சூடோமோனாஸ் நோய்த்தொற்றுகள் என்றால் என்ன?
சூடோமோனஸ் இன பாக்டீரியாக்களால் ஏற்படும் தொற்றுகள் சூடோமோனாஸ் நோய்த்தொற்றுகள் எனப்படுகின்றன. இந்த பாக்டீரியா பரவலாக சுற்றுச்சூழலில் இருப்பதால் இது ஒரு பொதுவான தொற்று உயிரினமாகிறது. சுமார் 200 சூடோமோனஸ் இன பாக்டீரியாக்கள் உள்ளன. ஆனால் மூன்று இனங்கள் மட்டுமே மனிதர்களில் நோயை ஏற்படுத்துகின்றன, அவை பி. ஏருஜினோசா, பி. மல்லேய், மற்றும் பி. சூடோமல்லேய் ஆகும். அனைத்து சூடோமோனஸ் இனங்களிலும், பி. ஏருஜினோசா பேக்டீரியா மனிதர்களில் ஏற்படும் தொற்றுநோய்களின் மிகப்பெரிய காரணியாகும்.
நோயின் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை?
சூடோமோனாஸ் நோய்த்தாக்கத்தின் அறிகுறிகள்,உடலில் எந்த அமைப்பு பாதிக்கப்பட்டிருக்கிறது என்பதை பொருத்தது:
- சிறுநீர் பாதை
சிறுநீரில் இரத்தம், எரிவது போன்ற உணர்வு, சிறுநீர் கழிக்கும்போது வலி மற்றும் மங்கலான / மேகமூட்டமான நிறத்தில் சிறுநீர். - காது
காது வலி, கேட்பதில் சிரமம், காதுகளில் இருந்து மஞ்சள் / பச்சை நிற திரவ வெளியேற்றம், மற்றும் காதுகளில் எரிச்சல் / அரிப்பு. - தொண்டை
தலைவலி, காய்ச்சல், தொண்டை புண், சரும வெடிப்பு, கழுத்தில் உள்ள லிம்ப் நோடுகளில் (நிணநீர்க்கணு) வீக்கம்.
நோய்தாக்குதலுக்கான முக்கிய காரணங்கள் என்ன?
கீழ்க்காணும் காரணங்கள் ஒரு நபருக்கு சூடோமோனாஸ் நோய்த்தொற்றை விளைவிக்கலாம்:
- அறுவை சிகிச்சை அல்லது தீயினால் உண்டாகும் காயங்கள்.
- சிறுநீர் வடிகுழாய் போன்ற சாதனங்களின் பயன்பாடு.
- சுவாசக் கருவியின் உதவியால் சுவாசிக்கும் நபர்கள்.
- ஒரு அடிப்படை நோய் அல்லது இம்யுனோசப்ரஸன்ட் சிகிச்சை காரணமாக நோயெதிர்ப்பு பலவீனமடைந்த நிலை.
இது எப்படி கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகிறது?
ஒரு விரிவான மருத்துவ வரலாறு மற்றும் உடல் பரிசோதனைக்குப் பிறகு, திசு பயோப்ஸி, முழுமையான இரத்த எண்ணிக்கை, மார்பக எக்ஸ்-கதிர்கள் சோதனை, சிறுநீர் மைக்ரோஸ்கோபி மற்றும் நோய்த்தொற்றின் வளர்ச்சி ஊடகம் ஆகிய சோதனைகள் தொற்று நோயை கண்டறிவதற்காக செய்யப்படுகின்றன. இந்த பாக்டீரியா தொற்றை கண்டறிவதில் பின்வரும் நோயறிதல் சோதனைகள் பயனுள்ளதாக இருக்கின்றன:
- ஃப்ளூரெஸ்சின் சோதனை
வுட்'ஸ் புற ஊதாக்கதிர் ஒளியில் பாதிக்கப்பட்ட பகுதி ஒளிரும். - பியோசியனின் உருவாக்கம்
பெரும்பாலான சந்தர்ப்பங்களில், பியோசியனின் உருவாகிறது, இது சீழுக்கு நீல-பச்சை நிறத்தை தருகிறது.
சூடோமோனஸ் நோய்த்தொற்றின் சிகிச்சைகள்:
- காயத்தின் நீக்க சிகிச்சை (இறந்த திசுக்களை நீக்குதல்).
- தடுப்பூசி மூலமாக இம்யுனோதெரபி.
- ஆண்டிபயாடிக்ஸ் போன்ற மருந்துகள். பின்வரும் ஆண்டிபயாடிக் மருந்துகள் பொதுவாக பரிந்துரைக்கப்படுகின்றன:
- கார்பெனிசிலின்.
- டோப்ராமைசின்.
- ஜென்டமைசின்.
- வெள்ளி சல்பாடியாசின்.
- சிப்ரோஃபிளாக்சசின்.
சூடோமோனாஸ் நோய்தொற்றை கீழ் கொடுக்கப்பட்டுள்ளவாறு தடுக்கலாம்:
- கிருமி அற்ற நிலையை பராமரித்தல்.
- முறையான தனிமைப்படுத்தல் நடைமுறைகளை கடைப்பிடித்தல்.
- கதீட்டர்கள் மற்றும் பிற மருத்துவ சாதனங்களை சுத்தமாக வைத்திருப்பது.
- மேற்பூச்சு ஆன்டிபாக்டீரியல் கிரீம்கள் மற்றும் களிம்புகளை கொண்டு காயங்களுக்கு சிகிச்சை அளித்தல்.