நிமோனியா - Pneumonia in Tamil

Dr. Ajay Mohan (AIIMS)MBBS

December 29, 2018

March 06, 2020

நிமோனியா
நிமோனியா

சுருக்கம்

நிமோனியா என்பது நுரையீரல்களின் ஏற்படும் ஒரு தொற்றுநோயாகும். இது அல்வியோளி என்றழைக்கப்படும் நுரையீரல்களில் உள்ள சிறிய காற்றுப்பைகளில் சேரும் திரவம் அல்லது சீழினால் உண்டாகும் ஒரு நோய்த்தொற்று ஆகும். இது ஒன்று அல்லது இரண்டு நுரையீரல்களையும் பாதிக்கலாம். பாக்டீரியா, பூஞ்சை, வைரஸ் மற்றும் பிற ஒரு சில பொதுவான தொற்றுநோய்கள் உள்ளிட்ட பல்வேறு அடிப்படை காரணங்களால் நிமோனியா ஏற்படலாம். இதன் அறிகுறிகள் இருமல், குளிர் காய்ச்சல், மற்றும் மூச்சு விடுவதில் சிரமம் ஆகியன. இந்த அறிகுறிகள் லேசான, மிதமான அல்லது கடுமையானதக இருக்கலாம். நோய்த்தொற்றின் தீவிரம் தொற்றுநோயை ஏற்படுத்தும் நுண்ணுயிரி, மொத்த உடல் நலம், பாதிக்கப்பட்ட நபரின் வயது போன்ற பல காரணிகளால் நிர்ணயிக்கப்படுகிறது. பாதிக்கப்பட்ட நபரின் மருத்துவ வரலாறு, ஆய்வக சோதனைகள் மற்றும் பிற நோய் கண்டறிதல் மற்றும் இமேஜிங் சோதனைகள் ஆகியவற்றின் அடிப்படையில் நிமோனியா பாதிப்பை கண்டறியலாம்.

இந்த நோய்க்கான சிகிச்சையானது நிமோனியா எந்தவகை தொற்றினால் ஏற்பட்டுள்ளது என்பதை பொறுத்தது. ஒரு வைரஸ் தொற்று காரணமாக நிமோனியா ஏற்படுகிறது என்றால், எந்த குறிப்பிட்ட சிகிச்சையும் அளிக்க தேவையில்லை மேலும் உடல்நலம் பொதுவாக தானாகவே சரியாகிவிடும். ஒரு பாக்டீரியா தொற்று காரணமாக நிமோனியா ஏற்படுகிறது என்றால், நுண்ணுயிர் எதிர்ப்பிகள்(ஆன்டி பயாட்டிக்ஸ்) பயன்படுத்தப்படுகின்றன. நிமோனியாவுக்கு பெரும்பாலும் வீட்டு வைத்தியம் செய்யலாம் அல்லது ஒரு மருத்துவரின் ஆலோசனை படி சிகிச்சை பெறலாம், கடுமையான நோய்தொற்று இருந்தால் நோயாளியை மருத்துவமனையில் அனுமதிக்கலாம். இந்த நோயினால் நுரையீரல் புண்கள் (சீழ் உருவாக்கம்), சுவாச செயலிழப்பு அல்லது செபிசிஸ் (இரத்த தொற்று) போன்ற சிக்கல்கள் ஏற்படலாம். இது பல உறுப்புகளின் செயலிழப்புக்கு வழிவகுக்கும். பொதுவாக ஆரோக்கியமான உடல்நலம் உள்ளவர்கள் இந்த நோயால் பாதிக்கப்பட்டால், உடனடி சிகிச்சை மற்றும் பராமரிப்பினை ஆரம்பித்தால்  அவர்கள் விரைவாக இந்த நோயிலிருந்து மீண்டுவிடுகின்றனர். இருப்பினும், ஐந்து வயதிற்கும் குறைவான வயதுடைய குழந்தைகளுக்கு மற்றும் 65 வயதுக்கும் மேற்பட்ட வயதுடையவர்களுக்கு, நிமோனியா மிகவும் தீவிரமாக இருக்கிறது. நாள்பட்ட நோய்கள், குறிப்பாக சிறுநீரகங்கள், நுரையீரல் அல்லது இதயத்தில் பாதிப்பு உள்ளவர்கள், பலவீனமான நோயெதிர்ப்பு அமைப்பு கொண்டவர்கள் ஆகியோருக்கு நிமோனியா கடுமையானதாக இருக்கும்.

