சுருக்கம்
சைனஸ் (புரையழற்சி) என்பது, மூக்கை சுற்றியுள்ள எலும்புகளில் உள்ள வெற்று காற்று இடைவெளிகள், எ.கா. குழிவுகள், வீங்கியிருக்கிற ஒரு பொதுவான பிரச்சினையாகும். கன்னங்கள், நெற்றி மற்றும் கண்களை சுற்றி இருப்பவற்றையும் , மூக்கோடு இணைக்கப்பட்ட மற்றும் ஒஸ்டியா எனப்படும் ஒன்றுக்கொன்று குறுகிய பாதையை உடைய, மூக்கை சுற்றி இருப்பவற்றையும் உள்ளடக்கியவை குழிவுகள் ஆகும். குழிவுகள், உள்ளே இழுக்கப்பட்ட காற்று நுரையீரலுக்குள் நுழைவதற்கு முன்னால், ஈரப்பதப்படுத்தப்படுவதில் ஒரு முக்கியப் பங்கு வகிக்கின்றன. குழிவுகளின் செல் உள்வரிப் பூச்சுகள், சளியை உற்பத்தி செய்து, நோய்த்தொற்றுகளைத் தடுக்கும் விதமாக, உள்ளே இழுக்கப்பட்ட மாசு மாற்று தூசி துகள்களைப் பிடித்துக் கொள்கின்றன. சைனஸ் (புரையழற்சி)யின் முக்கியக் காரணங்கள் சாதாரணமான ஜலதோஷம் மற்றும் ஒவ்வாமைகள் ஆகும். இது, ஒரு நோய்த்தொற்றினாலும் ஏற்படக் கூடும் மற்றும் வழக்கமாக இரண்டு முதல் மூன்று வாரங்களுக்குள் குணமாகி விடும். மூக்கடைப்பு, தலைவலி மற்றும் வீங்கிய முகம் ஆகியன பொதுவான அறிகுறிகளாகும். சைனஸ் (புரையழற்சி)யில் பல்வேறு வகைகள் இருக்கின்றன. ஒருவேளை, அது தானாகவே சரியாக நீண்ட நாட்களை எடுத்துக் கொண்டால், சிகிச்சைகள் தேவைப்படுகின்றன. நிறைய திரவங்கள், நீராவியை உள்ளிழுத்தல் மற்றும் மற்றவை நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகளோடு பரிந்துரைக்கப்படுகின்றன.