இதய செயலிழப்பு என்றால் என்ன?
உடலின் மற்ற உறுப்புகளுக்கு போதுமான இரத்ததை வெளியேற்ற முடியாத வகையில், இதயம் இரத்தத்தை வெளியேற்றும் செயல்பாடு கடுமையாகக் குறைந்து இருக்கும் நிலைமையே இதய செயலிழப்பு ஆகும். பல வருடங்களாக இதய நோயினால் பாதிக்கப்பட்ட நபர்கள் அல்லது முதியவர்களிடத்தில் இது பெரும்பாலும் காணப்படுகிறது. இது ஒரு அவசர நிலையாகும். எனவே, இதற்கு உடனடியாக மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட வேண்டும்.
நோயின் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை?
பொதுவான தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் பின்வருமாறு:
- சுவாசிப்பிதில் சிரமம்.
- தலைவலி, குழப்பம்.
- பதட்டம்.
- நாடித்துடிப்ப்பு அதிகரித்தல் (இதயத்துடிப்பு மிகைப்பு).
- இரத்த அழுத்தத்தில் குறைவு (குறைந்த இரத்த அழுத்தம்).
- நீர்க்கோவை (வயிற்றில் உருவாக்கப்பட்ட திரவம்).
- குறிப்பாக இரவில் அடிக்கடி சிறுநீர் கழித்தல்.
- படபடப்பு.
- வயிற்று மற்றும் மேல் உடலை நோக்கி பரவும் மார்பு பகுதியின் வலி.
நோய் தாக்குதலுக்கான முக்கிய காரணங்கள் என்ன?
இதய செயலிழப்பு ஏற்படுவதற்கான முக்கிய காரணங்கள் பின்வருமாறு:
- இதயம் சார்ந்த காரணிகள் பின்வருமாறு:
- உயர் இரத்த அழுத்தம்.
- குறுக்கம் (மகாதமனி அல்லது நுரையீரனாடி, அதாவது இரத்த நாளங்கள் குறுக்கம் அடைவது).
- இதய ஊற்றை மற்றும் இதயவறை இடைச் சுவர் குறைபாடு போன்ற அமைப்பு ரீதியான குறைபாடுகள் (இதயத்தின் சுவர்களில் துளை).
- மாரடைப்பு (இதயத் தசைத்திசு இறப்பு).
- நுண்ணுயிரி தொற்று இதய உள்ளுறையழற்சி.
- மற்ற காரணங்கள் பின்வருவனவற்றை உள்ளடக்குகிறது:
- நோய்த்தொற்றுகள்.
- நுரையீரல் வளித்தேக்கம் (நுரையீரலில் ஏற்படும் இரத்த உறைவு).
- பீட்டா-பிளாக்கர்ஸ், ஸ்டீராய்டு அல்லாத அழற்சி எதிர்ப்பு மருந்துகள் போன்ற மருந்துகளை அதிகப்படியாக உட்கொள்ளுதல் போன்றவை.
- உடல் மற்றும் உணர்ச்சி ரீதியிலான மன அழுத்தம்.
இது எப்படி கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகின்றது?
நோயாளியின் அறிகுறிகளைப் புரிந்துகொள்ள நோயாளியின் நோய் சார்ந்த விரிவான வரலாற்றை பற்றி மருத்துவர் அறிந்து கொள்வார், இரத்த அழுத்த அளவீடுகளை மதிப்பீடு செய்து, இதயத்தின் ஒசையை சோதித்துப் பார்ப்பார்.
ஆய்வக பரிசோதனை மற்றும் உடல் பரிசோதனை மூலம் மருத்துவரால் நோய் கண்டறியப்படுகிறது. ஆய்வக பரிசோதனையானது பின்வருவனவற்றை மதிப்பீடு செய்ய மேற்கொள்ளப்படுகிறது:
- யூரியா.
- மின்பகுபொருள்கள்.
- முழுமையான இரத்த அணுக்களின் எண்ணிக்கை.
- பிஎன்பி (மூளைச் சோடியச்சிறுநீர்மைப் புரதக்கூறு).
- கல்லீரல் செயல்பாடு.
- சிறுநீரக செயல்பாடு.
எலக்ட்ரோகார்டியோகிராஃபி (ஈசிஜி, மார்பக எக்ஸ்-கதிர்கள் (எக்ஸ் - ரே) சோதனை, எக்கோகார்டியோகிராபி போன்ற இயல்நிலை வரைவு ஆய்வுகள் நடத்தப்படும்.
இதய செயலிழப்பு உள்ள நோயாளியை பின்வருமாறு கவனித்தல் வேண்டும்:
- உடல் மற்றும் உணர்ச்சி ரீதியாக ஓய்வெடுத்தல்.
- எடை இழப்பு.
- உயிர்வளி சிகிச்சை மூலம் மூச்சுத்திணறலுக்கு சிகிச்சையளித்தல்.
- உணவுத் திட்டம் சார்ந்த ஆலோசனை.
- மது அருந்துதல் மற்றும் புகை பிடித்தலை நிறுத்துதல்.
- தினசரி உடற்பயிற்சி செய்தல்.
மருந்து சிகிச்சை பின்வரும் மருந்துகளை உள்ளடக்குகிறது:
- சிறு நீரிறக்க ஊக்கிகள்.
- இரத்தநாள விரிவுமருந்து.
- ஏசிஇ தடுப்பான்கள்.
- ஏஆர்பி
- பீட்டா-பிளாக்கர்கள்.
- ஸ்டேடின்.