கர்ப்ப காலத்தில் ஏற்படும் வலி - Pain during Pregnancy in Tamil

Dr. Ayush PandeyMBBS,PG Diploma

May 04, 2019

March 06, 2020

கர்ப்ப காலத்தில் ஏற்படும் வலி
கர்ப்ப காலத்தில் ஏற்படும் வலி

கர்ப்ப காலத்தில் ஏற்படும் வலி என்றால் என்ன?

கர்ப்ப காலத்தில்,வயிற்றில் வளரும் குழந்தைக்கு ஏற்ற சூழ்நிலையை உருவாக்குக்கும் பொருட்டு, ஹார்மோன் மாற்றங்கள்  உள்ளிட்ட பல வித மாற்றங்கள்  உடலில்  ஏற்படுகின்றது. உடலில் பலவிதமான உடலியல் மாற்றங்கள் நடைபெறுகின்றன, இவை இயல்பானது தான் என்றாலும், இது உடலின் பல்வேறு பாகங்களில் ஏற்படும் வலிக்கு வழிவகுக்கிறது.

இந்த நோயின் அறிகுறிகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய முக்கிய தாக்கங்கள் யாவை?

கர்ப்ப காலத்தில் ஏற்படும் வலிக்கான அறிகுறிகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய முக்கிய தாக்கங்கள்:

நோய் தாக்குதலுக்கான முக்கிய காரணங்கள் என்ன?

கர்ப்ப காலத்தில் ஏற்படும் வலிக்கான முக்கிய காரணங்கள்:

  • ப்ரீக்ளாம்ப்ஷியா (உயர் இரத்த அழுத்தம்),  தலைவலி அல்லது ஒற்றை தலைவலியை ஏற்படுத்துகிறது.
  • கருப்பைச் சுற்றியுள்ள தசைகள் மற்றும் தசைநார்கள், நீட்டிக்க தொடங்குகின்றன, இதனால் அடி வயிற்றின் ஒருபக்கத்தில் அல்லது இருபக்கங்களிலும் வலி ஏற்படுகிறது.
  • கருப்பை வளர்ச்சியடைவதால் வலி, கூச்ச உணர்வு அல்லது கால்களில் மறத்துபோவது போன்ற உணர்வுகள் ஏற்படுகிறது
  • கர்ப்பபையானது முதுகு மற்றும் பின்புறத்தில் சிரமத்தை ஏற்படுத்துவதால் முதுகு வலி தோன்றுகிறது.
  • நஞ்சுக்கொடி முறிவு, அதாவது நஞ்சுக்கொடி கருப்பையில் இருந்து பிரிக்கப்படும் போது நிலையான வலி ஏற்படும்.
  • கர்ப்பிணிப் பெண்களுக்கு பாதங்கள் மற்றும் கால்களில் தசை பிடிப்பு ஏற்படுவதால் திடீரென கடுமையான வலி ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புள்ளது.
  • சிறுநீரக நோய்த்தொற்றுகள் காரணமாக கீழ் முதுகு வலி மற்றும் அடி வயிற்றில் வலி ஏற்படும்.
  • சில பெண்களுக்கு, மூட்டுகளில் தளர்ச்சி ஏற்பட்டு, இடுப்பு எலும்பில் நிலையற்ற தன்மையை உருவாக்கி விடும், இதனால் இடுப்பு மற்றும் கால்களில் வலி ஏற்படும்.
  • இடம் மாறிய கர்ப்பம், அதாவது கருவுற்ற கருமுட்டையானது கர்ப்பப்பையில் தங்கி வளராமல், அதற்கு வெளிப்புறத்தில் வளர்ந்தால், அதனால் கடுமையான வலியுடன் இரத்தப்போக்கும் ஏற்படும்.
  • தன்னிச்சையாக நிகழும் கருச்சிதைவுகள், மிதமானது முதல் கடுமையான முதுகுவலிக்கு காரணமாகின்றன.

இது எப்படி கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகின்றது?

கர்ப்ப காலத்தில் ஏற்படும் வலியைக் அறிவதற்கு, மருத்துவ வரலாற்றின் மூலம், வலிக்கான அடிப்படை காரணத்தை மருத்துவர்கள் கண்டறிவார்கள். டாக்டர் உடல் பரிசோதனைகளின் முடிவுகளையும், மற்றும் நோயாளிகள் கூறும் அறிகுறிகள் அனைத்தையும் குறித்துக்கொள்வார்.

பின்வரும் சிகிச்சைகள் பொதுவாக கர்ப்ப காலத்தில் ஏற்படும் வலிக்காக அளிக்கப்படுகிறது:

  • ஓபியோட் வலி நிவாரணிகள், ஸ்டீராய்ட் அல்லாத அழற்சி எதிர்ப்பு மருந்துகள் (என்.எஸ்.எ.ஐ.டி.ஸ்) மற்றும் இதர வாய் வழி வலி நிவாரணிகள், வழிகளை குறைபதற்காக கொடுக்கப்படுகின்றன.
  • வலி எப்போதும் இருந்துக்கொண்டே இருக்கும் பொழுது அதற்கு நிவாரண வழங்க ஃபென்டனில் பேட்ச்ஸ்கள் கொடுக்கப்படுகின்றன.
  • பித்தப்பை வீக்கம், அப்பெண்டிக்ஸ் வெடிப்பு, சிறுநீரகக் கற்கள், வயிற்றுப் புண் போன்ற கர்ப்பம் அல்லாத காரணங்களால் வலி ஏற்படும் போது அறுவை சிகிச்சை பரிந்துரைக்கப்படும்.



மேற்கோள்கள்

  1. University of Rochester Medical Center Rochester, NY. [Internet] Back Pain in Pregnancy
  2. University of Rochester Medical Center Rochester, NY. [Internet] Headaches in Early Pregnancy
  3. American Pregnancy Association. [Internet]; Abdominal Pain During Pregnancy.
  4. Malaika Babb, Gideon Koren, Adrienne Einarson. Treating pain during pregnancy . Can Fam Physician. 2010 Jan; 56(1): 25, 27. PMID: 20090076
  5. American Pregnancy Association. [Internet]; Sharp Pain During Pregnancy.