கழுத்து வலி - Neck Pain in Tamil

Dr. Nadheer K M (AIIMS)MBBS

February 06, 2019

March 06, 2020

கழுத்து வலி
கழுத்து வலி

சுருக்கம்

கழுத்து வலி என்பது மூன்றில் ஒருவருக்கு வரக்கூடிய ஒரு பொதுவான உடல் உபாதை ஆகும். இது முதுகெலும்பின்  நரம்புகள் சுளுக்கினால் கடுமையாகவோ அல்லது கழுத்தில் சதை பிடிப்பினால் மிதமாகவோ வரலாம். முதுகுத்தண்டு நோய்கள், மூட்டுவலி, கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய்கள்  போன்ற நிலைமைகள் கழுத்து வலிக்கு வழிவகுக்கலாம், அவற்றிக்கு உடனடியாக மருத்துவ கவனிப்பு தேவைப்படலாம். கழுத்து வலியினால் அதிக பாதிப்படையக்கூடியவர்கள்- ஒரு குழந்தைக்கும் மேல் பெற்ற பெண்கள் மற்றும் ஆரோக்கியம்மில்லாமல் இருப்பவர்கள். விப்லாஷ்(பொதுவாக ஒரு விபத்து ஏற்பட்டால்) காரணமாக கழுத்து வலி ஏற்படுபவர்களுக்கு பல ஆண்டுகளுக்கு பிறகும் அறிகுறிகள் தோன்றும். கழுத்து வலி சிகிச்சை அதன் அடிப்படை காரணம் சார்ந்துள்ளது அது பெரிதும் வேறுபடுகிறது. பெரும்பாலான நேரங்களில், கழுத்து வலி ஒரு வாரத்திற்குள் சரியாகிவிடும். அரிதாக, பல ஆண்டுகள் நீடிக்கலாம். உடற்பயிற்சி, மருந்துகள், மற்றும் தோரணை திருத்தம்; கழுத்து வலி மேலாண்மைக்கு பயன்படுத்தப்படும் முக்கிய சிகிச்சை உத்திகள். அறுவை சிகிச்சை பொதுவாக முதல் சிகிச்சை தேர்வு அல்ல, அனைத்து சிகிச்சைகளும் தீர்ந்துவிடும் வரை தவிர்க்கப்படும். நாள்பட்ட கழுத்து வலிக்கு, பல கட்ட அணுகுமுறை பயிற்சிகள், தசை வலிமை பயிற்சி, மருந்துகள் மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்கள் உதவும்

