சுருக்கம்
மூக்கிலிருந்து இரத்த வடித்தலை, மருத்துவ ரீதியாக எபிஸ்டாக்ஸிஸ் என அழைக்கப்படுக்கிறுது. இது பொதுவாக ஒரு பாதிப்பில்லாத மற்றும் மோசமற்ற நிலையாகும். பொதுவாக, 50 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் மற்றும் குழந்தைகளுக்கும் இருக்க கூடிய ஒன்றாகும். ஹீமோபிலியா என்கிற இரத்தப்போக்கு மற்றும் இரத்த உறைத்தல் கோளாறு கொண்டவர்களை தவிர, மூக்கில் இரத்த வடிதலானது பதின் பருவத்திற்கு பிறகு அரிதாகவே காணப்படுகிறது. மூக்கிலிருந்து வரும் இரத்தப்போக்கானது பொதுவாக மூக்கின் அருகில் இருக்கும் மூக்கு முனையின் (முன்புற பகுதி) இருந்து ஏற்படுகிறது.
குறிப்பாக குழந்தைகளுக்கு மூக்கு நோண்டுவதால் ஏற்படக்கூடிய புண்; மூக்கில் வறட்சி; காற்று காலங்களில் வறண்ட காற்றை சுவாசித்தல்; குளிர்காலத்தில் ஏற்படுகின்ற வறட்சிகள்; அடிக்கடி மூக்கு அரிப்பு, படுகாயங்கள், சைனஸ், மூக்கில் இருக்கும் சிறுசிறு கட்டிகள் (மூக்கு உள்ளே இருக்கும் அதிகப்படியான சதை) போன்றவை மூக்கில் ரத்தம் வடிய காரணம் ஆகும். மேலும் சில பொதுவான காரணங்கள், உயர் இரத்த அழுத்தம்; கட்டிகள்; மூக்கின் இடைத்தசையில் உள்ள குறைபாடு (உதாரணமாக: மூக்கு இடைச்சுவரின் குறைபாடு) எலும்பில் உருக்குலைவுகள்; ஹெமோஃபிலியா ஏ மற்றும் பி போன்ற இரத்த உறைவு தொடர்பான மரபணு கோளாறுகள் மற்றும் வான் வில்பிரண்ட் நோய்கள் போன்றவை, ஆழமாக வேரூன்றி அல்லது ஊடுருவிய நிலையில் இருந்தால் உடனடி மருத்துவ கவனிப்புகள் அவசியமாகும்.மற்றொரு அரிய மரபணு நிலை என்று கூறப்படும் பரம்பரை இரத்த நாளவெடிப்புகள்(டெலன்கிஎக்டஸியா) (மென்மையான இரத்த நாளங்களில் ஏற்படும் பாதிப்புகள் ) போன்றவை மூக்கின் இரத்த வடிதலுக்கு தொடர்புடையது. மூக்கின் இரத்த வடிதல் காரணமாக இரத்தக் குழாய்களின் சுவரில் குறைவான மீள்தன்மை அல்லது வீக்கம் (எடுத்துக்காட்டாக தமனி அடைப்பு, கொலாஜன் கோளாறு) ஆகியவை ஏற்படலாம் .
மூக்கின் இரத்தப்போக்கானது பொதுவாக வலியற்ற காயங்களின் தொடர்புடையது ஆகும்.மூக்கில் ரத்தம் வரும்போது வலி போன்ற அறிகுறிகள் ஏற்படும். மேலும் உயர் ரத்த அழுத்தத்தின் காரணமாகவும், இதய ரத்த செயலிழப்பு அல்லது காயமடையும் போதும் மூக்கில் ரத்தம் வழியும்போது வேறு சில அறிகுறிகளும் ஏற்படும். பெரும்பாலும், குறிப்பட்ட காரணமில்லாத மூக்கு இரத்த வடிதலுக்கு பாரம்பரிய சிகிச்சைகளே போதுமானது வேறு மருந்துகள் எதுவும் தேவையில்லை. பொதுவாக மருத்துவர்கள் இரத்தம் வடிவதை கட்டுப்படுத்த மூக்கில் அழுத்தம் ஏற்படுத்த மூக்கை பிடித்துக்கொள்ளுதல் (மூக்கு நுனிக்கு கீழே), மூக்கில் கட்டு போடுவது மற்றும் உப்பு கலந்த திரவங்கள் பயன்படுத்துவது போன்ற முறைகளை உபயோகிக்கின்றனர். கட்டு போடுதல் போன்ற பொதுவான வழிமுறைகளால் மூக்கில் ரத்தம் வடிவதை நிறுத்த முடியாத போது காட்டேரிசேஷன் எனப்படும் தீய்த்தல் அல்லது உறைய வைத்தல் முறையை மருத்துவர்கள் பின்பற்றுகின்றனர். ஒரு குறிப்பிட்ட காரணத்தினால் மூக்கில் இரத்த வடித்தல் ஏற்பட்டால் முதலில் அதன் அடிப்படை காரணங்களுக்குகேற்ப (உதாரணமாக உயர் இரத்த அழுத்தம்) சிகிச்சையளிக்கப்படும். மூக்கிற்கு இரத்தத்தை வழங்கும் பெரிய இரத்த குழாய்களில் இரத்த கசிவு ஏற்பட்டாலோ அல்லது மருத்துவ மற்றும் பாரம்பரிய சிகிச்சைகளுக்கு பின்பும் மூக்கில் இரத்த வடிதல் நிற்கவில்லை என்றாலோ அறுவை சிகிச்சைகள் பரிந்துரைக்கப்படும்.