லாக்டோஸ் செரிமான கோளாறு என்றால் என்ன?
லாக்டோஸ் செரிமான கோளாறு என்பது சிறுகுடலில் சர்க்கரை லாக்டோஸினை ஜீரணிக்கூடிய தேவையான என்ஸைம் லாக்டேஸ் குறைந்திருப்பதால் ஏற்படக்கூடிய நிலையாகும். இந்தியாவுடன் ஒப்பிடும்போது, இது கிழக்கு ஆசிய பகுதிகளிலேயே அதிகமாக உள்ளது.
இதன் முக்கிய அடையாளங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை?
லாக்டோஸ் செரிமான கோளாறு பிரச்சனையால் விளையும் அறிகுறிகள் பின்வருமாறு:
- அடிவயிற்றில் ஏற்படும் வாயு (வாயுக்கோளாறு).
- வயிற்று போக்குக்கள்.
- இரைப்பை பகுதியில் ஏற்படும் நீர்க்கட்டு (வீக்கம்).
- குமட்டல்.
நோய் தாக்குதலுக்கான முக்கிய காரணங்கள் என்ன?
வயிற்றில் இடம்பெற்றிருக்கும் லாக்டேஸ் எனும் என்ஸைம், பால் மற்றும் பால் சார்ந்த பொருட்களில் பொதுவாக காணப்படும் சர்க்கரை லாக்டோஸ்களை கரைப்பதற்காக உதவக்கூடியது. முறையில்லாத உள்ளீர்ப்பு மற்றும் லாக்டோஸ் செரிமாணத்திற்கான திறனின்மை ஆகியவற்றாலேயே லாக்டோஸ் செரிமான கோளாறு ஏற்படுகிறது. லாக்டோஸ் செரிமான கோளாறு பிரச்சனைகளை ஏற்படுத்தக்கூடிய காரணிகள் பின்வருமாறு:
- இரைப்பை மற்றும் குடல் அழற்சி.
- ஒட்டுண்ணி தொற்று.
- இரைப்பையின் உட்பூச்சில் ஏற்படும் காயம்.
இதன் கண்டறியும் முறை மற்றும் சிகைச்சையளிக்கும் முறை யாவை?
சமீபத்திய நோய் தாக்குதலுக்கான அறிக்கையுடன் கூடிய அறிகுறிகள் மற்றும் உங்களது உணவு பழக்கங்கள் ஆகியவற்றை பற்றி உங்கள் மருத்துவர் கேட்கக்கூடும், இது உங்கள் உணவு பழக்கம் பற்றிய முறையான காணலை தரும். இதனுடன் உடலியல் பரிசோதனையும் மேற்கொள்ளப்படும். ஹைட்ரஜன் மூச்சு சோதனை, மலத்தின் அமிலத்தன்மைக்கான சோதனை, மற்றும் அகற்றுதலுக்கான சோதனை (உணவு ஒவ்வாமையை கண்டறிய பயன்படுத்தப்படும் சோதனை) ஆகியவைகள் நோயறிதலை உறுதிசெய்ய மேற்கொள்ளும் சில கூடுதல் சோதனைகள் ஆகும்.
இந்த லாக்டோஸ் செரிமான கோளாறை மேம்படுத்த எந்த வித மருந்துகளும் இல்லை. லாக்டோஸ் நிறைந்த உணவுகளை உட்கொள்ளும் விகிதத்தை குறைத்தல் அல்லது முற்றிலுமாக அவற்றை தவிர்ப்பதன் மூலமும் ஒருவரால் இந்நிலையிலிருந்து மேம்படமுடியும்.
சுய பாதுகாப்பு குறிப்புகள்:
- பால் சத்து நிறைந்த பொருட்களை முற்றிலும் தவிர்ப்பதனால் ஊட்டச்சத்து குறைபாடுகள் ஏற்படலாம். எனவே, பால் சத்து நிறைந்த பொருட்களுக்கு மாற்றாக அதற்கு இணையான சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்ளுவது அவசியம்.
- இந்த லாக்டோஸ் பிரச்சனையால் அவதிப்படும் மக்கள் உணவுகளில் பாலாடைக் கட்டிகளை சேர்த்துக் கொள்தல் நல்லது, ஏனெனில் அது அவர்களுக்கு சகிப்புத்தன்மையை ஏற்படுத்துகின்றது.
- அதேபோல அவர்களிடத்தில் லாக்டோஸ் குறைந்த அளவில் உள்ளதால், வெண்ணை மற்றும் கிரீம் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ளுதலும் நல்லது. தயிரில் உள்ள பாக்டீரியா லாக்டோஸ்யின் அளவுகளை குறைக்க உதவுவதால் போதிய சக்தியின் தேவைக்காக தயிரை உணவில் சேர்த்து கொள்தல் சாலசிறந்தது. இவை உங்களுக்கு பொருந்துகிறதா என நீங்கள் முயற்சி செய்து பார்க்கலாம்.
- வழக்கமாக சோயா பால் போன்ற சோயா பொருட்கள் பால் சத்து நிறைந்த பொருட்களுக்கு மாற்றாக உபயோகப்படுகின்றன. எனினும், சோயா பொருட்கள் பால் சத்து நிறைந்த பொருட்கள் கொடுக்கக்கூடிய நிகரான ஊட்டச்சத்தினை அளிப்பதில்லை.
- லாக்டோஸ் நிறைந்த பால் சத்து இருக்கும் உணவு பொருட்களை தவிர குக்கீஸ், கேக்கள், கஸ்டர்டு, சீஸ் சாஸ் மற்றும் ரொட்டியினால் செய்யப்படும் தின்பண்டங்கள் ஆகியவையும் அடங்கும். மளிகை சாமான்கள் வாங்க போகும் போது, உணவு லேபிள்களை சோதித்து அவை லாக்டோஸ்-இல்லாத உணவு பொருட்கள் தான் என்பதை உறுதி செய்து கொள்வது நன்று.