பாலிசித்தீமியா வேரா என்றால் என்ன?
பாலிசித்தீமியா வேரா என்பது ஸ்டெம் செல்களில் ஏற்படும் புற்றுநோயாகும்.இது 50-70 வயதை ஒட்டியிருப்பவர்களுக்கு பாதிப்பேற்படுத்தக்கூடியது.இந்த ஸ்டெம் செல்கள் உற்பத்தி செய்யும் இரத்த அணுக்கள் கட்டுப்பாடின்றி பெருகி, சிவப்பு ரத்த அணுக்கள், வெள்ளை இரத்த அணுக்கள் மற்றும் பிளேட்லெட்டுகள் ஆகியவற்றின் அசாதாரணமான எண்ணிக்கையை உருவாக்குவதால் வழக்கமாக நடக்கும் செயல்பாடுகளில் பதிர்பேற்படுகின்றது.
இதன் முக்கிய அடையாளங்களும் அறிகுறிகளும் யாவை?
ஆரம்பக்கட்டத்தில் மெதுவாக துவங்கும் இந்த நோய் முக்கியமாக நீண்ட காலத்திற்கு எந்த அறிகுறிகளையும் ஏற்படுத்துவதில்லை.இந்த செல்களின் அதிகரித்த எண்ணிக்கை இரத்தத்தை அடர்த்தியடைய செய்கின்றது.இதன் அறிகுறிகள் பெரும்பாலும் ஹைபர்விஸ்கோசீசிட்டியினை விளைவிக்கக்கூடியது, இது இரத்த ஓட்டத்தை சோர்வடைய செய்வதோடு இரத்தத்தில் உறைவினை உருவாக்குகின்றது (த்ரோம்போசிஸ்).இவ்வாறு இவ்விரண்டும் ஒருங்கிணைந்து மோசமான ஆக்ஸிஜெனை வழங்குவதால் பின்வரும் வெளிப்பாடுகள் ஏற்படுகின்றன:
- தலைவலி.
- தலைச்சுற்று.
- வெர்டிகோ.
- டின்னிடஸ்.
- பார்வையில் பிரச்சனைகள்.
- குடல்களில் அல்லது ஈறுகளில் ஏற்படும் இரத்தக்கசிவு.
- பெரும்பாலும் சூடான நீரின் வெளிப்பாட்டிற்கு பிறகு சருமத்தில் ஏற்படும் அரிப்புத்தன்மை.
பிளேட்லெட்ஸின் அதிகரித்த எண்ணிக்கை மற்றும் ஒன்றொன்று ஒட்டிக்கொள்ளும் தன்மை இரத்த நாளங்களில் அதிகளவு த்ரோம்பிகள்(இரத்தம் உரைதல்) உருவாக காரணமாக இருக்கின்றன.அவை கைகள் மற்றும் கால்களில் கடுமையான வலி மற்றும் சருமத்தில் நீல நிறமாற்றத்தையும் ஏற்படுத்துகின்றன.இந்த கிளாசிக்கல் அறிகுறியினால் பாலிசித்தீமியா வேரா, எரித்ரோமெலால்ஜியா என்றும் அறியப்படுகின்றது.மேலும், இந்த நோயாளிகளிடத்தில் வயிற்றுப் புண்கள் இருப்பதாக சந்தேகிக்கப்படுகின்றது.இது அழற்சியேற்பட்ட மண்ணீரல் மற்றும் கல்லீரல் தொடர்புடையதாக இருக்கலாம்.
இதன் முக்கிய காரணங்கள் யாவை?
பாலிசிதிமியா வேராவின் உண்மையான காரணம் இன்னும் தெளிவாக புலப்படவில்லை.இருப்பினும், இந்நிலைக்கொண்ட 90% நோயாளிகளுக்கு ஜேஏகே2 மரபணு மாறுபாடு இருப்பதாக ஆராய்ச்சிகள் அறிவுறுத்துகின்றன.
இதன் கண்டறியும் முறை மற்றும் சிகைச்சையளிக்கும் முறை யாவை?
இந்நிலைக்கான கண்டறிதல் இரத்த உயிரணுக்கள் மற்றும் உறுப்பழற்சி ஆகியவற்றின் வரன்முறைகளை கொண்டு நிறுவப்படுகிறது.
பாலிசித்தீமியா வேரா கண்டறிதலுக்கென்று முன்பிருந்த வழிகாட்டுதல்களில் உலக சுகாதார மையம் (உலக சுகாதார நிறுவனம்) திருத்தம் செய்து மாற்றியமைத்திருக்கின்றது.இருப்பினும், இந்நோயறிதல் இரத்த எண்ணிக்கையை கருத்தில் கொண்டே செய்யப்படுகிறது, மற்றும் இதற்கு இரத்த பரிசோதனைகள், இரத்தம் கசியும் நேரம், புரோத்ராம்பின் நேரம், செயல்படுத்தப்பட்ட புரோத்ராம்பின் நேரம், இரத்த யூரிக் அளவுகள், மேலும் சில சோதனைகள் தேவைப்படுகின்றன.பாலிசித்தீமியா வேராவிற்கான இதுவரை உறுதியான நிவாரணம் இன்னும் கண்டறியப்படவில்லை, ஆனால் இந்நிலைக்கு மேற்பார்வையின் கீழ் போதிய சிகிச்சையளிக்கப்படும் பட்சத்தில் இது வாழ்க்கை -அச்சுறுத்தலை ஏற்படுத்துவதில்லை.இதற்கான சிகிச்சை முறைகள், அறிகுறிகளிலிருந்து நிவாரணம் பெறச்செய்கின்றன.மேலும், நோயாளியின் உடலில் ஏற்படும் இரத்தக்கசிவு மற்றும் ரத்த உறைதல் உருவாக்கத்தை குறைப்பதையே லட்சியமாக கொண்டிருக்கின்றது.ஃபிளிபாடமி அதாவது நரம்புகளை வெட்டி அதிகமான இரத்தத்தை வெளியேற்றுதலை வழக்காமாக செய்வதின் மூலம் இரத்த அணுக்கள் திரண்டிருப்பதை தவிர்ப்பதற்காக செய்யப்படும் செயல்முறையாகும்.இந்நிலையை இரும்பு சத்துக்கான சப்ளிமெண்ட்களை வழங்குவதன் மூலம் ஆதரிக்கலாம்.இதற்கான சிகிச்சைமுறையில் கீமோதெரபி தவிர்க்கப்படுகிறது.வாழ்க்கை முழுவதும் மற்ற உறுப்புகளின் செயல்பாடுகள் கண்காணிக்கப்படுகிறது.