தாடை வலி என்றால் என்ன?
தாடையின் ஒருபுறம் அல்லது இருபுறமும் டெம்ப்போரொமாண்டிபுலர் மூட்டினை சுற்றி வலி இருப்பின் அது தாடை வலியை குறிக்கிறது.இது குறுகிய கால நோய் அல்லது நீண்ட கால நோய் பிரச்சனையாக இருக்கலாம்.
நோயின் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை?
தாடை வலியுடன் தொடர்புடைய அறிகுறிகள் அடங்கியவை:
- தலைவலி.
- தாடை நொய்வு.
- உணவை மெல்லும்போது அல்லது வாய் திறக்கும் போது வலி.
- காது அல்லது நெற்றியினை சுற்றி வலி.
- தாடையின் இயக்கத்தின் போது மடக்கொலி, உறுத்தல் அல்லது அரைத்தல் போன்ற சத்தங்கள் கேட்பது.
- வாய் திறக்கும் போது தாடைகள் பூட்டிக்கொள்ளுதல் அல்லது இருகிக்கொள்ளுதல்.
- முகத்தில் வலி மிக அரிதாக ஏற்படலாம்.
- இருதய சம்பந்தமான பிரச்சனை உள்ள சமயங்களில் நெஞ்சிலிருந்து வலி கழுத்து, முதுகு, கை அல்லது குமட்டலுடன் சேர்ந்து வயிற்றுக்கு பரவுதல்,மூச்சுதிணறல், லேசான தலை வலி அல்லது ஈரமான வியர்வை போன்றவை இதன் அறிகுறிகளாக சொல்லப்படுகின்றன.
நோய் தாக்குதலுக்கான முக்கிய காரணங்கள் என்ன?
தாடை வலிக்கான மிகவும் பொதுவான காரணங்கள் அடங்கியவை:
- காயம்.
- நோய்த்தொற்றுகள்.
- பல்வலி அல்லது பல் குடைதல்.
- சைனஸ் தொடர்பான பிரச்சினைகள்.
- பற்களை சுற்றி தசைநாண் நோய்கள்.
- மூட்டு வீக்கம் போன்ற பிரச்சனைகள்.
- டெம்போராம்பன்டிபுலார் மூட்டு தொடர்பான பிரச்சனைகள் அல்லது பிற தாடை தொடர்பான பிரச்சினைகள்.
- மாரடைப்பு போன்ற இதய சம்பந்தமான பிரச்சனைகள்.
இது எப்படி கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகின்றது?
தாடை வலியின் காரணத்தை தீர்மானிக்க மருத்துவர் அறிகுறிகளின் ஒரு முழுமையான அறிக்கையை எடுப்பார். பின்வரும் பரிசோதனைகள் நோயறிதலை கண்டறிய பரிந்துரைக்கப்படலாம்:
- மூட்டு அழச்சியினை கண்டறிய, தடுப்பாற்றல் இரத்த பரிசோதனைகள், சிறுநீர் சோதனை, பயோப்சீஸ் (தசை, சிறுநீரக மற்றும் சருமம்) மற்றும் மூட்டு திரவ பரிசோதனைகள் (மூட்டு உயிர்ப்பு அல்லது வலி நிவாரணம்) ஆகிய பரிசோதனைகளை எடுத்தல்.
- எலக்ட்ரோ கார்டியோகிராம் (இ.சி.ஜி.), எக்கோகார்டுயோகிராபி (2 டி-எக்கோ), மற்றும் ஆஞ்சியோக்ராபி ஆகிய சோதனைகள் இதய சம்பந்தமான பிரச்சனைகளை மதிப்பீடு செய்ய எடுக்கப்படுகிறது.
- டெம்ப்போரொமாண்டிபுலர் எக்ஸ் கதிர்வீச்சு சோதனை (டி எம் ஜே நோய்கள்) மார்பு எக்ஸ் கதிர்வீச்சு சோதனை (இதய நோய்கள்) மற்றும் ஒற்றை பல் அல்லது முழு வாய் எக்ஸ் கதிர்வீச்சு சோதனை (ஒற்றை பல் அல்லது பற்களை சுற்றி உள்ள பிரச்சனைகள் ஆகியவை சம்பந்தப்பட்ட நோய்களைக் கண்டறிவதற்கு எடுக்கப்படுகிறது.
- கம்ப்யூட்டேட் டோமோகிராபி (சி டி ஸ்கேன்), காந்த அதிர்வு இமேஜிங் (எம்ஆர்ஐ), மற்றும் சிண்டிக்ராஃபி (எலும்பு ஸ்கேன்) போன்ற சோதனைகள் டெம்ப்போரொமாண்டிபுலர் மூட்டு பிரச்சனைகள் இருந்தால் எடுக்கப்படுகிறது.
தாடை வலிக்கான காரணம் கண்டறியப்பட்ட பிறகு, அது பின்வரும் முறைகளில் சிகிச்சை அளிக்கப்படுகிறது:
- மூட்டு வலியிலிருந்து நிவாரணம் பெற உடற்ப்பயிற்சிகள்.
- நுண்ணுயிர் எதிர்ப்பிகள்- தொற்றுநோய் தான் வலிக்கான மூலக் காரணம் என்றால் நுண்ணுயிர் எதிர்ப்பிகள் பரிந்துரைக்கப்படுகிறது.
- வீக்கம் காரணமாக உண்டாகும் வலிக்கு நிவாரணம் அளிக்க அழற்சி எதிர்ப்பு மருந்துகள்.
- தசை பிடிப்புகளை சரி செய்ய தசை தளர்த்திகள் கொடுக்கப்படுகிறது.
- பல் சொத்தை மற்றும் பற்களில் ஏற்படும் பாதிப்புதான் இந்த வலிக்கு காரணம் என்றால் ரூட் கேனல் சிகிச்சை அல்லது சொத்தை பற்களை நீக்குதல் பரிந்துரைக்கப்படுகிறது.
- டெம்ப்ரோ மாண்டிபுலர், மூட்டு செயலிழப்பு விஷயத்தில் வாய் பாதுகாப்பான் பொருத்தப்படுகிறது.
- பல்லைச்சுற்றியுள்ள திசு நோய் பிரச்சினைகளுக்கு அதற்கான சிகிச்சை முறைகள் பரிந்துரைக்கப்படுகிறது. (மேலும் வாசிக்க: பற்புறத் திசு நோய் சிகிச்சை).
- இதயம் சார்ந்த சிகிச்சை - இதய சம்பந்தமான பிரச்சனைகள் வலியை ஏற்படுத்தும் போது இதயத்திற்கான சிகிச்சை முறைகள் பரிந்துரைக்கப்படுகிறது.