ஹைபர்கலீமியா - Hyperkalemia in Tamil

Dr. Ayush PandeyMBBS,PG Diploma

April 24, 2019

July 31, 2020

ஹைபர்கலீமியா
ஹைபர்கலீமியா

ஹைபர்கலீமியா என்றால் என்ன?

ஹைபர்கலீமியா என்பது இரத்தத்தில் அசாதாரணமாக மிக அதிக அளவில் இருக்கும் பொட்டாசியத்த்தை குறிக்கும் ஒரு பொதுவான மருத்துவ நிலையாகும். உடலில் உள்ள நரம்பு மற்றும் தசை செயல்பாட்டிற்கு பொட்டாசியம் அவசியம் ஆகும். இரத்தத்தில் இருக்கும் அதிகப்படியான பொட்டாசியம் அளவுகள் உயிரிழப்பு போன்ற ஆபத்தான விளைவுகளுக்கு கூட வழிவகுக்கலாம்.

நோயின் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை?

5.5 மில்லி மோல்/லி -க்கு மேலே உள்ள பொட்டாசியம் அளவுகள் ஹைபர்கலீமியாவின் அறிகுறியாகும்.

இந்த நிலை பொதுவாக நோயின் அறிகுறி மற்றும் ஹைபர்கலீமியாவில் காணப்படும் சில அறிகுறிகளின் அடிப்படை மருத்துவ நிலைகளின் விளைவாகும்:

நோய் தாக்குதலுக்கான முக்கிய காரணங்கள் என்ன?

 • ஹைபர்கலீமியா ஏற்படுவதற்கான பொதுவான காரணங்கள் அடங்கியவை.
 • பிற காரணங்களாவன.
  • டைப் 1 நீரிழிவு.
  • நீர்ச்சத்துக் குறைவு.
  • அடிசன் நோய்.
  • கடுமையான காயம் or தீப்புண் அதிகப்படியான இரத்த உயிரணு சிதைவுக்கு வழிவகுக்கிறது.
  • பீட்டா தடுப்பான்கள் மற்றும் ஆஞ்சியோடென்சின்-மாற்றி என்சைம் (ஏசிஇ) தடுப்பான்கள் போன்ற குறிப்பிட்ட மருந்துகள் ஹைபர்கலீமியாவால் ஏற்படும் அதிக ஆபத்து நிறைந்த காரணிகளுடன் தொடர்புபடுத்தப்படும் நோய்களாகும்.

இது எப்படி கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகின்றது?

ஹைபர்கலீமியா நோயறிதல் பல ஆய்வுகளை அடிப்படையாகக் கொண்டது:

 • பொட்டாசியம் அளவை மதிப்பீடு செய்ய இரத்த பரிசோதனைகள்.
 • இதய சம்பந்தமான ஆய்வுகளை மதிப்பிட எலக்ட்ரோகார்டியோகிராஃபி (ஈசிஜி).
 • சிறுநீரக செயல்பாடு சோதனை.
 • சிறுநீர் சோதனை.
 • நரம்பியல் பரிசோதனை.

இதற்கு அளிக்கப்படும் சிகிச்சையானது ஹைபர்கலீமியாவின் தீவிரத்தன்மை மற்றும் காரணத்தை அடிப்படையாகக் கொண்டது ஆகும்.

ஓரளவுள்ள ஹைபர்கலீமியா பிரச்சனைக்கு உணவு மாற்றங்கள் மற்றும் மாற்று மருந்துகளின் மூலம் கட்டுப்படுத்தப்படுகிறது.

பொட்டாசியத்தை புறஉயிரணுவில் இருந்து ஊடுருவு பகுதிக்கு மாற்றுவதற்கு சிகிச்சை நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன, அதற்கு சிகிச்சை முறைகளாக:

 • கால்சியம்.
 • இன்சுலின்.
 • அல்பியூட்டரால்.
 • வளர்சிதைமாற்ற அமிலத்தன்மைக்கு சோடியம் பைகார்பனேட் துணை சிகிச்சை முறையாக பரிந்துரைக்கப்படுகிறது.

தீவிர ஹைபர்கலீமியா நோய்க்கு நரம்பு வழியாக செலுத்தப்படுகிற கால்சியம், குளுக்கோஸ், அல்லது இன்சுலின் சிகிச்சை முறை தேவைப்படும்.

முக்கிய அறிகுறிகளை கண்காணித்து தொடர்ச்சியான இதய கண்காணிப்பு செய்யப்படுதல் அவசியமாகும். இந்நோய் ஏற்படுவதற்கான அடிப்படை மருத்துவ நிலையில் உடனடி கவனம் தேவைப்படுகிறது.

சிறுநீரக செயலிழப்பு தொடர்பான சந்தர்ப்பங்களில் டயாலிசிஸ் சிகிச்சை கருதப்பட வேண்டும்.மேற்கோள்கள்

 1. Walter A. Parham. et al. Hyperkalemia Revisited. Tex Heart Inst J. 2006; 33(1): 40–47. PMID: 16572868.
 2. Anja Lehnhardt. et al. Pathogenesis, diagnosis and management of hyperkalemia. Pediatr Nephrol. 2011 Mar; 26(3): 377–384. PMID: 21181208
 3. American Family Physician. [Internet]. Leawood, KS; Potassium Disorders: Hypokalemia and Hyperkalemia.
 4. Simon LV, Farrell MW. Hyperkalemia. [Updated 2019 Feb 16]. In: StatPearls [Internet]. Treasure Island (FL): StatPearls Publishing; 2019 Jan-.
 5. MedlinePlus Medical Encyclopedia: US National Library of Medicine; High potassium level.

ஹைபர்கலீமியா க்கான மருந்துகள்

Medicines listed below are available for ஹைபர்கலீமியா. Please note that you should not take any medicines without doctor consultation. Taking any medicine without doctor's consultation can cause serious problems.