பி.எம்.எஸ் (முன் மாதவிடாய் நோய்க்குறி) என்றால் என்ன?
மாதவிடாய்க்கு முன் அனுபவிக்கப்படும் உடல் மற்றும் உணர்வுப்பூர்வமான அறிகுறிகள் பி. எம்.எஸ். (முன் மாதவிடாய் நோய்க்குறி) அல்லது ப்ரீமென்ஸ்ட்ருயல் சின்ரோம் எனப்படும். மாதவிலக்காகும் பெண்களுக்கு பி. எம்.எஸ்.வருவது மிகவும் சகஜமான ஒன்று. இது மிதமானதாக அல்லது கடுமையானதாக இருக்கலாம். உயிருக்கு ஆபத்து இல்லாவிட்டாலும் இந்த அறிகுறிகளால் ஒருவரது வாழ்க்கைத்தரம் பாதிக்கப்படலாம்.
பி. எம்.எஸ்.நோயுடன் சம்பந்தப்பட்ட முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் என்ன?
பி. எம்.எஸ்.காரணமாக பெண்கள் பல அறிகுறிகளை அனுபவிக்கலாம். எனினும் பின்வரும் அனைத்து அறிகுறிகளையும் அனுபவிக்கவேண்டிய அவசியம் இல்லை. அவை:
உடல் ரீதியான அறிகுறிகள்:
- வயிறு உப்பல்.
- நெஞ்செரிச்சல்.
- பேதி அல்லது தளர்வான மலைக்கழிவு.
- உணவுக்காக ஏங்குதல்.
- மலச்சிக்கல்.
- தலைவலி.
- மார்பகங்களில் வலி.
- தொடைகளில் வலி.
- முதுகு வலி.
- தசைப்பிடிப்புகள்.
உணர்வுப்பூர்வமான அறிகுறிகள்:
- எரிச்சல்.
- விரக்தியடைதல்.
- குழப்பம்.
- கவனிப்பதில் தொந்தரவு.
- பதற்றம்.
- மனச்சோர்வு.
- ஊசலாடும் மனநிலை.
- தூக்கமின்மை.
நோய் தாக்குதலுக்கான முக்கிய காரணங்கள் என்ன?
மாதவிலக்கு நேரங்களில் உடலின் இயக்குநீர் அளவு மாறுபடுவதே பி.எம்.எஸ்.நோயின் முக்கிய காரணமாக கருதப்படுகிறது. ஆனாலும் இதன் சரியான காரணம் அறியப்படவில்லை.
இந்த அறிகுறிகள் வர வேறு பல காரணிகளும் பங்களிக்கின்றன. அவை:
- மன அழுத்தம்.
- உடல் பருமன்.
- சுற்றுச்சூழல்.
- ஆரோகியமில்லா உணவு.
இது எவ்வாறு கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது?
பி. எம்.எஸ். நோயைக் கண்டறிவதற்கு எந்தவித தனிப்பட்ட பரிசோதனையும் செய்யப்படுவதில்லை. இருந்தாலும், பெண்கள் அனுபவிக்கும் அறிகுறிகள் பற்றி மருத்துவர்கள் நிச்சயம் கேட்டறிவார். பொதுவாக ஒருவர் அவரது அறிகுறிகளின் அமைப்பை கண்டறிய முடியும். மாதவிலக்கு நாட்களில் இந்த அறிகுறிகள் தீவிரமடைவதை அநேக பெண்கள் உணர்கின்றனர். இந்த அறிகுறிகளை பதிவேட்டில் குறித்துக்கொள்ளுதல் நிச்சயம் உதவும்.
பி. எம்.எஸ். நோயை குணப்படுத்த முடியாவிட்டாலும், இதனை கடுமையான பிரச்சனையாக அநேக பெண்கள் பார்ப்பதில்லை. உணவுமுறை மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்கள் மூலம் பி. எம்.எஸ். நோயின் அறிகுறிகளை வெற்றிகரமாக சமாளிக்கலாம்.
- வலியைப் போக்க மருத்துவர்கள் யோகாசனம், உடற்பயிற்சி அல்லது சூடான தண்ணீர் புட்டி உபயோகித்தல் ஆகியவற்றை பரிந்துரைப்பார். கடுமையான வலி இருந்தால், வலி நிவாரணிகளை உட்கொள்ள அறிவுறுத்துவார்.
- வீக்கமிருந்தால், டயூரெடிக்ஸ் எனப்படும் சிறுநீர் போக்குத் தூண்டிகளை பரிந்துரைப்பர்.
- மன அழுத்தம் போக்கும் அல்லது மனச்சோர்வை போக்கும் மருந்துகளை தீவிர நிலைகளில் நோயை குணப்படுத்த பரிந்துரைப்பார்.
இருந்தாலும், உணவு பழக்கத்தில் மாற்றமும் வீட்டில் செய்யப்படும் கை வைத்திய முறைகளும் அறிகுறிகளை சமாளிப்பதில் நல்ல பலன் அளிக்கின்றன.