்படும் அறிக்கை).
- காதில் செய்யப்பட்ட அறுவை சிகிச்சையின் விளைவு.
இது எப்படி கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகின்றது?
காதிலிருந்து சீழ் வடிதல் நோயை முழுமையாக கண்டறிதல் மிகவும் அவசியம். எனினும், ஒரு பரிசோதனைக்கு முன் காதிலிருக்கும் திரவத்தை மைக்ரோ சக்சன் மூலம் உறிஞ்சி எடுப்பது அவசியம். காது, மூக்கு, தொண்டை (இ.என்.டி) நிபுணர் மூலம் நோயாளிகளைப் பற்றி அறிதல் நோய் கண்டறிதலின் முதல்படி, மேலும் நோயறிதலுக்கு அடிப்படையானவை பின்வருமாறு:
- காது பரிசோதனை.
- நியூமேடிக் ஒடோஸ்கோபி.
- டிம்பனோமெட்ரி.
- கேட்கும் திறன் பரிசோதனை.
- நோயெதிர்ப்பு திறன் காரணமென்றால் இரத்த பரிசோதனை செய்யவேண்டும்.
- காதிலிருந்து சீழ் வடிதல் அல்லது காதில் சப்தங்கள் கேட்பது போன்ற நோய்களுக்கான நுண்ணுயிர் காரணிகளை கண்டுபிடிக்க வேண்டும்.
ஒரு சரியான ஆய்வுக்கு பிறகு காதிலிருந்து சீழ் வடிதலுக்கான சிகிச்சை முடிவெடுக்கப்படும். ஆண்டிபயாடிக்ஸ் உணர்திறன் சோதனை ஒருமுறை செய்யப்பட்ட பிறகு தான் மருந்துகள் முடிவுசெய்யப்படும். சிகிச்சை பின்வருவனவற்றை உள்ளடக்கியது:
- வலியை கட்டுப்படுத்த வலிநிவாரணிகளை கொடுக்கலாம்.
- மேற்பூச்சு ஸ்டீராய்டுகளை பயன்படுத்தலாம்.
- ஆண்டிபயாடிக்ஸ் காது மருந்துகள் பயன்படுத்தலாம்.
- மெழுகு போல் சீழ் வடிவதாக இருந்தால் முகோலிடிக் சொட்டுகள் பயன்படுத்தலாம்.
- நுண்ணுயிர் எதிர்ப்பிகளை வாய்வழியாக கொடுக்கலாம்.
- பூஞ்சை காரணமாக தொற்றுநோய் ஏற்பட்டால் காதுகளை சுத்தமாக்க ஆண்டிஃபங்கல் பயன்படுத்தலாம்.
- காய்ச்சலை கட்டுப்படுத்த ஆண்டிபைரெடிக்ஸ் பயன்படுத்தலாம்.
புகைப்பிடிப்பதை தவிர்ப்பது, சளி மற்றும் காது தொற்றிலிருந்து குழந்தைகளை பாதுகாத்தல் மற்றும் சிகிச்சையுடன் இணைந்து சில சுய பாதுகாப்பு நடவடிக்கைகள் போன்றவை காதிலிருந்து சீழ் வெளியேறுவதை தடுக்க உதவும்.
இது வலி மிகுந்த நிலையாக இருக்கலாம் மற்றும் சில சந்தர்ப்பங்களில் காது கேட்கும் திறனை குறைக்கலாம் எனவே காதிலிருந்து சீழ் வெளியேறுதலுக்கு சிகிச்சை எடுப்பது அவசியம்.