மூட்டு விறைப்பு என்றால் என்ன?
மூட்டு விறைப்புத் தன்மை என்பது மூட்டுகளின் கடினமான அல்லது குறைந்த இயக்கத்தினை குறிக்கிறது. மூட்டு விறைப்பு, ஒரு மூட்டில் ஏற்படலாம், அல்லது, மணிக்கட்டு /கைகள் போன்றவற்றில் இருக்கும் பல சிறிய மூட்டுகளிலும் ஏற்படலாம்.
அதனுடன் தொடர்புடைய முக்கிய அடையாளங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை?
மூட்டு விறைப்பானது கட்டுப்படுத்தப்பட்ட இயக்கத்தினை கொண்டிருக்கும்,மேலும் மூட்டுகளில் விரிசல், வலி மற்றும் அதனோடு தொடர்புடைய அழற்சி அல்லது வீக்கம் ஆகியவற்றைக் கொண்டிருக்கும். ஒரு நாளின் குறிப்பிட்ட சில நேரங்களில், குறிப்பாக காலை வேளைகளில் மூட்டு விறைப்பு மோசமாக இருக்கும். ஏனெனில் இரவில் மூட்டுகள் செயல்படாமல் இருக்கும்போது, இரு எலும்புகளுக்கு இடையில் எந்த திரவ இயக்கமும் இருக்காது. எனினும்,நேரம் செல்லச் செல்ல, மூட்டுகள் தானே இளக்கிக்கொள்ளும் மற்றும் அந்த நபர் நன்றாக இருப்பதை உணர ஆரம்பிப்பார். நாட்பட்ட மூட்டு விறைப்பானது ஒரு நிரந்தர இயக்கமின்மைக்கு வழிவகுக்கும்.
அதன் முக்கிய காரணங்கள் என்ன?
மூட்டு விறைப்பு, சுயமாக சரியாகிக்கொள்ளும் தன்மையைக் கொண்ட மற்றும் கடுமையான மூட்டு விறைப்புகளை ஏற்படுத்தும் காயம் காரணமாகவும் இருக்கலாம், அல்லது பலதரப்பட்ட மருத்துவ காரணங்களாலும் இது ஏற்படக்கூடும். இதனால் காலப்போக்கில் விறைப்பானது மோசமாகி நீடித்திருப்பதற்கு வழிவகுக்கும். மூட்டு விறைப்புக்கான மிகவும் பொதுவாக இந்த பாதிப்புக்கான பிரதான காரணம் கீழ்வாதம் மற்றும் முடக்கு வாதம் ஆகும். இந்த தன்னுடல் தாக்கு நோயானது மூட்டுகளில் உள்ள ஆரோக்கியமான செல்களை பாதித்து, அவற்றினை வீங்கச் செய்து,வலி மற்றும் விறைப்பினை உண்டாக்குகிறது. வயதானவர்களிடம் விறைப்பானது பொதுவாக இருப்பதற்கு காரணம் முதுமை மூட்டழற்சி (ஆஸ்டீயோஆர்த்ரிடிஸ்) ஆகும்,இவை பொதுவாக முட்டி , இடுப்பு மற்றும் முதுகு போன்ற ஒற்றை மூட்டுகளில் முக்கியமாக சம்பந்தப்பட்டிருக்கும். மூட்டு விறைப்புக்கான பிற காரணங்கள் வாழ்க்கை முறை பழக்கங்களான உடல் உழைப்பற்ற வாழ்க்கை முறை, எடை கூடுதலாக இருப்பது மற்றும் தவறான தோற்றங்களில் நிற்பது / அமர்வது போன்றவைகளாகும். எலும்புப் புற்று நோய் மூட்டு விறைப்புக்கு ஒரு அரிய காரணமாகும்.
இது எப்படி கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகின்றது?
மூட்டு விறைப்பு ஒரு அடிப்படையான மருத்துவ அல்லது வாழ்க்கை முறை சீர்குலைவு அறிகுறியாகும்; எனவே, நிலைமையைக் கண்டறிய ஒரு விரிவான மதிப்பீடு தேவைப்படுகிறது. நபரின் வயது,வாழ்க்கை முறை மற்றும் மருத்துவ பின்னணி ஆகியவற்றைப் பொறுத்து, மருத்துவர் ஒரு தொடர் இரத்தப் பரிசோதனைகளை பரிந்துரைப்பார் மற்றும் பாதிக்கப்பட்ட மூட்டுகளின் எக்ஸ் - ரே ஆகியவற்றைக்கொண்டு நோயை அறிந்துகொள்வார் . நோயறிதலை அடிப்படையாகக் கொண்டு, மூட்டு விறைப்பு வீக்க எதிர்ப்பு மருந்துகள், ஸ்டெராய்டுகள் மற்றும் வலி நிவாரணிகளால் மூலம் அது கட்டுப்படுத்தப்படுகிறது. மூட்டு விறைப்பைக் குறைக்க சிறந்த வழி, ஒரு சில நிமிடங்கள் பாதிக்கப்பட்ட மூட்டுகளில் சூடான ஒற்றடம் கொடுக்க வேண்டும். இப்படி ஒரு நாளில் பல முறை ஒற்றடம் கொடுக்க வேண்டும். சூடான் ஒற்றடம் மூட்டுகளுக்கான சிகிச்சை முறையாகக் கருதப்படுகிறது, இது மூட்டினை தளர்த்தி, இரத்த ஓட்டத்தினை அதிகரிக்கிறது. வழக்கமான உடற்பயிற்சி மூலம் ஒரு ஆரோக்கியமான எடை பராமரிப்பது மற்றும் மீன் எண்ணெய் மாத்திரை போன்ற துணை உணவுகள் எடுத்துக்கொள்வது மூட்டு விறைப்பை குறைக்க மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.