காயம் என்றால் என்ன?
வெளிப்புறக் காரணிகள் மூலம் உங்கள் உடலில் ஏற்படும் எந்த ஒரு சேதமும் காயம் அல்லது அதிர்ச்சி என்று அறியப்படுகிறது.உடலின் தலையில் இருந்து கால் வரை உள்ள எந்த பாகத்திலும் காயம் ஏற்படலாம்.சில காயங்கள் எளிதில் குணமடையாக் கூடியவை, அதே நேரத்தில் பெரிய அதிர்ச்சிகரமான காயங்கள் முடக்கம் அல்லது மரணத்திற்கு வழிவகுக்கும்.இடம், தீவிரம் மற்றும் காரணி போன்ற பல காரணங்களைப் பொறுத்து காயம் வகைப்படுத்தப்படுகிறது.
நோயின் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை?
காயத்தின் தளம் மற்றும் தீவிரத்தன்மையைப் பொறுத்து இதன் தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் வேறுபடுகின்றன.பொதுவான அறிகுறிகள் பின்வருமாறு:
- வலி.
- வீக்கம் மற்றும் மென்மை.
- உடல் செயல்பாடு இழப்பு அல்லது ஒரு செயல்பாட்டை செய்ய இயலாமை.
- இரத்தப்போக்குடன் காயம்.
- இரத்தக்கட்டி (திசுக்களில் உறைந்த இரத்தத்தின் குவிப்பு).
- வாந்தி.
- தலைச்சுற்றல்.
- உணர்வு இழப்பு.
- சரியாக பார்க்க இயலாமை.
- ஒருங்கிணைப்பு இழப்பு.
- நினைவு இழப்பு.
நோய் தாக்குதலுக்கான முக்கிய காரணங்கள் என்ன?
காயத்தின் முக்கிய காரணங்கள் பின்வருமாறு:
- விபத்துகள்.
- கீழே விழுதல்.
- தீக்காயங்கள்.
- உடல் ரீதியான தாக்குதல்.
- தற்கொலை முயற்சி.
- விளையாட்டு காயங்கள்.
- வன்முறை அல்லது போர்.
- மீண்டும் மீண்டும் உண்டாகும் சிரமம்.
- மருந்து நச்சுத்தன்மை.
இது எப்படி கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகின்றது?
காயத்தின் நோய் கண்டறிதல் முதன்மையாக மேலோட்டமான (காணக்கூடிய) அல்லது உள்ளார்ந்த (கண்ணுக்கு தெரியாத) தாக்கங்கள் மற்றும் அறிகுறிகளை பொறுத்து செய்யப்படுகிறது.காயத்தின் தீவிரத்தை சுட்டிக்காட்டும், காயம் தீவிரமடைதல் மதிப்பெண்ணைப் பயன்படுத்தி என்னும் காயம் தரப்படுத்தல் சோதனை நோய் கண்டறிதலின் மிகவும் முக்கியமான பகுதியாகும்.நோய் கண்டறிதல் பின்வருவனவற்றை உள்ளடக்கியது:
- உடல் பரிசோதனை:
காயத்தின் தளத்தை பற்றிய விரிவான உடல் பரிசோதனை மூலம் தீவிரத்தை புரிந்துகொள்வதோடு சிகிச்சையையும் தீர்மானிக்க முடியும்.எலும்பு மற்றும் தசை காயம் ஏற்பட்டால், மருத்துவர் உங்கள் நடத்தை மற்றும் பாதிக்கப்பட்ட பகுதியின் இயக்கத்தின் அளவை மதிப்பிடுவார். - நரம்பியல் சோதனை:
நரம்பு செயல்பாட்டை மதிப்பிடுவதற்கு உங்கள் கண் இயக்கங்கள், உணர்ச்சி மற்றும் தசை கட்டுப்பாட்டு ஆகியவற்றை மருத்துவர் பரிசோதிப்பார். - தோற்றமாக்கல் சோதனைகள்:
- எக்ஸ்-கதிர்கள் சோதனை.
- எம்.ஆர்.ஐ.
- அல்ட்ராசவுண்ட்.
- சி.டி ஸ்கேன்.
- இரத்த சோதனை:
மூளை காயம் காரணமாக வெளியேறும் இரண்டு முக்கியமான புரதங்கள் (ஜி.எப்.ஏ.பி மற்றும் யு.சி.ஹெச் - எல்1) இருப்பதை கண்டறிவதற்கு ஒரு இரத்த பரிசோதனை செய்யப்படுகிறது.
முதன்மையாக காயத்தின் சிகிச்சையானது மருத்துவமனைக்கு செல்லும் முன்பே, ஒரு சிறந்த முதலுதவி மூலம் ஆரம்பிக்கப்படும்.பொதுவாக பின்பற்றப்படும் சிகிச்சை முறைகள் பின்வருமாறு:
- வலி நிவாரணிகள், அழற்சி எதிர்ப்பு மற்றும் வாந்தி எதிர்ப்பு மருந்துகள், மற்றும் தூக்கமருந்து போன்ற மருந்துகள்.
- பாதிக்கப்பட்ட உடல் பகுதியை உயர்த்தி வைத்தல்.
- எலும்பு முறிவு ஏற்பட்டால் இறுக்கமான மீள் கட்டுகள் மற்றும் கவண்கயிறு.
- பிசியோதெரபி.
- அறுவை சிகிச்சை.
காயத்திற்கு நீங்கள் சில நிபுணர்களின் ஆலோசனையை பெறலாம்.சிறு காயங்களில் இருந்து மீள்வது ஒரு பெரிய அதிர்ச்சியில் இருந்து மீள்வதை விட வேகமாக உள்ளது.மறுவாழ்வு, மென்மையான பயிற்சிகள், முறையான உணவு மற்றும் உங்கள் மருத்துவர் மற்றும் பிசியோதெரபிஸ்ட் ஆகியோரிடமிருந்து வழக்கமாகபெரும் ஆலோசனைகள் ஆகியவை உடனடியான மீட்புக்கு உதவும்.