விந்து முந்துதல் - Premature Ejaculation in Tamil

Dr. Rajalakshmi VK (AIIMS)MBBS

December 10, 2018

March 06, 2020

விந்து முந்துதல்
விந்து முந்துதல்

சுருக்கம்

விந்து முந்துதல் (பி.இ) என்பது, ஒரு ஆண் விறைப்புத்தன்மையோடு தொடர்ந்திருக்க இயலாத, பாலியல் உடலுறவின் போது ஒரு நிமிடத்திற்கு முன்னால் அல்லது ஒரு நிமிடத்திற்குள் அவனுக்கு உச்சக்கட்டத்திற்கு காரணமாகிற ஒரு பாலியல் கோளாறு ஆகும். இந்த நிலைக்கு, அவரது துணையின் உறவில் எதிர்மறையான பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய, கணிசமான அளவு வெட்கமும் மன அழுத்தமும் காரணமாகின்றன. விந்து முந்துதல் முதன்மை (வாழ்நாள் முழுவதும்) அல்லது இரண்டாம் நிலையாக (பெறப்பட்டது) இருக்கக் கூடும். இந்த நிலைக்கான காரணங்கள் உடலியல்ரீதியானதாக, உளவியல்ரீதியானதாக அல்லது மரபியல்ரீதியானதாக இருக்கலாம். மன அழுத்த மேலாண்மை, மருந்துகள், உளவியல் ஆலோசனை மற்றும் உடற்பயிற்சிகள் போன்ற வேறுபட்ட சிகிச்சை மாதிரிகளின் சேர்க்கை நிலைமையை மேம்படுத்த உதவுகிறது. பலவித பிரச்சினைகள் உள்ள நபர்களுக்கு, சிகிச்சையில் ஏற்படும் பற்றாக்குறை, கணிசமான மன அழுத்தத்திற்கு வழி வகுக்கலாம். பல நேரங்களில், விந்து பெண்ணுறுப்புக்குள் நுழைவதில் தோல்வியடைவதால், இது கருத்தரித்தல் பிரச்சினைகளுக்கு காரணமாகிறது. பெரும்பாலான ஆண்களுக்கு விந்து முந்துதல், ஒருமுறை மருத்துவ உதவி பெறப்பட்ட பிறகு, வெற்றிகரமாக தீர்க்கப்பட இயலும்.

விந்து முந்துதல் அறிகுறிகள் என்ன - Symptoms of Premature Ejaculation in Tamil

டி.எஸ்.எம்-5இன் படி, ஒருவர் பின்வரும் அறிகுறிகளை உணர்ந்தால், அவருக்கு விந்து முந்துதல் இருக்கிறது என கூறப்படுகிறது:

 • பெண்ணுறுப்புக்குள் செலுத்திய ஒரு நிமிடத்திற்குள் விந்து வெளியேறுதல்.
 • ஆறு மாதங்கள் அல்லது அதற்கும் மேல் ஆரம்பத்திலேயே விந்து வெளியேறுதல் நீடிக்கும் ஒரு நிலை.
 • குறைந்தபட்சம் 75%லிருந்து 100% நேரங்களில் ஆரம்பத்திலேயே விந்து வெளியேறுதல்.
 • துணைகளிடையே உடலுறவில் திருப்தியின்மை, வெறுப்பு, மன இறுக்கம் மற்றும் மன அழுத்தம்
 • இந்த ஒரு நிலைக்கு கொண்டு செல்ல இயலும், ஒரு உளவியல் குறைபாடு அல்லது ஒரு மருத்துவ பிரச்சினை.
 • கடந்த காலங்களில் போதைப் பொருட்களின் மீதான ஈடுபாடும் அல்லது குறிப்பிட்ட மருந்துகளை எடுத்துக் கொள்வதும் விந்து முந்துதலுக்கு காரணமாக இருக்கலாம்.

விந்து முந்துதல் சிகிச்சை - Treatment of Premature Ejaculation in Tamil

சிகிச்சை தேர்வுகளில் , மனநல ஆலோசனை, மருந்துகள், நடத்தை உத்திகள் மற்றும் மேற்பூச்சு மயக்க மருந்துகள் கூட அடங்கும்.