நிமோனியா (நுரையீரல் அழற்சி) என்ன - What is Pneumonia in Tamil

நுரையீரல்கள் குழாய் கட்டமைப்பைக் கொண்டுள்ளன, அவை சுவாசிக்கப்பட்ட மூச்சுக் காற்றை நுரையீரலுக்குள் சுமந்து செல்ல உதவும். இந்த குழாய் கட்டமைப்பு நுரையீரலுக்குள் கற்று நுழைந்ததும் அவற்றை பல குழாய்களுக்குள் பிரித்து அனுப்புகிறது. அல்ட்ராலி என்றழைக்கப்படும் சிறு காற்றுப் பைகளுக்கு வந்து கொத்தான குழாய் கட்டமைப்பு முடிகின்றது. ஆல்வொளி வீக்கம் அடைந்தோ அல்லது அழற்சியடைந்தோ திரவத்தால் நிரப்பப்படும் நிலைமை நிமோனியா என அறியப்படுகிறது.

உலகளாவிய ரீதியில் நியூமோனியா குழந்தைகள் மற்றும் பெரியவர்களை பாதிக்கும்போது, அதன் பாதிப்பு தெற்காசியா மற்றும் துணை சஹாரா ஆப்பிரிக்காவில் அதிகபட்சமாக உள்ளது. குழந்தை பருவ நிமோனியாவில் 4.3 கோடி வழக்குகள் ஒவ்வொரு வருடமும் பதிவாகியுள்ளன, உலகெங்கிலும் உள்ள 15 நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடம் வகிக்கிறது. குழந்தை பருவத்திற்கு 0.2 முதல் 0.5 அத்யாயங்களுக்கு இடையில் நோயுற்ற தன்மை வேறுபடுவது கண்டறியப்பட்டுள்ளது. இவற்றில், சுமார் 10 முதல் 20% வழக்குகளில் நிமோனியா கடுமையான தீவிரத்தன்மையைக் கொண்டுள்து.

நிமோனியா எவ்வாறு பரவுகிறது?

  • நீர்த்துளிகள் வழியாக
    நிமோனியா நோயாளி ஒருவர் மூக்கு மற்றும் / அல்லது வாயை மூடாமல் இருமுதல் அல்லது தும்முதல்.
  • இரத்தம் வழியாக
    குறிப்பாக பிறக்கும் போது மற்றும் பிறந்த உடனேயும்.

வரும்முன் பாதுகாப்பது மிகவும் முக்கியமானதால், நிமோனியா எவ்வாறு பரவுகிறது என்பதை அறிய இன்னும் நிறைய ஆராய்ச்சிகள் தேவைப்படுகிறது.

myUpchar doctors after many years of research have created myUpchar Ayurveda Urjas Capsule by using 100% original and pure herbs of Ayurveda. This ayurvedic medicine has been recommended by our doctors to lakhs of people for sex problems with good results.
Long Time Capsule
₹712  ₹799  10% OFF
BUY NOW

நிமோனியா (நுரையீரல் அழற்சி) அறிகுறிகள் என்ன - Symptoms of Pneumonia in Tamil

நிமோனியாவின் அறிகுறிகள் பல நாட்கள் கழித்தோ அல்லது திடீரென்று 24-48 மணி நேரத்திற்குள்ளோ தெரிய ஆரம்பிக்கலாம். 

பொதுவான அறிகுறிகள்: 

  • காய்ச்சல்.
  • உடல்நிலை சரியில்லாமல் இருப்பது போன்ற பொதுவான ஒரு  உணர்வு.
  • வறண்ட இருமல் , அல்லது தடித்த மஞ்சள் கலந்த பச்சை, பச்சை, பழுப்பு அல்லது இரத்த-கறைபடிந்த சளி இருமும் போது வெளிவருதல்.
  • பசியிழப்பு.
  • வியர்த்தல்.
  • நடுக்கம்.
  • குறைந்த ஆற்றல் மற்றும் தீவிர சோர்வு.
  • ஓய்வு நேரத்தில் கூட சுவாசிப்பதில் சிரமம் மேலும் நோயாளி மூச்சடைப்பை உணரலாம் அல்லது உங்கள் சுவாசம் எந்தவித உழைப்பும் இல்லாமல் விரைவாகவும் மேலோட்டமாகவும் மாறலாம்.
  • விரைவான அதிகப்படியான இதய துடிப்பு.
  • ஒரு கூர்மையான அல்லது குத்தல் வகை மார்பு வலி, சுவாசத்தின் நிலை அல்லது இருமல் மோசமடைதல்.

