தூக்கமின்மை - Sleep Deprivation in Tamil

Dr. Nadheer K M (AIIMS)MBBS

May 13, 2019

March 06, 2020

தூக்கமின்மை
தூக்கமின்மை

தூக்கமின்மை என்பது என்ன?

தூக்கமின்மை என்பது போதுமான தூக்கம் இல்லாத ஒரு நிலை, இது பல காரணங்களால் ஏற்படுகிறது. இது ஒரு நோய் அல்ல, ஆனால் இது பல்வேறு நோய்கள் அல்லது தூக்கம அமைப்பை தொந்தரவு செய்யும் வாழ்க்கை சூழ்நிலைகளால் ஏற்படக்கூடிய ஒரு அறிகுறி ஆகும்.தூக்கமின்மை ஏராளமான ஆரோக்கிய பிரச்சினைகளை ஏற்படுத்தலாம் மற்றும் ஆரம்பத்திலேயே திருத்தப்பட வேண்டிய ஒன்றாகும்.

நோயின் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை?

தூக்கமின்மை காரணமாக தோன்றும் முக்கிய அறிகுறிகள் பின்வருமாறு:

  • தூக்கத்தில் சிரமம்.
  • எரிச்சலூட்டும் நடத்தை.
  • கவனக்குறைவு.
  • அதிகாலையில் எழுவது.
  • அடிக்கடி பகலில் தூங்குதல்.
  • எழுந்த பிறகு புத்துணர்ச்சி இல்லாமல் இருப்பது.
  • சிந்தித்தல் மற்றும் முடிவெடுப்பதில் தடுமாற்றம்.
  • குறட்டை.

பொதுவாக காணப்படும் ஐந்து தூக்கம் சம்பந்தப்பட்ட கோளாறுகள் பின்வருமாறு:

  • அயர்ந்து தூங்குவது கடினம் அல்லது தூக்கமின்மை.
  • சுவாச அடைப்பு அல்லது தூக்கத்தில் மூச்சுத்திணறல்.
  • அதிகபடியாக பகல் நேர தூக்கம் அல்லது துயில் மயக்க நோய் (நார்கோலெப்ஸி).
  • அமைதியற்ற கால் நோய்க்குறி காரணமாக கட்டுப்பாடற்ற கால் இயக்கங்கள்.
  • விரைவான கண் இயக்கம் காரணமாக தூக்கத்தில் கோளாறு.

நோய் தாக்குதலுக்கான முக்கிய காரணங்கள் என்ன?

உளைவுற்ற தூக்க முறைக்கு பல காரணங்கள் உள்ளன.அதில் முக்கியமானவை பின்வருமாறு:

இது எப்படி கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகிறது?

தூக்க முறையின் வரலாற்றைப் பற்றி உங்கள் மருத்துவர் சில கேள்விகளைக் கேட்கலாம் மற்றும் இரவில் உங்கள் தூக்க அத்தியாயங்களை பற்றி உங்கள் குடும்ப உறுப்பினர்களைக் கேட்கலாம்.தூக்க முறையை சரிபார்க்க ஒரு தூக்க நாட்குறிப்பை பராமரிக்கவேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படலாம், இதன் மூலம் கொடுக்கப்பட்ட தகவலைப் பொறுத்து உங்கள் நோய் நிலையைக் கண்டறிய முடியும்.

தூக்கமின்மை தூக்க மருந்துகளால் நிர்வகிக்கப்படலாம், ஆனால் இவை செயல்படாத பட்சத்தில், கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றை போன்ற மருந்தில்லா சிகிச்சை முறைகளை பயன்படுத்தலாம்.

சுய பாதுகாப்பு குறிப்புகள்

  • உங்களை ஆசுவாசப்படுத்திக்கொண்டு, ஒரு தூக்க அமைப்பு முறையை கற்றுக்கொள்ளுங்கள்.
  • எல்லா மின்னணு சாதனங்களையும் அணைத்துவிட்டு, உங்கள் படுக்கையிலிருந்து அவற்றை தூரமாக வையுங்கள்.
  • தூக்கத்தை மேம்படுத்த ஆசுவாசப்படுத்தும் முறைகளை தழுவுதல்.
  • ஒரு குறிப்பிட்ட நேரத்தில் படுக்கைக்குச் செல்வதும், எழுந்திருப்பதும் என  ஒரு தூக்க கால அட்டவணையை பராமரிக்கவும்.
  • ஒரு மிதமான சிற்றுண்டி அல்லது பால் குடிப்பது தூக்கத்திற்கு உதவும்.
  • படுக்கைக்குச் செல்வதற்கு முன்பு, கனமான இரவு உணவு மற்றும் அதிகப்படியான திரவங்களை உட்கொள்ள வேண்டாம்.
  • உங்கள் படுக்கையில் கைப்பேசி அல்லது மடிக்கணினிகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும், அவைகள் உங்கள் தூக்கத்தை பாதிக்கலாம்.
  • மாலையில் தேநீர் மற்றும் காபி அருந்துவது, புகைப்பிடித்தல் அல்லது குடிப்பழக்கத்தை தவிர்க்க வேண்டும்.
  • தூக்க மாத்திரைகளை சார்ந்து இருப்பதை குறைத்தல்.
  • தூக்கத்தை தவிர படுக்கை அறையில் குறிப்பாக படுக்கையில் வேறு எதையும் செய்யாமல் இருத்தல்.



மேற்கோள்கள்

  1. UCSF Benioff Children's Hospital [Internet]. University of California San Francisco; Tips for a Better Night's Sleep.
  2. UCSF Benioff Children's Hospital [Internet]. University of California San Francisco; Insomnia.
  3. National Center for Complementary and Integrative Health [Internet]. Bethesda (MD): U.S. Department of Health and Human Services; Sleep Disorders .
  4. MedlinePlus Medical Encyclopedia: US National Library of Medicine; Insomnia.
  5. Department of Neurology [Internet]. Columbia University Irving Medical Center, New York; Sleep Deprivation.
  6. Cleveland Clinic. [Internet]. Cleveland, Ohio. Causes of Sleep Problems.