கழுத்து வலி காரணங்கள் என்ன - Causes of Neck Pain in Tamil

கழுத்து வலி பல காரணங்களால் ஏற்படலாம், அவற்றில் சில கீழே குறிப்பிடப்பட்டுள்ளன

  • பலவீனமான மற்றும் மிகையாக பயன்படுத்தப்பட்ட தசைகள்
    இறுக்கமான தசைகளுடன்  நீண்ட நேரம் உட்கார்ந்திருந்தால் கழுத்து மற்றும் தோள்பட்டையில் விறைப்பு மற்றும் வலி உண்டாகும். சைக்கிள் ஓட்டுவது  அல்லது நீச்சல் போன்ற உடல் செயல்பாடுகளில் பலவீனமான தசைகளை அதிகமாக உபயோகபடும் பொது  கழுத்தின் தசையில் வலியை ஏற்படுகிறது
  • கழுத்து திசுக்களின் தேய்மானம்
    வயதின் காரணமாக கழுத்திலுள்ள திசு தேய்ந்தால் ஸ்பொன்டிலோசிஸ் மற்றும் கழுத்து வலி வரலாம். கர்பப்பை வாய் ஸ்பொன்டிலோசிஸ் என்பது எலும்பகலுக்குள் இடைவெளி குறைந்து எலும்புகளின் விளிம்புகளில் சிறு வளர்ச்சி முளைக்கும் நிலைமை ஆகும்.
  • முதுகுத்தண்டு வட்டு மாற்றங்கள்
    முதுகுத்தண்டு தேய்மானத்தினால், முதுகுத்தண்டுகள் அதன் வட்டத்தின் மீள்திறன் இழக்க நேரிடும். எப்போதாவது, முதுகுத்தண்டு திசுக்களின் வீக்கம் காரணமாக முதுகுத்தண்டு வட்டு நகரலாம்    
  • குறுகிய முதுகெலும்பு கால்வாய்
    ஒரு குறுகிய முதுகெலும்பு கால்வாய் நரம்பில் அழுத்தத்தை குடுத்து கழுத்து வலிக்கு வழிவகுக்கும், அது தோள்பட்டை வரை பரவலாம்
  • உடல் காயம் அல்லது அதிர்ச்சி
    ஒரு விபத்தில், திடிரென அதிர்ச்சியில் அல்லது குலக்கதிநாலோ கழுத்து மோசமாக அடிபடலாம். இது ஒரு விப்லாஷ் காயம் எனப்படுகிறது.
  • தவறான தோறனை
    நீண்ட காலமாக தவறான தோரணையில் உட்கார்ந்தால் கழுத்தில் கூடுதல் அழுத்தம் தந்து கழுத்து வலி உண்டாகும். மேலும், சில நேரங்களில், அதிக நேரம் தூக்கத்தில் இருக்கும்போது கழுத்து வளைந்து போகலாம். இதநால் கழுத்தில் கடுமையான வலி மற்றும் இறுக்கம் ஏற்பட்டு தலையை நகர்த்துவதில் சிரமமாகலாம்
myUpchar doctors after many years of research have created myUpchar Ayurveda Kesh Art Hair Oil by using 100% original and pure herbs of Ayurveda. This Ayurvedic medicine has been recommended by our doctors to more than 1 lakh people for multiple hair problems (hair fall, gray hair, and dandruff) with good results.
Bhringraj Hair Oil
₹546  ₹850  35% OFF
BUY NOW

கழுத்து வலி சிகிச்சை - Treatment of Neck Pain in Tamil

பெரும்பாலான சந்தர்ப்பங்களில் மருந்துகளுடன் வாழ்க்கை முறை மாற்றங்கள் மூலம் கழுத்து வலி சரிசெய்து விடலாம்.. மருத்துவர் பரிந்துரைக்கும் வலி ​​நிவாரணிகள் மற்றும் அழற்சி எதிர்ப்பி போன்ற மருந்துகள், தசை தளர்பான்கள், முதுகுத்தண்டு ஊசி, உடல் சிகிச்சை, இயக்கத்தை கட்டுப்படுத்த பிணைப்புகளின் பயன்பாடு மற்றும் உடலியக்க சிகிச்சை போன்றவற்றை மருத்துவர் பரிந்துரைக்கலாம் 