குறைவான பொதுவான அறிகுறிகள் பின்வருமாறு:

நிமோனியா சில நேரங்களில் மற்ற நோய்களை போலவே தெரியலாம், அவை:

  • ஆஸ்துமா - நுரையீரல்களின் மூச்சுகுழாய்களில் பித்தநீர்.
  • கடுமையான மூச்சுக்குழாய் அழற்சி - நுரையீரல்களின் மூச்சுகுழாய்களில் வீக்கம் அல்லது அழற்சி.
  • காஸ்ட்ரோசோபஜியல் ரிஃப்ளக்ஸ் நோய் (GERD) - வயிற்றுப் பகுதியிலுள்ள அமிலம் மீண்டும் உணவு குழாயில் பாய்வது.
  • நுரையீரலில் கட்டி - நுரையீரலில் சீழ் குவிதல்.
  • எம்பியீமா - நுரையீரலுக்கு மேலுள்ள அடுக்கில்(ப்ளெயுறா) சீழ் உருவாதல்.
  • COPD - நுரையீரலில் காற்றோட்டத்தின் நீண்ட கால தடைகள் ஏற்படுவதன் காரணமாக நுரையீரல் சீர்குலைவு ஏற்பட்டு, சுவாச குறுக்கீடு உண்டாகிறது.
  • நுரையீரல் எம்போலிசம் - நுரையீரலுக்கு இரத்தத்தை பாய்ச்சும் நரம்புகளில் அடைப்பு உண்டாகி, நுரையீரல் திசுக்களை ரத்தம் சென்று அடைவதைத் தடுக்கிறது.
  • வாஸ்குலிடிஸ் - இரத்த நாளங்களின் சுவர்களில் அழற்சி அல்லது வீக்கம்.
  • எண்டோகார்டிடிஸ் - இதயத்தின் உள்புறம் உள்ள உள் சவ்வில் வீக்கம்.
  • கக்குவான் இருமல்.
  • மூச்சு நுண்குழாய் அழற்சி ஆப்பிலிட்டரன்ஸ் - நுரையீரலில் உள்ள சிறு கற்று குழாய்களில் வீக்கம் காரணமாக அடைப்பு.
  • கஞ்ஜெஸ்டிவ் இதய செயலிழப்பு - இதயத்தின் உந்தி திறனை பாதிக்கும் ஒரு நிலை.
  • நுரையீரல் புற்றுநோய்.

நிமோனியா (நுரையீரல் அழற்சி) சிகிச்சை - Treatment of Pneumonia in Tamil

நிமோனியா சிகிச்சையானது முக்கியமாக நிமோனியாவின் வகை, அதன் தீவிரத்தன்மை, மற்றும் அதை உண்டாகும் நுண்ணுயிர்கள் ஆகியவற்றை பொறுத்தது. சிகிச்சை முக்கியமாக, அறிகுறிகளுக்கு நிவாரணம் அளித்தல், நோய் தொற்றுதலைத் தீர்த்தல் மற்றும்  மேலும் சிக்கல்கள் உருவாகாமல் அல்லது மோசமடையாமல் தடுத்தல் ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது. 

  • வழக்கமாக, வைரஸ் நிமோனியா ஒரு வாரத்திற்குள் தானே சரியாகிவிடும். மருத்துவர் வைரஸ் தடுப்பு மருந்துகளை பரிந்துரைக்கலாம்.
  • பாக்டீரியா நிமோனியாவின் விஷயத்தில், ஒரு ஆண்டிபயாடிக் மருந்துகள் பரிந்துரைக்கப்படலாம். மருந்துகளை சாப்பிட ஆரம்பித்ததுமே நோய் அறிகுறிகள் மறையத் தொடங்கும். நோய்த்தொற்று முழுவதுமாக தீர்வதற்கு குறிப்பிட்ட காலத்திற்கு ஆண்டிபயாடிக்குகளை எடுத்துக்கொள்ள பரிந்துரைக்கப்படுகிறது, அவ்வாறு செய்யத் தவறிவிட்டால், நிமோனியாவின் அறிகுறிகள் மீண்டும் வர அதிக வாய்ப்பு உள்ளது. ண்டிபயாடிக்குகளை எடுத்துக்கொள்ள ஆரம்பித்த 1-3 நாட்களில் நோயாளியின் உடல் நிலையில் முன்னேற்றம் காணப்படுகிறது. கடுமையான தொற்றுநோய் அல்லது சிக்கல்கள் உள்ளவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட தேவைப்படலாம். இரத்த ஓட்டத்தில் உள்ள ஆக்சிஜன் அளவு குறைந்து இருந்தால், ஆக்ஸிஜன் தெரப்பி சிகிச்சை அளிக்கப்படலாம்.
  • சமூகத்தில் வாங்கிய நிமோனியா கொண்ட பெரும்பாலான மக்களுக்கு வீட்டிலேயே சிகிச்சை தரலாம். 

