உமிழ்நீர் சுரப்பி சிக்கல்கள் என்றால் என்ன?
உமிழ்நீர் சுரப்பிகள் உமிழ்வை உருவாக்கி, வாய்க்குள் அதை வெளியிடுகின்றன.வாயில் உள்ள பல சிறிய சுரப்பிகளில் மூன்று முக்கிய உமிழ்நீர் சுரப்பிகள் உள்ளன.அவை பின்வருமாறு:
- கன்னச் சுரப்பி (பராடிட் சுரப்பி) - இது காதுக்கு முன் கன்னத்தில் அமைந்துள்ளது.அதின் நாளம் மேல் உள்ள கடை வாய்ப்பல் அருகே முடிகிறது.
- கீழ் தாடை சுரப்பி - இந்த சுரப்பிகள் தாடைக்கு கீழே அமைந்திருக்கும், அவற்றின் நாளங்கள் கீழே உள்ள முன் பற்கள்ளுக்கு பின்னால் அமைந்திருக்கும்.
- கீழ்நாக்குச் சுரப்பி (அடிநாக்கு சுரப்பி) - இது நாக்கு கீழே அமைந்துள்ளது மற்றும் இது வாயின் மேல்பரப்பில் உமிழ்வை வெளியீடும்.
இந்த சுரப்பிகள் சேதமடைந்தால் அல்லது உமிழ்நீர் சுரக்காதிருந்தால், அது உமிழ்நீர் சுரப்பி சிக்கல்களுக்கு வழிவகுக்கிறது.உமிழ்நீர் உற்பத்தி அதிகப்படியாகவோ, தேவைக்குறைந்தோ அல்லது முற்றிலுமாக இல்லாமலும் இருக்கலாம்.
நோயின் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை?
உமிழ்நீர் சுரப்பி சிக்கல்கள் சுரப்பியில் எரிச்சலை உண்டாக்கி பின்வரும் அறிகுறிகளை விளைவிக்கின்றன.
- வாயில் மோசமான சுவை.
- வாய் வறண்டு போதல்.
- வாய் திறப்பதில் சிரமம்.
- முகத்தில் வலி.
- முகம் அல்லது கழுத்து அல்லது நாக்கின் கீழே வீக்கம்.
- உமிழ்நீர் இல்லாமை.
- அதிக உமிழ்நீர் சுரப்பது.
நோய் தாக்குதலுக்கான முக்கிய காரணங்கள் என்ன?
உமிழ்நீர் சுரப்பி சிக்கல்கள் பின்வரும் காரணங்களினால் ஏற்படலாம்.
- உமிழ்நீர் நாளக்கல் - கால்சியம் கற்கள் உருவாகின்றன, இது நாளங்களை தடுக்கிறது மற்றும் வீக்கத்தை ஏற்படுத்துகிறது.
- உமிழ்நீர் குழாய் வீக்கம் - சுரப்பியில் ஏற்பட்டுள்ள நோய்த்தொற்று நாளங்களை அடைத்துவிடுகிறது.
- சளி காய்ச்சல் வைரஸ், காக்ஸாக்கி வைரஸ், பொன்னுக்கு வீங்கி, எக்கோ வைரஸ் மற்றும் சைட்டோமெகலோ வைரஸ் போன்ற வைரஸ்கள் சுரப்பிகளை பாதிக்கின்றன.
- ச்ஜோரென்ஸ் நோய்க்குறி.
- மூன்றில் ஏதாவது ஒரு சுரப்பியில் புற்றுநோய் மற்றும் புற்றுநோய் அல்லாத கட்டிகள்.
இது எப்படி கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகின்றது?
உங்கள் மருத்துவர் முழுமையாக உங்கள் வாயை பரிசோதிப்பார் மற்றும் எக்ஸ்ரே மூலமாக சுரப்பி நாளங்களில் ஏதேனும் அடைப்புகள் உள்ளதா என்பதை கண்டறிவார்.விரிவான தகவல்களுக்கு காந்த அதிர்வு விம்பங்கள் (எம்.ஆர்.ஐ) மற்றும் சிடி ஸ்கேன் தேவைப்படலாம்.வாய்வழி அறுவை சிகிச்சை நிபுணர் பின்னர் பாதிக்கப்பட்ட பகுதிக்கு மயக்க மருந்து கொடுத்து, உமிழ்நீர் நாளங்களில் இருக்கும் அடைப்பை அறுவை சிகிச்சை மூலமாக நீக்குவார்.தன்னுடல் தாக்கு நோய் இருக்கும் பட்சத்தில், மருத்துவர் நோய்கண்டறிதலுக்கு உதவும் பொருட்டு பாதிக்கப்பட்ட சுரப்பியின் திசுப் பரிசோதனை மேற்கொள்வார்.
அமைப்புமுறை நோயின் மூலமாக இந்த சிக்கல் ஏற்பட்டால், அந்த நோய்க்கு முதலில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.புற்று நோயற்ற கட்டிகள் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்படுகின்றன.புற்றுநோய் கட்டிகளுக்கு அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்ட பிறகு கதிரியக்க சிகிச்சை தேவைப்படுகிறது.