பெண் ஹைப்போகோனாடிசம் (பெண் இனப்பெருக்க இயக்கக்குறை) என்றால் என்ன?
பெண் ஹைப்போகோனாடிசம் (பெண் இனப்பெருக்க இயக்கக்குறை) என்பது ஒரு கோளாறு அல்லது பெண் இனப்பெருக்க உறுப்புகள், குறிப்பாக கருப்பையின் செயலிழப்பு ஆகும். சில சமயங்களில் கபச் சுரப்பி, முன்மூளை கீழுள்ளறை மற்றும் பெண் பாலுறுப்புகளுக்கு இடையிலான செயல்பாடு மற்றும் ஒருங்கிணைப்பில் கோளாறு ஏற்படும்போது, பெண் ஹார்மோன்கள் குறைவாகவோ அல்லது முழுமையாகவோ வெளியிடப்படாமல் போகிறது. இதன் விளைவாக,கருப்பைகள் மூலம் கருமுட்டைகளை தூண்டும் ஹார்மோன் (எஃப்.எஸ்.ஹெச்) மற்றும் லூட்டினைசிங் ஹார்மோன்களின் (எல்.ஹெச்) நிகழும் வெளியீடு, குறைந்தோ அல்லது முற்றிலும் இல்லாமலோ போகிறது. இந்நிலை ஹைபோகொனடோட்ராபிக் ஹைப்போகோனாடிசம் (ஹெச்.ஹெச்) என்று அழைக்கப்படுகிறது.
நோயின் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை?
பெண் ஹைப்போகோனாடிசத்துடன் தொடர்புடைய முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள்:
- பருவமடையாமல் இருத்தல்.
- மார்பகங்கள் மற்றும் மறைவிட முடி போன்ற இரண்டாம் நிலை பாலியல் சிறப்பியல்புகளின் பற்றாக்குறை.
- உயரமாக வளராமல் இருத்தல்.
- மாதவிடாய் வராமல் இருத்தல் (மேலும் படிக்க: மாதவிடாய் இன்மைக்கான காரணங்கள் மற்றும் சிகிச்சை).
- அடிக்கடி ஏற்படும் மனநிலை மாற்றங்கள்.
- அன்றாட வேலைகள் செய்வதில் பலவீனம் மற்றும் சோர்வு.
- சூடாக சிறுநீர் கழித்தல்.
- ஹைப்போகோனாடிசம் மரபரிமையாகப் பெறப்படும் போது, நுகரும் உணர்வு இல்லாமல் போகும் (கல்லன் நோய்க்குறி).
- கபச் சுரப்பியில் கட்டி உள்ளபோது, பிற ஹார்மோன்களின் குறைபாடு, தலைவலி போன்றவைகள்
நோய் தாக்குதலுக்கான முக்கிய காரணங்கள் என்ன?
பெண் ஹைபோகோனாடிசம் என்பது பிறப்பிலேயே இருப்பது அல்லது காலப்போக்கில் உருவாகுவது ஆகும். இதற்கான முக்கிய காரணங்கள் பின்வருமாறு:
- மரபணுக்களில் குறைபாடு அல்லது பிறவிக்குறைபாடு.
- நாள்பட்ட நோய்த்தொற்றுகள் அல்லது வீக்கம் உட்பட்ட நாள்பட்ட நோய்கள்.
- தன்னுடல் தாக்கு கோளாறுகள்.
- ஊட்டச்சத்துக் குறைபாடு (அதிக எடை இழப்பு).
- அதிக உடற்பயிற்சி (தடகள வீரர்கள் போல்).
- அதிக அளவிலான ஸ்டீராய்டு உள்ள மருந்துகள்.
- மருந்துகளின் தவறான பயன்பாடு.
- அதிகப்படியான மன அழுத்தம்.
- கபச் சுரப்பி மற்றும் முன்மூளை கீழுள்ளறை சம்பந்தமான கட்டி அல்லது காயம்.
- மூளை புற்றுநோய்க்கான கதிர் இயக்க சிகிச்சை.
- அதிக அளவிலான இரும்புச்சத்து.
இது எப்படி கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகின்றது?
பின்வருவனவற்றின் உதவியுடன் பெண் ஹைபோகோனாடிசத்தை மருத்துவர்கள் கண்டறிகின்றனர்:
- பின்வருவனவற்றின் விரிவான வரலாறு:
- அறிகுறிகள்
- முதல் முறை பூப்படைந்தது எப்போது மற்றும் மாதவிடாய் சுழற்சிகளை குறித்து அறிதல்.
- குடும்பத்தில் உள்ளவர்களின் மரபணு சார்ந்த நிலைமைகள்.
- கடந்த மற்றும் தற்போதைய நோய்கள்.
- கதிர்வீச்சு, கீமோதெரபி அல்லது கடந்த காலத்திலோ தற்போதோ இயக்க ஊக்கி மருந்துகள் மற்றும் அபின்கலந்த தூக்கமருந்து போன்ற மருந்துகளின் பயன்பாடு.
- மன அழுத்தம், மனச்சோர்வு மற்றும் பதட்டம்.
- மார்பகங்கள் மற்றும் மறைவிட முடி போன்ற இரண்டாம் நிலை பாலியல் சிறப்பியல்புகளை கண்டறிவதற்கான உடல் பரிசோதனை
- இரத்த பரிசோதனைகள்
- எஃப்.எஸ்.ஹெச் (FSH) அளவுகள்.
- கருவகவூக்கி வெளியிடு ஹார்மோன் (ஜிஎன்.ஆர்.ஹெச்) ஊசிக்கு பின் உள்ள எல்.ஹெச் (LH) அளவுகள்.
- தைராய்டு ஹார்மோன்கள், புரோலாக்டின் ஹார்மோன் மற்றும் டெஸ்டோஸ்டிரானின் அளவுகள்.
- இரும்புச்சத்து அளவுகள்.
- குரோமோசோம்களில் குறைபாடுகளை கண்டறிவதற்கான மரபுமெய்யலசல் (எ.கா: தேர்னர் கூட்டறிகுறி, கல்லன் நோய்க்குறி).
- கபச் சுரப்பி மற்றும் முன்மூளை கீழுள்ளறையில் உள்ள கட்டிகளை கண்டறிய மூளையின் காந்த அதிர்வு விம்பங்கள் (எம்.ஆர்.ஐ).
பெண் ஹைபோகோனாடிசத்திற்கான சிகிச்சை, நோய் உருவான காரணத்தை உள்ளடக்கியதாகும். இந்த சிகிச்சை பொதுவாக பின்வருவனவற்றை உள்ளடக்குகிறது:
- ஜிஎன்.ஆர்.ஹெச் ஊசி.
- மனிதக்கரு வெளியுறை கருவகவூக்கி (ஹெச்.சி.ஜி) ஊசி.
- ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்ட்டிரோன்களை கொண்ட வாய்வழி கருத்தடை மாத்திரைகள்.
- உணவு மற்றும் ஊட்டச்சத்து சீர்திருத்தம்.
- மன அழுத்தத்தை சரிசெய்வது.
- கால்சியம் மற்றும் வைட்டமின் மாத்திரைகள்.