இடம் மாறிய கர்ப்பம் என்றால் என்ன?
இடம் மாறிய கர்ப்பம் என்பது கருவுற்ற முட்டை கருப்பையின்(கர்ப்பம்) வெளிப்புறம் எங்குவேண்டுமென்றாலும் வளரும் நிலையாகும், பொதுவாக கருமுட்டை ஏதாவது ஒரு ஃப்லோபியன் குழாய்களிலோ அல்லது மிக அரிதாக ஓவரியிலோ, செர்விக்ஸிலோ அல்லது வயிற்றினுள்ளோ உருவாகிறது. ஃப்லோபியன் குழாய் என்பது கருப்பையுடன் இணைந்திருக்கக் கூடிய நீளமான குழாய், இது ஓவரியிலிருந்து கருமுட்டைகளை கருப்பைக்கு கொண்டு செல்கிறது. இந்தக்குழாயினால் வளர்ந்து வருகின்ற கருவுற்ற முட்டையினை தாங்கும் சக்தி இல்லாததோடு அதன் வளர்ச்சிக்கு தகுந்தவாறு விரிந்துக்கொடுக்க முடியாமல் இறுதியில் சிதைந்துவிடக்கூடும். பொதுவாக ஃப்லோபியன் குழாய்குள் எம்ப்ரியோக்களால் தொடர்ந்து வாழமுடியாது மற்றும் இந்நிலை அம்மக்களுக்கு வாழ்க்கை-அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடியது, எனவே இடம் மாறிய கர்ப்பத்திற்கு ஆரம்ப கட்ட சிகிச்சை அவசியம்.
இடம் மாறிய கர்ப்பத்தின் உலகளாவிய நிகழ்வு சுமார் 0.25லிருந்து -2% வரை இருப்பதோடு 161 கற்பத்தில் ஒன்று இவ்வாறு இடம் மாறி வளர்கிறது.
இதன் முக்கிய அறிகுறிகள் மற்றும் அடையாளங்கள் யாவை?
சாதாரண கர்ப்ப காலத்தில், பெண்கள் பொதுவாக குமட்டல் மற்றும் வாந்தி போன்ற அறிகுறிகளை அனுபவிப்பார்கள். இதுவே இடம் மாறிய கர்ப்பத்தின் அறிகுறிகளானது 4லிருந்து -10 வாரங்களில் ஆரம்பிக்க தோன்றும்.
பொதுவான அறிகுறிகள் பின்வருமாறு:
- வயிற்றின் ஒரு புறத்தில் ஏற்படும் வலி திடீரென்றோ அல்லது அதன் தீவிரத்தை மெதுவாகவோ அதிகரிக்கும். (மேலும் வாசிக்க: கர்ப்பகாலத்தில் அடிவயிற்றில் ஏற்படும் வலிக்கான காரணங்கள்)
- வஜினல் இரத்தப்போக்கு, சாதாரணமாக ஏற்படும் இரத்தப் போக்குடன் ஒப்பிடும்போது இது அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இருப்பதோடு அடர் நிறத்திலும் (ப்ரௌன்) மற்றும் நீராகவும் வெளியேறக்கூடியது.
- பலவீனம்.
சில சந்தர்ப்பங்களில், இடம் மாறிய கர்ப்பம் ஃப்லோபியன் குழாயின் சிதைவிற்கு வழிவகுக்கக்கூடியது மட்டுமின்றி கூடுதல் அறிகுறிகளையும் கொண்டிருக்கும் அவை பின்வருமாறு:
- கடுமையான இரத்தப்போக்கு.
- தோள்பட்டை முனையில் வலி.
- சிறுநீர் கழிக்கும்போதோ அல்லது மலம் கழிக்கும்போதோ ஏற்படும் வலி.
- மயக்கம்.
- வியர்வை.
- வெளிறியதன்மை.
அதன் முக்கிய காரணங்கள் என்ன?
இதற்கான சரியான காரணம் இன்னும் அறியப்படவில்லை. இடம் மாறிய கர்ப்பம் வளர்வதற்கான ஆபத்து காரணிகள் பின்வருமாறு:
- வயது 40 ஆண்டுகளுக்கு மேல் இருத்தல்.
- ஏதேனும் வயிற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருந்தால் அதற்கான வரலாறு, அதாவது ஃப்லோபியன் குழாயினை கட்டுதல் (கர்பத்தை தடுக்க) உட்பட இடுப்புப்பகுதியில் செய்யப்படும் அறுவை சிகிச்சை (கர்பத்தை தடுக்க முயற்சி) மற்றும் இடுப்பு அழற்சி நோய் போன்றவைகள்.
- ஃப்லோபியன் குழாயில் ஏதாவது காயம் இருத்தல்.
- இடம் மாறியிருக்கும் கர்ப்பம் முன்னரே நேர்ந்திருத்தல்.
- கருத்தடுப்பு மாத்திரைகள் அல்லது கருப்பொருள் கருவிகள் உபயோகித்தல்.
- கர்ப்பம் தரித்தலுக்கான மருந்துகள்.
இதை கண்டறியும் முறை மற்றும் சிகிச்சை முறை யாவை?
நீங்கள் கர்ப்ப காலத்தில் மேற்கூறப்பட்ட ஏதெனும் அறிகுறிகளை எதிர்கொள்ள நேர்ந்தால், உங்கள் மருத்துவரிடம் (கைனகாலஜிஸ்ட்) ஆலோசனை மேற்கொள்வது அவசியம். அவர்/அவள் ஆரம்பத்தில் உங்கள் அடிவயிற்றில் (இடுப்பு) வலி அல்லது உணர்ச்சி ஏற்படும் இடத்தை அடையாளம் காண உடலியல் பரிசோதனை மேற்கொள்வார்.கருப்பையின் அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் மற்றும் ஒரு கர்ப்ப பரிசோதனை மேற்கொள்வதன் மூலம் இடம் மாறிய கர்ப்பத்தை உறுதி செய்யப்படுகிறது. ஹெச்சிஜி மற்றும் புரோஜெஸ்ட்டிரோன் போன்ற கர்பத்துக்கான ஹார்மோன்களின் அளவுகள் கூட கண்காணிக்கப்படுகின்றன.
தற்போதைய காலத்தில், இடம் மாறிய கர்ப்பத்திற்கான சிகிச்சை முறைகளுள் அடங்குபவை மருந்துகள் மற்றும் அறுவை சிகிச்சை செயல்முறைகள் ஆகும். ஒருவேளை குழாய் சிதைவுற்றால், அதனால் ஏற்படும் கடுமையான உள் இரத்தக்கசிவினை சரிசெய்ய லாபரோடமி என்றழைக்கப்படும் அறுவை சிகிச்சை செயல்முறை மேற்கொள்ளப்படுகிறது.
இடம் மாறிய கர்ப்பத்திற்கு பின்னர் எதிர்காலத்தில் கருத்தரித்தலுக்கான வாய்ப்புகள் குறைந்துவிடலாம், ஆனால் ஃப்லோபியன் குழாய்கள் சேதமடையாமல் இருந்தால் கருத்தரித்தலுக்கான வாய்ப்புகள் நன்றாக இருக்கின்றது.