வாழ்க்கைமுறை மேலாண்மை 

நீங்கள் ஏற்கனவே நிமோனியா நோயால் பாதிக்கப்பட்டிருந்தால், விரைவாக நலம் பெறவும் மற்றும் கூடுதல் சிக்கல்கள் ஏற்படுவதைத் தடுக்கவும் பின்வரும் நடவடிக்கைகளை எடுக்கலாம். 

  • டாக்டரால் பரிந்துரைக்கப்படும் மருந்துகளை முறையாக எடுத்துக் கொள்ளுங்கள்.
  • ஏராளமான ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள்.
  • குடும்பம் மற்றும் நண்பர்களுடன் உடல் ரீதியான தொடர்பைக் குறைத்தல்.
  • இருமல் அல்லது தும்மும்போதும் உங்கள் வாய் மற்றும் மூக்கை ஒரு தடிமனான கைக்குட்டை அல்லது தடி டிஷ்சுவை கொண்டு மூடவும்.
  • பயன்படுத்தப்பட்ட டிஷ்சுக்களை உடனடியாக அப்புறப்படுத்துங்கள்.
  • அடிக்கடி உங்கள் கைகளை கழுவவும். 

மற்றவர்களிடம் தொற்று பரவுதலைத் தடுக்க, மேலே குறிப்பிடப்பட்ட அனைத்து விஷயங்களும் உதவும். 

நிமோனியாவுக்குப் பிறகு மீண்டுவர நேரம் எடுக்கும். சிலர் வேகமாக குணமடைந்து, ஒரு வாரத்திற்குள் தங்கள் வழக்கமான நடைமுறைகளை தொடர்வர். ஆனால் சிலர் குணமடைய ஒரு மாதம் அல்லது அதற்கு மேல் கூட ஆகலாம். உங்கள் வழக்கமான நடைமுறைகளுக்கு திரும்புவதைப் பற்றி உங்கள் மருத்துவரிடம் ஆலோசனை கேட்பது சிறந்தது.

myUpchar doctors after many years of research have created myUpchar Ayurveda Urjas Energy & Power Capsule by using 100% original and pure herbs of Ayurveda. This Ayurvedic medicine has been recommended by our doctors to lakhs of people for problems like physical and sexual weakness and fatigue, with good results.
Power Capsule For Men
₹719  ₹799  10% OFF
BUY NOW


மேற்கோள்கள்

  1. National Heart, Lung, and Blood Institute [Internet]: U.S. Department of Health and Human Services; Pneumonia
  2. Johns Hopkins Medicine [Internet]. The Johns Hopkins University, The Johns Hopkins Hospital, and Johns Hopkins Health System; Pneumonia
  3. World Health Organization [Internet]. Geneva (SUI): World Health Organization; Pneumonia.
  4. Rudan I, Boschi-Pinto C, Biloglav Z, Mulholland K, Campbell H. Epidemiology and etiology of childhood pneumonia. Bull World Health Organ. 2008;86:408–16. PMID: 18545744
  5. Chhabra P, Garg S, Mittal SK, Satyanarayan L, Mehra M, Sharma N. Magnitude of acute respiratory infections in underfives. Indian Pediatr. 1993;30:1315–9. PMID: 8039856
  6. Gladstone BP, Muliyil J, Jaffar S, Wheeler JG, Le Fevre A, Iturriza-Gomara M. Infant morbidity in an Indian slum birth cohort. Arch Dis Child. 2008;93:479–84.
  7. National Heart, Lung, and Blood Institute [Internet]: U.S. Department of Health and Human Services; How the Lungs Work
  8. National Health Service [internet]. UK; Pneumonia

நிமோனியா க்கான மருந்துகள்

Medicines listed below are available for நிமோனியா. Please note that you should not take any medicines without doctor consultation. Taking any medicine without doctor's consultation can cause serious problems.

Lab Tests recommended for நிமோனியா

Number of tests are available for நிமோனியா. We have listed commonly prescribed tests below: