முன்கழுத்துக் கழலை என்றால் என்ன?
முன்கழுத்துக் கழலை, என்பது அயோடின் பற்றாக்குறை நோய் எனவும் அழைக்கப்படுகின்றது, இது தைராய்டு சுரப்பி அசாதாரணமாக பெரிதடையும் நிலை. அயோடின் குறைபாடே முன்கழுத்துக் கழலைக்கான முதன்மைக் காரணமாக கருதப்படுகிறது. இத்தகைய அயோடின் பற்றாக்குறையினால், தைராய்டு சுரப்பி உற்பத்தி செய்யும் ஹார்மோன் தைராக்சின் உற்பத்தியாகுவதில்லை, இதன் விளைவாக தைராய்டு ஊக்கி ஹார்மோன் (டிஎஸ்ஹெச்) அளவு அதிகரித்து தைராய்டு சுரப்பி வீக்கம் அடையும், இந்நிலைக்கூட முன்கழுத்துக் கழலை என அழைக்கப்படுகிறது.
முன்கழுத்துக் கழலை இரண்டு வகையில் ஏற்படும், அவை,
- டிஸ்பியூஸ் கோய்ட்டர்: முழு தைராய்டு சுரப்பியும் பெரிதடைதல்.
- நொதிலர் கோய்ட்டர்: தைராய்டு சுரப்பியின் சில பிரிவுகள் அல்லது நொதில்கள் மட்டுமே விரிவடைதல்.
இதன் முக்கிய அடையாளங்களும் அறிகுறிகளும் யாவை?
முன்கழுத்துக் கழலையின் அறிகுறிகள் பெரும்பாலும் அதன் அடிப்படை காரணத்தைக் கொண்டு வேறுபடுகிறது.
- முன்கழுத்துக் கழலையின் மிகவும் பொதுவான அறிகுறிகள்:
- கழுத்தின் அடிப்பகுதியில் ஏற்படும் வீக்கம்.
- மற்ற அறிகுறிகள் பின்வருமாறு:
- தொண்டை இறுக்கம்.
- கரகரப்பான குரல்.
- இருமல்.
- விரிவடைந்த தைராய்டு சுரப்பி ஈஸோபாகஸ் அல்லது உணவுக்குழாயை அழுத்தும் போது விழுங்குதலில் ஏற்படும் சிக்கல்.
- சுவாசக் குழாயின் அழுத்தம் காரணமாக மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்படும்.
- ஹைபர்டைராய்டிசத்துடன் தொடர்புடைய அறிகுறிகள் பின்வருமாறு:
- வெப்ப சகிப்புத்தன்மையின்மை.
- எடை இழப்பு.
- சாப்பாட்டில் விருப்பம் அதிகரித்தல்.
- ஹைப்போ தைராய்டிசத்துடன் தொடர்புடைய அறிகுறிகள் பின்வருமாறு:
- எடை அதிகரிப்பு.
- குளிர் சகிப்புத்தன்மையின்மை.
- மலச்சிக்கல்.
- தோல் வறட்சி.
- களைப்பு.
இதன் முக்கிய காரணங்கள் என்ன?
முன்கழுத்துக்கழலையின் பொதுவான காரணிகளில் ஒன்று அயோடின் குறைபாடாகும்.
அயோடின் குறைபாடு என்பது உணவு பழக்கத்தில் குறைவான அயோடின் பயன்படுத்துவதன் விளைவாக ஏற்படுவது, முட்டைக்கோசு, காலிஃபிளவர் மற்றும் ப்ரோக்கோலி போன்ற உணவுகளை உட்கொள்வதன் மூலம் அயோடின் குறைபாட்டை சமநிலை படுத்தலாம்.
- பிற காரணங்கள் பின்வருமாறு:
- ஹைபர்தைராய்டிசம் - அதிகமான தைராய்டு ஹார்மோன் அளவுகள்.
- ஹைப்போதைராய்டிசம் - குறைவான தைராய்டு ஹார்மோன் அளவுகள்.
- க்ரேவ்ஸ் நோய் - தைராய்டு செல்கள் மூலம் உற்பத்தியாகும் அதிக தைராய்டு ஹார்மோன்.
- ஹாஷிமோட்டோ நோய் - நோய் எதிர்ப்பு மண்டலத்தின் குறைபாடுகள் காரணமாக சேதமடைந்த தைராய்டு சுரப்பி.
- தைராய்டு புற்றுநோய்.
- லித்தியம் மற்றும் பினில்பூட்டசோன் போன்ற சில மருந்துகளும் முன்கழுத்துக் கழலை நோய்க்கு வழிவகுக்கக்கூடியது.
இது எப்படி கண்டறியப்படுகிறது மற்றும் சிகிச்சையளிக்கப்படுகிறது?
உடலியல் பரிசோதனையுடன் சில சோதனைகளின் உதவியுடன் முன்கழுத்துக் கழலை நோயை கண்டறியலாம்.
சோதனைகளுள் அடங்குபவை:
- தைராய்டு ஹார்மோன் அளவுகளை அளவிடுவதற்கான இரத்த பரிசோதனை.
- ஹாஷிமோடோ மற்றும் க்ரேவ்ஸ் நோய்களின் ஆன்டிபாடீஸை கண்டறிவதற்கான இரத்த பரிசோதனைகள்.
- அல்ட்ராசவுண்ட் ஸ்கேன்.
- காந்த அதிர்வு இமேஜிங் (எம்ஆர்ஐ) அல்லது கம்ப்யூட்டேட் டோமோகிராபி (சிடி) ஸ்கேன்.
- திசுப்பரிசோதனை.
- தைராய்டு நடவடிக்கையை மதிப்பீடு செய்ய ஹார்மோன் சோதனைகள்.
முன்கழுத்துக் கழலையின் சிகிச்சையானது, அதற்கான காரணம், அதன் அறிகுறிகள் மற்றும் அதன் அளவு ஆகியவற்றைப் பொறுத்தது.
- சாதாரண தைராய்டு ஹார்மோன் அளகளை விட லேசாக பெரிதடைந்த தைராய்டு ஹார்மோன் அளவை கவனிப்பின் கீழ் வைக்கக்கூடும்.
- உங்கள் மருத்துவர் அசாதாரணமான தைராய்டு செயல்பாடுகளுக்கு மருந்துகளை பரிந்துரைக்கலாம்.
- தேவைப்பபடும் அயோடின் அளவுகளை கையாளுவதற்கு அயோடின் சப்ளிமெண்ட்கள் கொடுக்கப்படலாம்.
- அதிகப்படியான தைராய்டு இருக்கும்பட்சத்தில் உங்கள் மருத்துவர் வாய்வழியாக கொடுக்கப்படும் கதிரியக்க தைராய்டு சிகிச்சையை பரிந்துரைக்கலாம்.
- புற்றுநோய் அல்லது மிகப்பெரிய முன்கழுத்துக் கழலை இருக்கும் வழக்குகளில், அறுவைச் சிகிச்சையுடன் கூடிய கதிரியக்க தைராய்டு சிகிச்சை தேவைப்படலாம்.