 • ஆலோசனை மற்றும் பாலியல் சிகிச்சை
  ஆலோசனை என்பது, உங்கள் பாலியல் வாழ்க்கையில் உள்ள பிரச்சினைகளைப் பற்றி உங்கள் ஆலோசகருடன் வெளிப்படையாகவும் நேர்மையாகவும் செய்யும் உரையாடலோடு தொடர்புடையது. உங்கள் மருத்துவர் அல்லது ஆலோசகர் உங்களுக்கு செயல்பாட்டுப் பதற்றத்தையும் அதே போன்று மன அழுத்தத்தையும், சமாளிக்கும் உத்திகளையும் வழிகளையும் கற்றுக் கொடுப்பார். பாலியல் சிகிச்சை மற்றும் உறவுகள் பற்றிய ஆலோசனை, துணைகளுக்கு இடையே இணைப்பை மீண்டும் கொண்டு வர உதவுகிறது.
 • மருந்துகள்
  விந்து வெளியேறுதலைத் தாமதப்படுத்த உதவும் பலவகை மருந்துகள் பரிந்துரைக்கப்படலாம்.அவற்றுள் மன அழுத்த எதிர்ப்பிகள், வலிநிவாரணிகள் மற்றும் பாஸ்போடையஸ்டெரேஸ்- 5 தடுப்பிகள் ஆகியன அடங்கும். இந்த மருந்துகள் விந்து வெளியேறுதலைத் தாமதப்படுத்தும் பக்க விளைவுகளைக் கொண்டவை (இந்தக் காரணத்துக்காக எஃப்.டி.ஏ- யால் இவை அங்கீகரிக்கப்படாமல் இருந்தாலும்). உங்கள் மருத்துவர் இந்த மருந்துகளை தனியாகவோ அல்லது உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தைப் பொறுத்து வேறு குறிப்பிட்ட மருந்துகளோடு சேர்ந்தோ பரிந்துரைக்கலாம். சுயமாக மருந்துகள் எடுப்பது கடுமையான மருத்துவப் பிரச்சினைகளுக்கு காரணமாகக் கூடும், மேலும் மருத்துவரின் அறிவுறுத்தல் இல்லாமல் எந்த மருந்துகளையும் எடுத்துக் கொள்வதை ஒருவர் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்.
 • நடத்தை உத்திகள்
  பெரும்பாலான ஆட்களுக்கு, நடத்தையில் எளிய மாற்றங்கள் மூலம் விந்து முந்துதலைக் குணப்படுத்த முடியும். பெண்ணுறுப்பின் வழி உடலுறவைத் தவிர்த்து பாலியல் நெருக்கத்தின் மற்ற வடிவங்களில் கவனம் செலுத்தி, உங்கள் பாலியல் செயல்திறனால் ஏற்படும் அழுத்தத்தை அப்புறப்படுத்துவது இந்த நிலையில் பெரிய அளவில் உதவுவதாக அறியப்படுகிறது. உங்கள் மருத்துவர் விந்து வெளியேறுவதைக் கட்டுப்படுத்த வேறு வழிகளையும் பரிந்துரைக்கலாம்.
 • மேற்பூச்சு மயக்க மருந்துகள்
  உங்கள் மருத்துவர், ஆண்குறியை மரத்துப் போகச் செய்து, அதிக தூண்டுதலைத் தடுத்து, அதன் மூலம் விந்து வெளியேறுதலைத் தடுக்க, மயக்க மருந்து களிம்புகள் மற்றும் தெளிப்பான்களை பரிந்துரைக்கலாம். இந்தப் பொருட்கள், உடலுறவிற்கு 10 அல்லது 15 நிமிடங்களுக்கு முன்னர் தடவப்பட வேண்டியிருக்கலாம். இந்தத் தெளிப்பான்களில் சில மருந்துக் கடைகளில் கிடைக்கின்றன, மற்றவைகளுக்கு மருத்துவரின் பரிந்துரைச் சீட்டு தேவை. இந்த மருந்துகளில் பெரும்பாலானவை விந்து முந்துதலில் உதவினாலும், இந்தப் பொருட்களை பயன்படுத்திய பிறகு, ஆண்களுக்கும் பெண்களுக்கும் உணரும் திறனில் இழப்பு மற்றும் குறைவான பாலியல் இன்பம் போன்றவை தோன்றுவதாக அறிக்கைகள் கூறுகின்றன.
