தோல் அழிநோய் (லூபஸ்) - Lupus in Tamil

Dr. Nadheer K M (AIIMS)MBBS

April 26, 2019

July 31, 2020

தோல் அழிநோய்
தோல் அழிநோய்

தோல் அழிநோய் (லூபஸ்) என்றால் என்ன?

ஆட்டோ இம்யூன் அமைப்பில் நோய் உருவாவதால், ஒருவரது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியானது, எதிர்மறையாக மாறி அவரது உடலில் செயல்படும் ஆரோக்கியமான செல்கள் மற்றும் திசுக்களை தாக்கி, மேலும் அதனால் உடலின் வெவ்வேறு உறுப்புகளிலும் பல்வேறுவிதமான பாதிப்பை ஏற்படுத்துகிறது,இதை தன்னுடல் தாக்கு நோய்  என்று கூறப்படுகிறது. குறிப்பாக உடலில் நுரையீரல், தோல், மூட்டுக்கள், சிறுநீரகம், நுரையீரல், இரத்த அணுக்கள் மற்றும் மூளை ஆகிய பாகங்களை பாதிக்கிறது. லூபஸ் எனப்படுகிற தோல் அழிநோய் என்பது ஒரு வகையான தன்னுடல் தாக்கு நோயாகும், இது பல வகைகளில் இருக்கலாம்.அவை பின்வருமாறு:

  • சிஸ்டமிக் லூபஸ் எரிடேமடோசஸ் (எஸ் எல் இ).
  • டிஸ்கொய்டு லூபஸ்.
  • சப்-அக்யூட் தோலிற்குரிய தோல் அழிநோய்.
  • மருந்துகளால் தூண்டப்பட்ட தோல் அழிநோய்.
  • பிறந்த குழந்தைகளுக்கு ஏற்படுகின்ற தோல் அழிநோய்.

நோயின் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை?

லூபஸ் நோயின் அறிகுறிகள் கணிக்கப்படும்போது, அது ஏற்படுத்தும் எரிச்சல் உணர்வின் தன்மையைக் கொண்டு, லேசான நிலையிலிருந்து கடுமையானதாக விரிவடைகிறது. இந்நோயின் அறிகுறிகள் தொடக்கநிலையில் அலைவடிவம் போன்று தோன்றும் அதன் பின் சில மாதங்களுக்கு எந்த வித அறிகுறிகளும் இல்லாமல் இருக்கலாம் (அதிகரித்தல்) மற்றும் ஒரு சில வாரங்கள் அல்லது மாதங்களுக்கு பிறகு அறிகுறிகள் மீண்டும் துவங்கலாம் (ஆற்றல் குறைந்து). லூபஸ் நோயின் அறிகுறிகள் மற்றும் தாக்கங்கள் ஒருவருக்கொருவர் வேறுபடுகிறது. பொதுவாக தோன்றும் சில அறிகுறிகள் பின்வருமாறு:

  • களைப்பு அல்லது அதிக சோர்வு உணர்வு.
  • காய்ச்சல்.
  • முடி கொட்டுதல்.
  • சூரியஒளி படும்போது தோல் சிவந்து, கறுத்துப் போதல்.
  • வாயில் புண்கள் ஏற்படுதல்.
  • மூட்டுகளில் வலி அல்லது வீக்கம்  அல்லது தசை வலி.
  • ஆழமாக மூச்சு இழுக்கும் போது மார்பில் ஏற்படும் வலி.
  • கை அல்லது கால்விரல்களில் ஏற்படும் நிறமாற்றம், வெளிறிய அல்லது ஊதா நிறமாக இருக்கலாம்.
  • சிவப்பு தடிப்புகள், பொதுவாக இது முகங்களில் காணப்படுகிறது, இது "பட்டாம்பூச்சி தடிப்பு "என அழைக்கப்படுகிறது.
  • கால்கள் அல்லது கண்களை சுற்றி அல்லது சுரப்பிகளில் ஏற்படும் வீக்கம்.

நோய் தாக்குதலுக்கான முக்கிய காரணங்கள் என்ன?

