சுருக்கம்
உலக சுகாதார அமைப்பின் கருத்துப்படி, உலகளாவிய மரணங்களில் புற்றுநோய், முன்னணி வகிக்கும் நோய்களின் பட்டியலில் இரண்டாம் இடத்தை பிடித்து உள்ளது. இவற்றில், புற்றுநோயால் பாதிக்கபட்டு மரணம் அடைபவர்களில் சுமார் 70% மக்கள் குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் உள்ள நாடுகளில் வசிப்பவர்கள். நுரையீரல் புற்றுநோய் ஆனது புற்றுநோய்களில் மிகவும் பிரபலமான மற்றும் பொதுவான வகை ஆகும். உயர் மாசு அளவு, கதிர்வீச்சு, சிகரெட் புகை மற்றும் அஸ்பெஸ்டாஸ் போன்ற சில தீங்கு விளைவிக்கும் ரசாயனங்களுடன் வெளிபடும்போது நுரையீரல் புற்றுநோய் ஏற்படுகிறது. நுரையீரல் புற்றுநோய்கள் பொதுவாக மூன்றாக வகைப்படுத்தப்படுகின்றன: சிறிய அணு, சிரிதற்ற அணு மற்றும் நுரையீரல் புற்றுநோய் கட்டி. சிரிதற்ற அணு நுரையீரல் புற்றுநோயானது மற்ற வகை நுரையீரல் புற்றுநோய்களைவிட மிகவும் பரவலாக உள்ளது. மருத்துவர்கள்; மார்பு எக்ஸ்-ரே, சீ.டி ஸ்கேன் அல்லது பீ.ஈ.டி-சீ.டி ஸ்கேன், ப்ரோன்சொஸ்கோபி, இரத்த பரிசோதனைகள் மற்றும் நுரையீரல் புற்றுநோயை கண்டறிய ஸ்பைரோமீட்டர் பயன்படுத்துவார். நுரையீரல் புற்றுநோயின் சிகிச்சை, அதன் வளர்ச்சி மற்றும் வகையையும் சார்ந்துள்ளது. புற்றுநோயைவிட முதல் நிலை கட்டிகளால் தோன்றும் அறிகுரிகளை எளிதாக குனபடுத்தி விடலாம். நுரையீரல் புற்றுநோயை தடுக்க சிறந்த வழி புகைபிடிப்பதைத் தவிர்பது