 • உடற்பயிற்சிகள்
  பலவீனமான இடுப்புத் தசைகள் விந்து முந்துதலுக்கு காரணமாவதால், இடுப்புத் தசைகளுக்கு பயிற்சியளிப்பது ஒருவரின் விந்து வெளியேறுவதை தாமதப்படுத்தும் திறனை மேம்படுத்த உதவுகிறது.
  • சரியான தசைகளைக் கண்டறிதல்
   தொடர்புடைய தசைகளைக் கண்டறிய, சிறுநீர் கழிக்கும் போது இடையில் நிறுத்தவும். இந்தத் தசை தான் விந்து வெளியேறுதலைக் கட்டுப்படுத்த உதவுகிறது. பொருந்தாத நேரத்தில் வாயு வெளியேறுவதைத் தடுக்க உதவும் தசைகளும் இந்தக் குறைபாட்டைக் கட்டுப்படுத்த உதவும்.
  • தசைகளுக்குப் பயிற்சியளித்தல்
   உங்கள் இடுப்புத் தசைகளை 3 முதல் 4 வினாடிகள் வரை சுருக்கி பின்னர் அவற்றைத் தளர்த்தவும். இந்தப் பயிற்சியை 4 முதல் 5 முறைகள் மறுபடி செய்யவும். உங்கள் தசைகள் வலிமையாக மாறியதும், பயிற்சிகளை தினமும் மூன்று முறை, ஒவ்வொரு முறையும் 10 தடவை திரும்ப செய்தல் என அதிகரியுங்கள்.
 • நிறுத்து-கசக்கு உத்தி
  இது விந்து முந்துதலில் உதவக்கூடிய ஒரு உத்தி. வழக்கம் போல் முன்விளையாட்டுக்களை ஆரம்பிக்கவும். உங்களால் விறைப்புத்தன்மையைக் கட்டுப்படுத்த முடியாமல் விந்து வெளியேறப் போவதாக நீங்கள் உணரும் பொழுது, விந்து வெளியேற்றும் உந்துதல் போகும் வரையில், உங்கள் துணையை, உங்கள் ஆண்குறியின் தலைப்பகுதி தண்டுடன் சேரும் இடத்தில் சில வினாடிகளுக்கு கசக்கிப் பிடிக்கச் செய்யுங்கள். உங்கள் துணைக்குள் விந்து வெளியேறாமல் நீங்கள் நுழையும் வரை, இந்த செயல்முறையை தேவைப்படும் அளவிற்கு மறுபடி மறுபடி செய்யவும். இறுதியாக, நீங்கள் உங்கள் விந்து வெளியேறுதலைக் கட்டுப்படுத்த பழகி விடுவீர்கள் மற்றும் விந்து வெளியேறுதலைக் கட்டுப்படுத்த இந்த உத்தியைப் பயன்படுத்த தேவை இருக்காது.
 • ஆணுறைகளைப் பயன்படுத்துதல்
  தடிமனான மூலப்பொருளால் செய்யப்படும் ஆணுறைகள், ஆணுறையின் உணரும் திறனை தாமதித்து, அதன் விளைவாக விந்து வெளியேறுதலை கட்டுப்படுத்து/தாமதப்படுத்துகிறது என அறியப்படுகிறது. குறிப்பிட்ட நாடுகளில் "உச்சகட்ட கட்டுப்பாட்டு" ஆணுறைகள் கடைகளில்கிடைக்கின்றன. இந்த ஆணுறைகள், உணர்திறனைக் குறைக்கும், மரத்துப் போகச் செய்யும் காரணிகளைக் கொண்டிருக்கின்றன.

