எச்.பைலோரி என்றால் என்ன?
எச்.பைலோரி (ஹெலிகோபேக்டர் பைலோரி) என்பது உடலில் நுழைந்து வயிற்றில் தாங்கும் ஒரு பாக்டீரியா ஆகும். இது பொதுவாக அமைதியாக இருக்கும் (வயிற்றில் எந்த தொந்தரவும் ஏற்படுத்தாமல் இருக்கும்), ஆனால் சில மனிதர்களில் அது வளர்ந்து வயிற்றுப் புண் உண்டாக்கும். இது வழக்கமாக ஆண்டிபையோட்டிக்ஸ் மூலம் எளிமையாக குணமடையும் ஜி.இ.ஆர்.டி (காஸ்ட்ரோ-ஈசோஃபேகல் ரிஃப்லக்ஸ் நோய்) என்னும் நாள்பட்ட நோய்க்கு வழிவகுக்கிறது.
இதன் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் என்ன?
எச்.பைலோரி வயிற்றுக்குள் நுழையும்போது, அது வயிற்றில் அமிலம் உற்பத்தியை அதிகரிக்கிறது மற்றும் வயிற்றின் உட்பூச்சில் சேதம் ஏற்பட்டு வயிற்றுப் புண்ணுக்கு வழிவகுக்கிறது (சிலநேரங்களில் இது பல இரைப்பைப்புண்களை ஏற்ப்டடுத்தலாம்). வயிற்றுப்புண்ணின் அறிகுறிகள் பின்வருமாறு:
- மேல் வயிற்றில் வலி (மேலும் வாசிக்க: வயிற்று வலியின் காரணங்கள்).
- வயிற்று வலி, சாப்பிட்ட சில மணி நேரங்களில் வலி அதிகரித்தல்; அதிகமாக பட்டினி கிடைத்தால் அல்லது மெதுவாக உணவு உண்ணுதல் காரணமாக வலி அதிகரித்தல்.
- குமட்டல்.
- வாந்தி (சில நேரங்களில் வாந்தியில் இரத்தம் இருத்தல்).
- வயிறு உப்புதல்.
- ஏப்பம் விடுதல்.
- எடை குறைவு அல்லது இரத்தசோகை.
- கருப்பு நிற மலம்.
இதன் முக்கிய காரணங்கள் யாவை?
எச்.பைலோரி உடலில் எப்படி நுழைகிறது என்று தெரிவதில்லை ஆனால் நுழைந்த பின் வயிற்று உட்பூச்சில் புண் ஏற்படுத்தும். இரைப்பைப் புண்களுக்கு எச்.பைலோரி ஒரு காரணம் ஆனாலும் ஒருவர் முன்னரே அந்த பாக்டீரியாவிற்கு வெளிப்பட சில ஆபத்துக்கு காரணிகள் உள்ளன.
இதன் ஆபத்துக்கு காரணிகள் பின்வருமாறு:
- எச்.பைலோரிவால் பாதிக்கப்பட்டன ஒரு நபருடன் தொடர்பில் இருப்பது.
- மோசமான தண்ணீர் தரம் (இதுபோன்ற தண்ணீர் குடிப்பது தொற்று ஏற்படுத்தும்).
- அதிகமான மக்க உள்ள இடங்களில் வாழ்தல்.
- மோசமான சுகாதார நிலை உள்ள இடங்களில் வாழ்தல்.
இது எப்படி கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகிறது?
ஒரு போதுமான மருத்துவ வரலாறுதான் கூடிய முழுமையான உடல் பரிசோதனை மூலம் காஸ்ட்ரோ-ஈசோஃபேகல் ரிஃப்லக்ஸ் நோயை (ஜி.இ.ஆர்.டி) கண்டறியலாம். எச்.பைலோரி தொற்றை கண்டறிய சில சோதனைகள் அவசியம். அவை பின்வருமாறு:
- சி.பி.சி போன்ற இரத்த பரிசோதனைகளுடன் மலப் பரிசோதனை.
- மூச்சு யூரியா சோதனை.
- மேல் செரிமான குழாய் எண்டோஸ்கோபி.
வழக்கமாக, எச்.பைலோரியை கீழ்கொடுக்கப்பட்டுள்ள வாய்வழி மருந்துகளின் கலப்பு சிகிச்சை மூலம் குணப்படுத்தலாம்:
- நுண்ணுயிர் எதிர்ப்பிகள் - அமொக்சிசிலின், மெட்ரோனிடசோல், டினிடசோல், க்ளாரித்ரோமைசின் போன்ற மற்றும் பல மருந்துகள் மூலம் பாக்டீரியாவை வெளியேற்றுதல்.
- புரோட்டான் பம்ப் இன்ஹிபிட்டர்ஸ் மற்றும் ஹிஸ்டமின் பிளாக்கர்ஸ் - இந்த மருந்துகள் வயிற்றில் இருக்கும் அமிலத்தின் அளவைக் குறைக்கவும் வயிற்றுப்புண்களை குணமாக்கவும் பயன்படுத்தப்படுகிறது.
- பிஸ்மத் சப்சலிஸிலேட் - வயிற்றுப்புண்ணுக்கு ஒரு மேல்பூச்சு ஏற்படுத்தி வயிற்றின் உள்ப்பூச்சை பாதுகாக்கிறது.