  • வலிமை பயிற்சி
    ஆதாரங்களை பொறுத்தவரை மற்ற சிகிச்சைகள் பதிலளிக்காத நாள்பட்ட கழுத்து வலி தசை வலிமை பயிற்சி மூலம் சரிசெய்ய முடியும். இந்த பயிற்சிகள் கழுத்து இறுக்கமான தசைகள் தளர்த்தி அவற்ற இதமாக்கும். சில குறிப்பிட்டு வடிவமைக்கப்பட்ட பயிற்சிகளை தொடர்ந்து சேய்து வந்தால், கழுத்து தசைகள் பலமாகி, கழுத்து வலியிலிருந்து நீடித்த நிவாரணம் கிடைக்கும் என ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளது. சிகிச்சயில்லாமல் பல மாதங்களுக்கு நாள்பட்ட கழுத்து வலி இருந்தால், வலியை நிர்வகிப்பதற்கு வலிமை பயிற்சி பற்றி மருத்துவரிடம் ஆலோசனை பெறவும். குறிப்பாக வலி இருக்கும்போது, எந்த உடற்பயிற்சி திட்டத்தை தொடங்குவதாக இருந்தாலும், அதற்க்கு முன் ஒரு மருத்துவர் அனுமதி பெற வேண்டும். உடற்பயிற்சி செய்வதால் மோசமான நிலை ஏற்படும் என்றால், மருத்துவர் அதை தவிர்க்க சொல்லுவார்
  • பிசியோதெரபி
    தொடர்ந்து கழுத்து வலி இருந்தால், மருத்துவர் ஒரு பிசியோதெரபிஸ்ட்டை பரிந்துரைக்கலாம். ஒரு பிசியோதெரபிஸ்ட் பல்வேறு பயிற்சிகளைப் பற்றிய தகவல்களை வழங்குவார், அதை புரிந்து கொள்ளவும் வலியை சமாளிக்கவும் உதவுவார். மக்கள் தங்கள் அன்றாட பணிகளுக்கு  திரும்புவதற்கு பிசியோதெரபி உதவும்
  • அறுவை சிகிச்சை
    வேற எல்லா மாற்று சிகிச்சைகளும் பலனளிக்கவில்லை என்றபொது மருத்துவர்கள் அரிதாக அறுவை சிகிச்சையை பரிந்துரைக்கிறார்கள். கர்ப்பப்பை வாய் முதுகுத்தண்டு உறுதியற்றதாக இருந்தாலோ அல்லது நரம்பியல் செயலிழப்பு நிகழ்ந்தாலோ; இது போன்ற விரமான சந்தர்பங்களில் அறுவை சிகிச்சை அவசியம்
  • சிரோபிராக்டிக் சிகிச்சை
    சிரோபிராக்டிக் சிகிச்சை என்பது மாற்று மருந்துகளின் ஒரு வடிவம் ஆகும், இதில் கழுத்தில் குறிப்பிட்ட இடங்களில் ஒரு கட்டுப்பாட்டுடன் அழுத்தம் குடுத்து வலியை சரி செய்வார்கள் .

சுய அக்கறை

  • கழுத்தை நகர்த்த  முடியவில்லை என்றால், வண்டி ஓட்டுவது  அல்லது சவாரி போன்ற நடவடிக்கைகள் தவிர்க்கவும், இது நிலைமையை மோசமாக்கலாம்.
  • மருத்துவரின் ஆலோசனை இல்லாமல், அசைவில்லாமல் வைப்பதோ அல்லது கழுத்து பட்டை அணியவோ வேண்டாம்
  • வலி நிவாரணத்திற்காக கழுத்தில் சூடான அல்லது குளிர்ந்த பைகளை பயன்படுத்தலாம்.
  • பராசிட்டமால் அல்லது இபுபுரஃபென் போன்ற வலி நிவாரணிகளை, வலியை குறைக்க பயன்படுத்தலாம். சுய மருந்து ஆபத்தானது மற்றும் அதனால் பிரச்சினைகள் ஏற்படலாம். இதை மனதில் வைத்து கொள்ளுங்கள். ஒரு வாரத்திற்குள் வலி குறையவில்லை என்றால், உடனே மருத்துவரை அணுகவும்

வாழ்க்கைமுறை  மேலாண்மை

ஒரு ஆரோக்கியமான வாழ்க்கைமுறை நீண்டநாள் வரும் கழுத்து வழியை தவிர்க்க உதவும். ஒரு ஆராய்ச்சியின் படி ஒரு ஆரோக்கியமான வாழ்க்கை நாள்பட்ட கழுத்து வலி கூடுவதை  தடுக்க உதவுகிறது. ஒரு ஆய்வின் படி, உடல் ரீதியாக சுறுசுறுப்பாக இருந்து, மது அருந்துவதைத் தவிர்த்து அல்லது குறைத்து, புகை பிடிப்பதை தவிர்த்து, ஆரோக்கியமாக சாபிட்டுவந்தால்  கழுத்து வலியை தடுக்க முடியும். ஒரு ஆரோக்கியமான வாழ்க்கைமுறை கழுத்து வலி தடுப்பது மட்டுமல்லாமல் அதை சமாளிப்பதர்க்கும் உதவும். கழுத்து வலிக்கு மற்ற எந்த சிகிச்சைகளும் பலனளிக்காவிட்டால் வாழ்க்கைமுறை  மேலாண்மை அதை சரி செய்வதில் ஒரு முக்கிய பங்கு வகிக்கும்.