சுய அக்கறை:

விந்து முந்துதல், பாலியல் வாழ்க்கையையும் உறவின் நெருக்கத்தையும் மோசமாக பாதித்து, ஜோடிகளை தூரமாக உணர வைக்கவும் மன அழுத்தத்தை ஏற்படுத்தவும் காரணமாகிறது. ஆண்களில் 3இல் 1 நபர் தங்கள் வாழ்க்கையில் சில நேரத்தில் விந்து முந்துதலை அனுபவிக்க நேர்ந்ததாக ஆய்வுகள் கூறுகின்றன. இந்த நிகழ்வுகளில் பெரும்பாலானவை ஒரு சில நேரங்களில் மட்டும் தோன்றி, தானாகவே நன்றாகி விடும்.

செயல்திறன் பதற்றம் மற்றும் மன அழுத்தம், பிரச்சினையை மேலும் மோசமாக்க முனைகின்றன. மனதையும் உடலையும் ஆசுவாசமாக வைத்துக் கொண்டு, பாலியல் அனுபவத்தை அனுபவிக்க முயற்சிப்பது உதவுகிறது. உங்களுக்கு விந்து முந்துதல் ஏற்பட்டாலும் கூட மன அழுத்தத்தைத் தவிர்ப்பது அறிவுறுத்தப்படுகிறது. உங்கள் துணையை திருப்திப்படுத்தி, நெருப்பை உயிர்ப்புடன் வைத்திருக்கவும், நெருக்கத்தைத் தக்க வைக்கவும், பல வழிகள் இருக்கின்றன என்பதை ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள். உங்களுக்கு உதவி தேவை என்று நீங்கள் நினைத்தால், ஒரு மருத்துவரின் உதவியை நாடத் தயங்க வேண்டாம்.

வாழ்க்கைமுறை மேலாண்மை

விந்து முந்துதல் உடலியல் மற்றும் உளவியல் இரண்டும் சார்ந்த, பல காரணிகளின் காரணமாக ஏற்படுகிறது. விந்து முந்துதல் ஏற்படுவதில் மன அழுத்தமும் செயல்திறன் பதற்றமும் முக்கிய இடம் வகிக்கின்றன. மன அழுத்த அளவுகளை சமாளிப்பதும், உங்கள் துணையுடன் வெளிப்படையான, நேர்மையான தகவல் பரிமாறிக் கொள்வதும் இந்த நிலையைக் கையாள்வதில் முக்கியமானது. உங்கள் வாழ்வில் மன அழுத்தத்தைக் குறைப்பது இந்த பிரச்சினையை சிறப்பான கோணத்தில் கையாள உதவுகிறது. நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், தைராய்டு பிரச்சினைகள் மற்றும் ப்ரோஸ்டேட் கோளாறுகள் போன்ற குறிப்பிட்ட வாழ்க்கைமுறை நோய்கள் இந்தப் பிரச்சினையில் பங்கு கொள்வதாக அறியப்படுகிறது, மேலும் இந்த நோய்களில் கவனம் செலுத்துவது இந்தக் குறைபாட்டைத் தடுக்கவும், சிகிச்சையளிக்கவும் உதவுகிறது. மேற்கோள்கள்

 1. Arie Parnham, Ege Can Serefoglu. Classification and definition of premature ejaculation. Transl Androl Urol. 2016 Aug; 5(4): 416–423. PMID: 27652214
 2. Dr Michael Lowy Premature Ejaculation. Healthy Male (Andrology Australia) May 2018; Auatralian Government; Department of Health
 3. Pekka Santtila, Patrick Jern, Lars Westberg, Hasse Walum, Christin T. Pedersen, Elias Eriksson, Nils Kenneth Sandnabba. The Dopamine Transporter Gene (DAT1) Polymorphism is Associated with Premature Ejaculation. 07 April 2010; Wiley Online Library
 4. Am Fam Physician. 2016 Nov 15;94(10):820-827. [Internet] American Academy of Family Physicians; Erectile Dysfunction.
 5. Health Harvard Publishing. Harvard Medical School [Internet]. Premature-ejaculation. Harvard University, Cambridge, Massachusetts.

விந்து முந்துதல் டாக்டர்கள்

விந்து முந்துதல் க்கான மருந்துகள்

Medicines listed below are available for விந்து முந்துதல். Please note that you should not take any medicines without doctor consultation. Taking any medicine without doctor's consultation can cause serious problems.

Lab Tests recommended for விந்து முந்துதல்

Number of tests are available for விந்து முந்துதல். We have listed commonly prescribed tests below: