எண்டோமெட்ரியோசிஸ் என்றால் என்ன?
மாதவிடாயின் போது கருப்பையின் உள்ளார்ந்த புறணி உடைந்து துண்டுகளாக இரத்தப்போக்கின் மூலம் வெளியேறுவதே எண்டோமெட்ரிம் எனப்படுகிறது. கருப்பை ஹார்மோன்களான ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்ட்டிரோன் உட்பூச்சுக்கான உணர்திறனை கொண்டது. எண்டோமெட்ரியல் திசு கர்ப்பப்பையில் இன்றி ஃபலோபியன் குழாய்களிலோ, ஓவரிகளிலோ அல்லது சில தொலைதூர உறுப்புகளிலோ வளரும் போது எண்டோமெட்ரியம் உருவாகிறது. இது ஒரு குறிப்பிடத்தக்க வலிமிகுந்த நிலை மற்றும் இது எப்போதாவது இடுப்பு உறுப்புகள் ஒன்றோடு ஒன்று ஓட்டும்போது ஏற்படக்கூடியது.
இதன் முக்கிய அடையாளங்களும் அறிகுறிகளும் யாவை?
எண்டோமெட்ரியோசிஸின் அறிகுறிகள் சற்று எண்டோமெட்ரியல் திசு வளரும் பகுதியையும் சார்ந்திருக்கின்றது. எண்டோமெட்ரியோசிஸின் சில பொதுவான அறிகுறிகள் பின்வருமாறு:
- மாதவிடாயின் போது அடிவயிற்றிலோ அல்லது இடுப்பு பகுதியிலோ ஏற்படும் கடுமையான வலி (டிஸ்மெனோரியா).
- டிஸ்பாரூனியா (உடலுறவின் போது ஏற்படும் வலி).
- மாதவிடாய் காலத்தில் ஏற்படும் அசாதாரணமான அதிக அளவு இரத்தப்போக்கு (மெனோரோகியா) அல்லது நீண்டநாள் (மெட்ரோராஜியா) இரத்தப்போக்கு.
- மலட்டுத்தன்மை.
- வலியுடன் சிறுநீர் மற்றும் மலம் கழித்தல்.
- களைப்பு (குறிப்பாக மாதவிடாய் காலத்தில்).
இதன் முக்கிய காரணங்கள் என்ன?
எண்டோமெட்ரியல் திசு தற்செயலாக ஓவரியிலோ, ஃபலோபியன் குழாய்களிலோ அல்லது மற்ற இடுப்பு உறுப்புகளிலோ இருப்பது எண்டோமெட்ரியோசிஸ் ஏற்பட காரணாமாக இருக்கலாம்:
- பிற்போக்கு மாதவிடாய் - மாதவிடாயில் ஏற்படும் இரத்தப்போக்கு ஃபலோபியன் குழாய்க்குள்ளோ அல்லது ஓவரிக்குள்ளோ (தலைகீழ் திசையில்) பின்னோக்கி பாயும் போது, எண்டோமெட்ரியல் செல்கள் ஃபலோபியன் குழாய்க்குள்ளோ அல்லது ஓவரிக்குள்ளோ இடம்பெயரலாம்.
- அறுவைசிகிச்சையின் மூலம் உட்பொருத்துதல் - சிசேரியன் பிரசவத்தின் போதோ அல்லது ஹிஸ்டெரோஸ்கோபியின் போதோ எண்டோமெட்ரியல் திசுக்கள் இடுப்பு உறுப்புகளுக்குள் பொருத்தப்படுவது.
- பெரிட்டோனனல் செல் மாற்றம் - சில நோயெதிர்ப்பு சிக்கல்கள் அல்லது ஹார்மோன்களின் காரணமாக, பெரிட்டோனனல் செல்கள் எண்டோமெட்ரியல் திசுக்களாக மாறுதல்.
- எண்டோமெட்ரியல் செல் போக்குவரத்து - எண்டோமெட்ரியல் செல்கள் இரத்தத்தினாலோ அல்லது நிணநீர் வழியாகவோ மற்ற உறுப்புகளுக்குள் தங்குதல்.
- எம்பிரியோனிக் செல் மாற்றம் - பருவமடைதலின் போது, ஈஸ்ட்ரோஜன் காரணமாக, எம்பிரியோனிக் செல்கள் எண்டோமெட்ரியல் செல்களாக மாற்றம் பெறுதல்.
இதன் கண்டறியும் முறை மற்றும் சிகைச்சையளிக்கும் முறை யாவை?
ஒரு முறையான மருத்துவ அறிக்கையுடன் கூடிய முழுமையான உடல் பரிசோதனை (இடுப்பெலும்பு பரிசோதனை உட்பட) வழக்கமாக எண்டோமெட்ரியோசிஸில் நோயை கண்டறிய உதவுகிறது. இருப்பினும், நோயறிதலை உறுதிப்படுத்தவும், நோய் பரவியிருக்கும் அளவை தெரிந்துகொள்ளவும் சில பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன:
- இடுப்பெலும்பில் எடுக்கப்படும் அல்ட்ராசவுண்ட் - எண்டோமெட்ரியல் திசுக்கள் மற்ற இடுப்பு உறுப்புகளுள் இடம்பெற்றிருக்கிறதா என அறிய உதவுகிறது.
- டிரான்ஸ்விஜினல் அல்ட்ராசவுண்ட் - இடுப்பு உறுப்புகளில் எண்டோமெட்ரியல் திசுக்கள் இருக்கிறதா என சோதிக்கும்போது மற்ற முறைகளை ஒப்பிடுகையில் இம்முறை மிகவும் துல்லியமான முடிவினை கொடுக்கின்றது.
- லேபராஸ்கோபி - எண்டோஸ்கோபிக் காட்சிப்படுத்துதலோடு கூடிய திசுச் சோதனையின் உதவியால் எண்டோமெட்ரியல் திசுக்கான நோய் கண்டறிதலை உறுதிப்படுத்துதல்.
- காந்த அதிர்வு இமேஜிங் (எம்ஆர்ஐ) - எண்டோமெட்ரியல் பொருந்தியிருக்கிற இடம் மற்றும் அதன் அளவை நிர்ணயிக்க இந்த சோதனை உதவுகிறது.
எண்டோமெட்ரியல் சிகிச்சை முறைகள் பின்வருமாறு:
- வாய்வழி மருந்துகள் - டிஸ்மெனோரியாவைக் கட்டுப்படுத்தக்கூடிய வலி நிவாரணிகள் உட்கொள்ளுதல்.
- ஹார்மோன் சிகிச்சை - வலியைக் குறைக்க, மாதவிலக்குகளை முறைப்படுத்த, இரத்த போக்கை குறைக்க மேற்கொள்ளப்படும் சிகிச்சை.
- அறுவை சிகிச்சை (கன்சர்வேடிவ் தெரபி) - உட்பொருத்தப்பட்ட அல்லது மாற்றப்பட்ட எண்டோமெட்ரியல் திசுவினை அறுவை சிகிச்சையின் மூலம் அகற்றுதல். சில தீவிர நிகழ்வுகளில், கருப்பயுடன் கூடிய ஃபலோபியன் குழாய்கள் மற்றும் ஓவரிகளும் நீக்கப்படுகிறது(கருப்பை நீக்கம்).