நாள்பட்ட கழுத்து வலியானது மன அழுத்தம், பதட்டம், சோர்வான மனநிலை மற்றும் உளவியல் ஆரோகியத்துடன் தொடர்புடையது. மன அழுத்தம் மற்றும் பதட்டம் அடிக்கடி நிகழ்ந்தால், அதை சரி செய்வதனால் கழுத்து வலி குறையலாம். வெளியில் அதிக நேரம் செலவழிக்கவும், உடல் ரீதியாக செயல்பட்டு கொண்டே இருக்கவும். பிடித்த பொழுதுபோக்கினால்  ஒரு நல்ல வழியில் மன அழுத்தத்தை சமாளிக்கலாம்

myUpchar doctors after many years of research have created myUpchar Ayurveda Urjas Energy & Power Capsule by using 100% original and pure herbs of Ayurveda. This Ayurvedic medicine has been recommended by our doctors to lakhs of people for problems like physical and sexual weakness and fatigue, with good results.
Power Capsule For Men
₹716  ₹799  10% OFF
BUY NOW


மேற்கோள்கள்

  1. Health Harvard Publishing. Harvard Medical School [Internet]. The 7 faces of neck pain. Harvard University, Cambridge, Massachusetts.
  2. InformedHealth.org [Internet]. Cologne, Germany: Institute for Quality and Efficiency in Health Care (IQWiG); 2006-. Neck pain: Overview. . 2010 Aug 24 [Updated 2019 Feb 14].
  3. National Health Service [internet]. UK; Neck pain
  4. Peter R. Crofta, Martyn Lewisa , Ann C. Papageorgioub , Elaine Thomasa , Malcolm I.V. Jayson c , Gary J. Macfarlaned , Alan J. Silmanb. Risk factors for neck pain: a longitudinal study in the general population. International Association for the Study of Pain. Published by Elsevier Science B.V [Internet].
  5. Health Harvard Publishing. Harvard Medical School [Internet]. Strength training relieves chronic neck pain; Published: April, 2008. Harvard University, Cambridge, Massachusetts.
  6. Eva Skillgate, Oscar Javier Pico-Espinosa, Johan Hallqvist,Tony Bohman, Lena W Holm. Healthy lifestyle behavior and risk of long duration troublesome neck pain or low back pain among men and women: results from the Stockholm Public Health Cohort. Clin Epidemiol. 2017; 9: 491–500. PMID: 29066933
  7. Anita R. Gross, Faith Kaplan, Stacey Huang, Mahweesh Khan, P. Lina Santaguida, Lisa C. Carlesso, Joy C. MacDermid, David M. Walton, Justin Kenardy, Anne Söderlund, Arianne Verhagen, Jan Hartvigsen. Psychological Care, Patient Education, Orthotics, Ergonomics and Prevention Strategies for Neck Pain: An Systematic Overview Update as Part of the ICON§ Project. Open Orthop J. 2013; 7: 530–561. PMID: 24133554
  8. Allan I Binder. Neck pain. BMJ Clin Evid. 2008; 2008: 1103. PMID: 19445809

கழுத்து வலி க்கான மருந்துகள்

Medicines listed below are available for கழுத்து வலி. Please note that you should not take any medicines without doctor consultation. Taking any medicine without doctor's consultation can cause serious problems.