வாத கோளாறு (ருமாட்டிக் கோளாறு) என்றால் என்ன?
மூட்டுகள் மற்றும் இணைப்பு திசுக்களில் நிலைகளின் குழுக்களால் பாதிப்பேற்படுவதே ருமாட்டிக் கோளாறுகள் எனப்படுகிறது.இவை மூட்டுகளில் வலி, வீக்கம் மற்றும் விறைப்பு போன்றவைகளை ஏற்படுத்துகின்றன. சில வாத கோளாறுகள் தசைநாண்கள், தசைநார்கள், தசைகள் மற்றும் உள் உறுப்புக்கள் போன்ற மற்ற பகுதிகளிலும் பாதிப்பேற்படுத்துகின்றன. ஆட்டோ இம்யூன் நோய்களான சொரியாடிக் கீல்வாதம் மற்றும் லூபஸ் போன்றவைகளும் கூட ருமாட்டிக் கோளாறுகளின் கீழ் வருகின்றன.
இதன் முக்கிய அடையாளங்களும் அறிகுறிகளும் யாவை?
ருமாட்டிக் கோளாறுகளின் முக்கிய அடையாளங்கள் மற்றும் அறிகுறிகள் நோய் வகையினை சார்ந்தது.பெரும்பான்மையாக ஏற்படும் ருமாட்டிக் கோளாறுகளில் பொதுவாக காணப்படும் அறிகுறிகள் மற்றும் அடையாளங்களின் பட்டியல் பின்வருமாறு:
லூபஸ்.
- தலைவலி.
- நெஞ்சு வலி.
- காய்ச்சல்.
- வெளிச்சத்தினால் தோலில் ஏற்படும் உணர்திறன்.
- மூட்டுகளில் ஏற்படும் வீக்கம்.
- மூக்கு மற்றும் வாயில் ஏற்படும் புண்கள்.
- முடி உதிர்தல்.
- கண்களை சுற்றியுள்ள பகுதிகள், கால்கள், பாதங்கள் மற்றும் கைகளில் ஏற்படும் வீக்கம்.
- மூக்கு மற்றும் கன்னங்களுக்கு இடையே பாலம் போன்று இருக்கும் பகுதி முழுவதிலும் ஏற்படும் தடிப்பு.
முடக்கு வாதம்.
- பசியிழப்பு.
- குறைந்த தர காய்ச்சல்.
- மூட்டுகளில் ஏற்படும் அழற்சி.
- களைப்பு.
- மூட்டுகளில் உண்டாகும் வலி.
- இயக்கங்களில் ஏற்படும் சிரமம்.
ஸ்க்லரோடெர்மா.
- சருமத்தில் ஏற்படும் குறைபாடுகள்.
- காலையில் உடலில் ஏற்படும் விறைப்பு.
- சருமத்தில் மஞ்சள் நிற பேட்சுகள் மற்றும் உலர் பேட்சுகள் ஏற்படுதல்.
- இறுக்கமான, பளபளப்பான தோல்.
- பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஏற்படும் முடி இழப்பு.
- எடை இழப்பு.
- மூட்டுகளில் உண்டாகும் வலி.
சோகிரென்ஸ் நோய்க்குறி.
- வறண்ட கண்கள்.
- நிணநீர் சுரப்பிகளில் ஏற்படும் அழற்சி.
- டென்டல் தொற்றுநோய்கள்.
- லிம்போமா.
இதன் முக்கிய காரணங்கள் யாவை?
வாத கோளாறுகளின் முக்கிய காரணங்கள் மற்றும் ஆபத்து காரணிகள். பின்வருமாறு:
- அதிர்ச்சி.
- நோய்த்தொற்றுகள்.
- வளர்சிதை மாற்றத்தினால் ஏற்படும் பிரச்சினைகள்.
- சில ஹார்மோன்களினாளும் இந்நிலை ஏற்படலாம்.
- நரம்பு மண்டல பிரச்சனைகள்.
- மூட்டுகளில் ஏற்படும் அழற்சி.
- எலும்புகளின் முனைகளை பாதுகாக்கும் திசுக்களுக்கு ஏற்படும் சேதம்.
- மரபணுக்கள்.
- இனம்.
- நோயெதிர்ப்பு அணுக்களை அறிந்துகொள்வதில் உண்டாகும் சிக்கல்கள்.
- சுற்றுச்சூழல் மாசுபாடுகள்.
- பெண் பாலினம்.
- வயது.
இதன் கண்டறியும் முறை மற்றும் சிகைச்சையளிக்கும் முறை யாவை?
மருத்துவர் உடல் பரிசோதனை மேற்கொள்வதோடு மருத்துவ வரலாற்றை ஆராய்வதினால் அறிகுறிகளின் காரணத்தை கண்டறிந்து நோயை அடையாளம் கண்டுகொள்ளமுடியும்.டி.என்.ஏ, ஆர்.என்.ஏ. மற்றும் எதிர்ப்பு நியூட்ரோபில் ஆன்டிபாடிகள் போன்ற குறிப்பிட்ட ஆன்டிபாடிகளை காண இரத்த பரிசோதனைகள் மற்றும் பாதிக்கப்பட்ட மூட்டுகளில் இருந்து எடுக்கப்பட்ட திரவங்களுக்கான சோதனைகள் மேற்கொள்ளுமாறு கட்டளையிடலாம்.எலும்பில் காணப்படும் மாற்றங்களைக் கண்டறிய, மருத்துவர் மார்பக எக்ஸ்-கதிர்கள் மற்றும் எம்.ஆர்.ஐ. ஸ்கேன் ஆகியவற்றிற்கு பரிந்துரை செய்யலாம்.
வாத கோளாறுகளுக்கு பயன்படுத்தும் சிகிச்சை முறைகள் பின்வருமாறு:
- உடலியல் தெரபி.
- அழற்சியை குறைக்க கார்டிகோஸ்டீராய்டுகள் மற்றும் ஸ்டீராய்டல் அல்லாத எதிர்ப்பு அழற்சி மருந்துகள் (NSAID கள்).
- யோகா.
- அறுவை சிகிச்சை.
- நோயினை-மாற்றும் ருமேடிக் எதிர்ப்பு மருந்துகள் (டி.எம்.ஏ.ஆர்.டி.கள்).
- மாற்றம் செய்யப்பட்ட உடற்பயிற்சி திட்டங்கள்.
- வலி நிவாரணிகள்.