அக்கி - Shingles in Tamil

Dr. Ayush PandeyMBBS,PG Diploma

May 12, 2019

March 06, 2020

அக்கி
அக்கி

அக்கி என்றால் என்ன?

அக்கி என்பது ஒரு வைரஸ் காரணமாக ஏற்படும் தொற்றுநோய் ஆகும்,இது தோலின் மீது உள்ள நன்கு-வரையறுக்கப்பட்ட பகுதியில் கொப்புளங்கள் அல்லது தடிப்புகளுக்கு வழிவகுக்கிறது.இது சின்னம்மை நோய்க்கு காரணமான வரிசெல்லா சோஸ்டர் வைரஸ் காரணமாக ஏற்படுகிறது.இந்த வைரஸின் உள்ளார்ந்த தொற்றின் மறுசெயலாக்கத்தின் காரணமாக அக்கி ஏற்படுகிறது.ஒருவர் சின்னம்மை நோயிலிருந்து குணமடைந்த பிறகு, அந்த வைரஸ் நரம்புத் திசுக்களில் செயலாற்ற நிலையில் இருக்கும்.பின்னர், அவை மறுசெயலாக்கத்தின் மூலம் அக்கி நோயாக வெளிப்படும்.

நோயின் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை?

ஆரம்ப தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் பின்வருமாறு:

தாமதமான தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் பின்வருமாறு:

  • ஒரு பகுதியில் அல்லது உடலின் ஒரு புறத்தில் சிவப்பு நிற தடிப்புகள் (பொதுவாக, உடலின் ஒரு புறத்தில் தடிப்புகள் ஏற்படுகின்றன.இது பலவீனமான நோயெதிர்ப்புத்திறன் உள்ள சில நிகழ்வுகளில் பரவலாக காணப்படுகிறது).
  • சிறிய திரவம் நிரப்பப்பட்ட கொப்புளங்கள் திரள்வு, இது உடைந்து பின்னர் செதில்களாக மாறிவிடுகிறது.

மற்ற அறிகுறிகள் பின்வருமாறு:

குறைவான நோய் எதிர்ப்புத்திறன் காரணமாக கடுமையான சந்தர்ப்பங்களில் ஏற்படும் அறிகுறிகள் பின்வருமாறு:

  • சின்னம்மை நிலையைப் போல் பரவலான வடுக்கள் மற்றும் கொப்புளங்கள்.
  • கண் பாதிக்கப்படலாம், இது பார்வை இழப்பிற்கு வழிவகுக்கலாம்.
  • பாக்டீரியா தோல் நோய்த்தொற்றுகள்.

நோய்தாக்குதலுக்கான முக்கிய காரணங்கள் என்ன?

ஹெர்பேஸ் வைரஸ்கள் என்று அழைக்கப்படும் வைரஸ் வகையில் ஒன்றான வரிசெல்லா சோஸ்டர் வைரஸ் காரணமாக அக்கி ஏற்படுகிறது.

முன்பு சின்னம்மை நோயிலிருந்து மீண்டு வந்த நபர்களில் அக்கி நோய் ஏற்படுகிறது.இந்த வைரஸ் நரம்புத் திசுக்களில் செயலற்று இருந்து, பின்னர் குறைந்த நோயெதிர்ப்புத்திறன் உள்ள நிலைகளில், மாறுசெயல்பாட்டின் காரணமாக பல ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஏற்படுகிறது.

வயதானவர்கள், எச்.ஐ.வி அல்லது புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் அல்லது நீண்ட காலத்திற்கு ஸ்டெராய்டுகள் போன்ற சில மருந்துகளை எடுத்துக் கொள்பவர்கள் போன்ற குறைந்த நோயெதிர்ப்புத்திறன் கொண்ட நபர்களிடத்தில் அக்கி மிகவும் பொதுவானது.

இது எப்படி கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகிறது?

நோயாளியின் வரலாறு மற்றும் கவனமாக உடல் பரிசோதனையின் அடிப்படையில் அக்கி நோய் கண்டறியப்படுகிறது.

திசு வளர்ப்பு ஊடகம் அல்லது கொப்புளத்திலிருந்து எடுக்கப்படும் மாதிரியின் வளர்ச்சி ஆகியவை இதில் அடங்கும்.

இது பொதுவாக ஒரு சில வாரங்களுக்குள் இயற்கையாகவே குணமடைந்துவிடும்.அக்கி நோய்க்கு தடுப்பூசி உள்ளது மற்றும் அக்கி நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அருகில் உள்ள குழந்தைகள் மற்றும் கவனிப்பாளர்களுக்கு அக்கி பரவாமலிருக்க இந்தத் தடுப்பூசி பரிந்துரைக்கப்படலாம்.

மருந்துகள்: வேகமாக குணப்படுத்த மற்றும் அறிகுறிகளைக் குறைப்பதற்காக வைரஸ் எதிர்ப்பு மருந்துகள் பரிந்துரைக்கப்படலாம். ஓபியாய்ட் டெரிவேடிவ்ஸ், பாராசிட்டமால், இப்யூபுரூஃபன் மற்றும் ஸ்டீராய்டுகள் போன்ற வலி நிவாரணிகள் பயன்படுத்தப்படலாம்.

சுய பாதுகாப்பு:

  • குளிர் அழுத்தங்கள்.
  • காலமின் களிம்பின் பயன்பாடு.
  • ஓட்மீல் குளியல்.
  • முன்னர் சோஸ்டர் வைரஸால் பாதிக்கப்படாத நபர்களுடன் தொடர்பைத் தவிர்க்கவும், ஏனென்றால் அவர்களுக்கு சின்னம்மை வடிவில்  தொற்றுநோய் பரவுவதற்கான வாய்ப்பு உள்ளது.



மேற்கோள்கள்

  1. National Institute of Neurological Disorders and Stroke [internet]. US Department of Health and Human Services; Shingles Information Page.
  2. Center for Disease Control and Prevention [internet], Atlanta (GA): US Department of Health and Human Services; Transmission.
  3. Center for Disease Control and Prevention [internet], Atlanta (GA): US Department of Health and Human Services; Prevention & Treatment.
  4. National Health Service [Internet] NHS inform; Scottish Government; Shingles.
  5. Longo DL, et al., eds. Varicella-Zoster Virus Infections. In: Harrison's Principles of Internal Medicine. 19th ed. New York, N.Y.: McGraw-Hill Education; 2015.
  6. National Institute of Neurological Disorders and Stroke [internet]. US Department of Health and Human Services; Shingles: Hope Through Research.

அக்கி க்கான மருந்துகள்

Medicines listed below are available for அக்கி. Please note that you should not take any medicines without doctor consultation. Taking any medicine without doctor's consultation can cause serious problems.