இந்த லூபஸ் நோய் ஏற்படுவதற்கான காரணம் அறியப்படவில்லை.சுய எதிர்ப்பாற்றலே, லூபஸ் ஏற்பட முக்கிய காரணியாக கருதப்படுகிறது.

இது எப்படி கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகின்றது?

லூபஸ் நோய்க்கான காரணியை கண்டறிவது மிக கடினமான ஒன்றாகும் மற்றும் இந்நோய்யினால் ஏற்படும் அறிகுறிகளின் அடிப்படையில், அடிக்கடி இது வேறு ஏதேனும் நோயாக இருக்கலாம் என தவறாக கணிக்கப்படுவதால், இந்நோய்க்கான காரணியியை கண்டறிய காலவரையற்ற நேரம் எடுக்கிறது (பல மாதங்கள் அல்லது பல ஆண்டுகள் கூட எடுக்கலாம்). நோயறிதலை கண்டறிவதற்கு முன்பு, நுட்பமான அறிகுறிகளின் அடிப்படையில் செய்யப்படும் உடல் பரிசோதனையை தொடர்ந்து, இந்நோய்க்கான முழுமையான மருத்துவ அறிக்கை மருத்துவரால் எடுக்கப்படுகிறது.இந்நோயாரித்தலை கண்டறிய உதவும் பலவகையான பரிசோதனைகள் பின்வருமாறு:

  • பல்வேறு இரத்த பரிசோதனைகள்.
  • ஒரு நுண்ணோக்கின் கீழ் சரும மாதிரியினை பரிசோதித்தல் (சரும திசுப் பரிசோதனை).
  • சிறுநீரகத்திலிருந்து கீழ் ஒரு சிறுநீரக திசு மாதிரியை கொண்டு பரிசோதித்தல் (சிறுநீரக திசுச் சோதனை).

இந்த லூபஸ் நோயை குணப்படுத்த நிரந்தர சிகிச்சை என்று ஏதும் இல்லை.இந்த நோய்க்கான சிகிச்சையின் நோக்கமானது இந்நோயிலிருந்து ஒருவரை பாதுகாத்து அவை பரவாமல் தடுப்பதன் மூலம் வேறு உறுப்புகளில் எந்தவித பாதிப்பும் ஏற்படாமல் குறைப்பதாகும்.

கீழே குறிப்பிட்டுள்ள மருந்துகள் லைம் நோய்க்கு சிகிச்சை அளிக்க உதவும்:

  • எரிச்சல் உண்டாவதை குறைக்கும் அல்லது தடுக்கும்.
  • மூட்டுகளில் ஏற்பதும் பாதிப்பை தடுக்கலாம் அல்லது குறைக்கலாம்.
  • வீக்கம் மற்றும் வலியை குறைக்க.
  • நோயெதிர்ப்பு அமைப்பு செயல்பாட்டிற்கு உதவுதல்.
  • ஹார்மோன் சமநிலையை அடைய.

லூபஸ் நோயினால் ஏற்படும் பாதிப்பை தவிர்க்க, இந்நோயுடன் தொடர்புடைய பிற பிரச்சினைகளுக்கும் (நோய்த்தொற்று, உயர் கொழுப்பு அல்லது உயர் இரத்த அழுத்தம்)  சிகிச்சை  அளிக்கப்படவேண்டும்.



மேற்கோள்கள்

  1. MedlinePlus Medical Encyclopedia: US National Library of Medicine; Lupus.
  2. Office on Women's Health. [Internet]. U.S. Department of Health and Human Services. Lupus.
  3. Lupus Foundation of America. [Internet]. Washington, D.C.,United States; What is lupus?.
  4. Center for Disease Control and Prevention [internet], Atlanta (GA): US Department of Health and Human Services; Systemic Lupus Erythematosus (SLE).
  5. Center for Disease Control and Prevention [internet], Atlanta (GA): US Department of Health and Human Services; Lupus.

தோல் அழிநோய் (லூபஸ்) க்கான மருந்துகள்

Medicines listed below are available for தோல் அழிநோய் (லூபஸ்). Please note that you should not take any medicines without doctor consultation. Taking any medicine without doctor's consultation can cause serious problems.